Published:Updated:

வந்து குவிந்த புகார்கள்... திணறிய அதிகாரிகள்... வேகமெடுக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்!

வந்து குவிந்த புகார்கள்... திணறிய அதிகாரிகள்
பிரீமியம் ஸ்டோரி
வந்து குவிந்த புகார்கள்... திணறிய அதிகாரிகள்

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களாகிய எங்களின் கட்டுப்பாட்டில்தான் கோயில் இருந்தது.

வந்து குவிந்த புகார்கள்... திணறிய அதிகாரிகள்... வேகமெடுக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்!

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களாகிய எங்களின் கட்டுப்பாட்டில்தான் கோயில் இருந்தது.

Published:Updated:
வந்து குவிந்த புகார்கள்... திணறிய அதிகாரிகள்
பிரீமியம் ஸ்டோரி
வந்து குவிந்த புகார்கள்... திணறிய அதிகாரிகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குகளைக் காட்டுவதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில், அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை நிதானமாக மேற்கொண்டுவருகிறது இந்து சமய அறநிலையத்துறை!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில், கோயிலை ஆய்வுசெய்வதற்காக ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் தங்களது அதிகாரிகளின் குழுவை அனுப்பியது இந்து சமய அறநிலையத்துறை. ஆனால், ‘இந்து அறநிலையத்துறையால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று தெரிவித்த தீட்சிதர்கள், ஆய்வுக்குழுவினரிடம் கணக்கு வழக்குகளைக் காட்டவும் மறுத்துவிட்டனர். இதையடுத்து ‘சிதம்பரம் கோயில் குறித்த கருத்துகளை எங்களுக்குத் தெரிவிக்கலாம்’ என்று பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது இந்து சமய அறநிலையத்துறை. அதனடிப்படையில் ஜூன் 21, 22 இரண்டு நாள்களும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் புதுப்பாளையத்திலிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் மனுக்களுடன் குவிந்தனர். தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமாக மனுக்களும் குவிய ஆரம்பித்ததால் திணறித்தான் போனார்கள் அதிகாரிகள். முதல் நாளில் மட்டும் நேரிலும் மின்னஞ்சல் மூலமும் சுமார் 4,000 மனுக்களும், மொத்தமாக 6,628 மனுக்களும் வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது இந்து அறநிலையத்துறை.

வந்து குவிந்த புகார்கள்... திணறிய அதிகாரிகள்... வேகமெடுக்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்!

மனு கொடுக்க வந்திருந்த சோழ மன்னர்களின் வம்சாவளியைச் சேர்ந்த ஜமீன் பாளையக்காரர் ராஜா சூரப்பா சோழகனாரிடம் பேசினோம். “100 ஆண்டுகளுக்கு முன்பு வரை சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களாகிய எங்களின் கட்டுப்பாட்டில்தான் கோயில் இருந்தது. சோழர் பரம்பரையைச் சேர்ந்த எங்களை நடராஜர் திருக்கோயில் பஞ்சாட்சரப் படியில் அமரவைத்து பட்டாபிஷேகமும், முடிசூட்டுவிழாவும் செய்யும் வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. கோயில் எங்களுக்குத்தான் சொந்தம் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரத்தைக் கூற முடியாது. இந்தக் கோயில், தீட்சிதர்களுக்கு தானம் கொடுக்கப்பட்டதாகவோ, அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்றோ எந்த செப்புப் பட்டயமோ, கல்வெட்டு ஆதாரமோ இல்லை. சில பணக்காரர்களுடன் இணைந்து கோயிலின் மாண்பை தீட்சிதர்கள் கொச்சைப்படுத்திவருகின்றனர். அதனால் இந்து அறநிலையத்துறை, தீட்சிதர்களிடமிருந்து கோயிலை மீட்க வேண்டும்” என்றார் கொதிப்போடு.

ராஜா சூரப்பா
ராஜா சூரப்பா

திருவொற்றியூர் வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் ஜெகசுந்தரி பாலமுருகன், “500 பொதுமக்கள், பக்தர்களின் மனுக்களுடன் அவர்களின் பிரதிநிதியாக நாங்கள் வந்திருக்கிறோம். மன்னர்கள் கட்டிய அனைத்துக் கோயில்களும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நடராஜர் கோயிலை மட்டும் தனியார் கோயில் என்று எப்படிக் கூற முடியும்... அதனால் தமிழ்நாடு அரசு உடனே சிறப்புச் சட்டத்தை இயற்றி, அந்தக் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்தால்தான், எங்களைப் போன்ற பக்தர்கள் இறைவனை நிம்மதியாக வழிபட முடியும்” என்றார்.

ஜெகசுந்தரி
ஜெகசுந்தரி

இது குறித்துப் பேச இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவைத் தொடர்புகொண்டோம். “பொதுமக்களிடம் கருத்து கேட்டிருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்குழுவின் அறிக்கை வந்தவுடன், அதனடிப்படையில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

மக்களின் கருத்துகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்!