கொரோனா சூழலிலும், தமிழகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடந்திருக்கின்றன. ‘அதிகாரிகள் இந்த நேரத்தில் கண்டு கொள்ளமாட்டார்கள்’ என்று திட்டமிட்டு, பள்ளிக் குழந்தையையும் மணமகளாக அலங்கரித்து, இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் பெற்றோர்.

ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 25-ம் தேதியிலிருந்து ஜூலை 21-ம் தேதி வரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 81 மைனர் திருமணங்களை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள், சமூக நலத்துறை அதிகாரிகள். இவற்றில், 18 வயது நிரம்பாத ஆண் பிள்ளை களுக்கும் அவசர அவசரமாகத் திருமணம் செய்திருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சிக்குக் காரணம்.

வேலூர் சமூக நலத்துறை அதிகாரிகள், ‘‘ஜனவரி மாதத்திலிருந்து கணக்கெடுத்தால் இதுவரை 110 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். ‘ஊரடங்கில் செலவு மிச்சமாகிறது’ என்று ஏழாவது, எட்டாவது படிக்கும் பெண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தைகளை மணமுடிக்கும் ஆண்களின் வயது 30-ல் இருந்து 40 வயது வரை இருக்கிறது. வசதியானவர் என்ற ஒரே காரணத்தால் வயதானவர்களுக்கு, பெற்றோரே பெண் குழந்தைகளை `திருமணம்’ என்ற பெயரில் விற்றுவிடுகிறார்கள்.

9-ம் வகுப்பு மாணவி ஒருவரை நெக்னா மலைக்கு அழைத்துச் சென்று கஞ்சா வியாபாரிக்குத் திருமணம் முடித்துள்ளனர். இரவோடு இரவாகத் தப்பி வந்த அந்த மாணவி, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில், ஜாதகப் பொருத்தம் இல்லாததால், 9-ம் வகுப்பு மாணவிக்கு பதிலாக 7-ம் வகுப்பு படிக்கும் அவரின் தங்கையைத் திருமணம் செய்து கொடுத்தனர் பெற்றோர். 18 வயதுகூட ஆகாத இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் ஊரடங்கில் திருமணம் நடந்திருக்கிறது.

கணவரைப் பிரிந்து வாழும் 28 வயதுடைய பெண்ணுக்கும், 17 வயது சிறுவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடக்கவிருந்தது. நகை, பணம், வீடு, கார் கொடுப்பதாகப் பெண் வீட்டார் கூறியதால், திருமணத்துக்கு `ஓகே’ சொல்லியிருக்கிறார் சிறுவனின் தந்தை. இந்தத் திருமணம் குறித்து சிறுவனின் தாய் நேரடியாக எங்களிடம் புகார் கூறினார். அங்கு சென்ற எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணக்கோலத்தில் இருந்த சிறுவன் எங்களிடம் சண்டைக்கு வந்தான். ‘நான் அந்தப் பெண்ணை விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்கிறேன்’ என்று அடம் பிடித்தான். ‘21 வயது பூர்த்தியாகாமல் திருமணத்தை நடத்தினால், மணமகளைக் கைதுசெய்வோம்’ என்று எச்சரித்த பிறகே திருமணத்தை நிறுத்தினார்கள்.

இதேபோல், வட்டிக்குத் தொழில் செய்யும் பெண் ஒருவர், 18 வயதுடைய தன் மகனுக்கு 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைத்துள்ளார். தகவலறிந்து சென்றபோது சில வழக்கறிஞர்கள் ஆஜராகி எங்களை மிரட்டினார்கள். பல மைனர் திருமணங்களில் அரசியல்வாதிகளின் தலையீடும் அதிகமாக இருக்கிறது. காவல் நிலையங்களுக்கு வரும் சில புகார்களும் மூடி மறைக்கப்படுகின்றன’’ என்றனர் குமுறலாக.

வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம், ‘‘பொருளாதார நிலைதான் மைனர் திருமணங்கள் அதிகரிக்கக் காரணம். ‘சொந்தம் விட்டுப் போகக் கூடாது’ என்பதாலும் சிறு வயதிலேயே திருமணம் செய்கிறார்கள். பெண் குழந்தைகளைப் பாதுகாக்க ‘விழித்திரு கண்ணே’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் பள்ளிதோறும் நடத்திவருகிறோம். ‘சிறு வயதில் திருமணம் செய்வதால் உடல்நிலை சீர்கெடும். படிப்புதான் முக்கியம். வீடு, சுற்றுப்புறத்தில் பாலியல் சீண்டல்களைச் சந்தித் திருந்தால் தயங்காமல் சொல்லலாம்’ என்று ஒரு பாக்ஸை வைத்து விடுவோம். பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் மனு போட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம்.

‘1098’ ஹெல்ப்லைன் நம்பரை மனதில் பதிய வைக்கிறோம். இந்த வருடம் 10 சிறுமிகள் ஹெல்ப் லைனுக்கு போன் செய்து, தங்களுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினர். தொடர் விடுமுறையிலிருக்கும் பெண் குழந்தைகளின் லிஸ்ட்டையும் கேட்டிருக்கிறோம். ‘ஏன் அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை. திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதா?’ என்று தீவிரமாக விசாரிக்கிறோம்.

சுகாதாரத்துறையிலும் டெலிவரிக்கு வரும் பெண்களின் ‘ஹை ரிஸ்க்’ லிஸ்ட்டைக் கேட்டுள்ளோம். 30, 40 வயது பெண்களுக்கும், டீன் ஏஜில் கர்ப்பமடையும் பெண்களுக்கும் மட்டுமே பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும். அவர்களின் விவரங்களை ஹை ரிஸ்க் லிஸ்ட்டில் பதிவு செய்வார்கள். கடந்த வருட லிஸ்ட்டை ஆய்வு செய்தபோது, 154 மைனர் திருமணங்கள் கவனத்துக்கு வராமல் ரகசியமாக நடந்திருப்பது தெரியவந்தது. அதன்படி, இந்த ஆண்டு 150 முதல் 200 மைனர் திருமணங்கள் நடக்க வாய்ப் பிருப்பதாகக் கணக்கிட்டு, மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

திருமண மண்டபம், கோயில்களில் `மணமகளின் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்யாமல் திருமணத்துக்கு அனுமதிக்கக் கூடாது’ என்று கட்டளையிட்டுள்ளோம். மீறி மைனர் திருமணம் நடைபெற்றால், மண்டபங்களின் பில்டிங் லைசென்ஸை நிரந்தரமாக ரத்து செய்யவும் ஆவண செய்திருக்கிறோம்’’ என்றார்.

வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா, ‘‘இது மிகமிக ஆபத்தான போக்கு. இதனாலும் பெண்களுக்குதான் பாதிப்பு அதிகம். மைனர் சிறுவனுக்குத் திருமணம் செய்துவைத்து, அவனுக்கு 21 வயது ஆன பிறகு வேறொரு பெண்ணை அவன் திருமணம் செய்தால் அவன்மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. இதுபோன்ற சிக்கல்களைப் புரிந்துகொண்டு பெண்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதைப் பெற்றோர்களும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.