Published:Updated:

இதயம் ‘இல்லாத’ டிரஸ்ட்! - மிரளவைக்கும் மதுரை குழந்தைகள் விற்பனை

மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை

கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் வறுமையில் சிரமப்பட்ட ஒரு பெண்ணை இதயம் டிரஸ்ட் காப்பகத்தில் சேர்த்தேன்

இதயம் ‘இல்லாத’ டிரஸ்ட்! - மிரளவைக்கும் மதுரை குழந்தைகள் விற்பனை

கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் வறுமையில் சிரமப்பட்ட ஒரு பெண்ணை இதயம் டிரஸ்ட் காப்பகத்தில் சேர்த்தேன்

Published:Updated:
மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை

‘‘ஆதரவற்ற குழந்தைகளை, குழந்தை இல்லாதவர்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னது ஒரு தவறா?’’ என்று கேட்டு, காவல்துறை அதிகாரிகளை அதிரவைத்திருக்கிறார் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கும் மதுரை ‘இதயம் டிரஸ்ட்’ இயக்குநர் சிவக்குமார். இந்தச் சம்பவத்தில், சட்டவிரோத காப்பகம், குழந்தைகள் விற்பனை, போலி மரணச் சான்றிதழ் என்று வரிசையாகக் கிளம்பும் `பகீர்’ தகவல்களால் அதிர்ந்துகிடக்கிறது மதுரை மாநகரம்.

சிவக்குமார் விருது வாங்கியபோது
சிவக்குமார் விருது வாங்கியபோது

மதுரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். செஞ்சிலுவைச் சங்கம் உட்பட சில தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியவர், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ‘இதயம் அறக்கட்டளை’ அமைப்பைத் தொடங்கினார். முதியோர், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் அவரின் பணிகளைப் பார்த்து, பலரும் சிவக்குமாரைப் பாராட்டத் தொடங்கினார்கள். தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறை குடியிருப்பிலுள்ள ஒரு கட்டடத்தை, காப்பகம் நடத்துவதற்காக சிவக்குமாருக்கு வழங்கியது. மாநகராட்சி சார்பிலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அவருக்கு அலுவலகம் வழங்கப்பட்டது. இயற்கைப் பேரிடர், கொரோனா ஊரடங்கு உட்பட மாவட்ட நிர்வாகம் நடத்தும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களிலும் சிவக்குமாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தநிலையில்தான், சிவக்குமார் மீது குழந்தைகள் விற்பனைப் புகார் கிளம்பியுள்ளது.

மேலூரைச் சேர்ந்த அசாருதீன் என்பவர்தான் இந்த விவகாரத்தை வெளியில் கொண்டுவந்திருக்கிறார். அவர் நம்மிடம், ‘‘சிவக்குமார் செய்துவரும் சேவைகளை அறிந்து, கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் வறுமையில் சிரமப்பட்ட ஒரு பெண்ணை இதயம் டிரஸ்ட் காப்பகத்தில் சேர்த்தேன். இந்தநிலையில், அந்தப் பெண்ணின் ஒரு வயது குழந்தை, கடந்த ஜூன் 29-ம் தேதி கொரோனாவால் இறந்துவிட்டதாக இறப்புச் சான்றிதழையும், மயானத்தில் புதைக்கப்பட்ட படத்தையும் சிவக்குமார் எனக்கு அனுப்பியிருந்தார்.

இதயம் ‘இல்லாத’ டிரஸ்ட்! - மிரளவைக்கும் மதுரை குழந்தைகள் விற்பனை

எனக்குத் தெரிந்த ஒருவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னபோது, அவர் அரசு மருத்துவமனையில் விசாரித்துவிட்டு ‘ஒரு வயது குழந்தை எதுவும் மருத்துவமனையில் இறக்கவில்லை’ என்று என்னிடம் சொன்னார். அதிர்ச்சியடைந்த நான், சிவக்குமார் அனுப்பிய ஆவணங்களை ஆராய்ந்தபோது, அவை போலி என்று தெரிந்தது. உடனே, கலெக்டரிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் புகார் செய்தேன். போலீஸ் விசாரணையில் மயான ரசீது போலி என்பதும், வேறொரு குழந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு, இந்தக் குழந்தையின் தாயை அழைத்துவந்து சடங்குகள் செய்ததும் தெரியவந்தது.

போலீஸார் விசாரணையைத் தொடங்கியதும், சிவக்குமாரும் அவரின் உதவியாளர் மதர்ஷாவும் தலைமறைவாகிவிட்டார்கள். மற்றொரு உதவியாளர் கலைவாணியிடம் விசாரித்தபோது, இந்த ஒரு வயது குழந்தையுடன், மற்றொரு குழந்தையும் விற்பனை செய்யப்பட்ட விஷயமும் தெரிந்து, அந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அதேசமயம், காப்பகத்திலிருந்து மேலும் 18 குழந்தைகள் மாயமாகியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்’’ என்றார்.

இதயம் டிரஸ்ட் மீது தொடர்ந்து புகார் அனுப்பிவந்த வழக்கறிஞர் முத்துக்குமார், ‘‘காவல்துறை குடியிருப்பிலிருக்கும் கட்டடத்திலுள்ள காப்பகத்திலிருந்துதான் குழந்தைகளை சிவக்குமார் விற்பனை செய்திருக்கிறார். ஆதரவற்றவர்களை மீட்டுப் பாதுகாக்க வேண்டியது சமூகநலத்துறையின் கடமை. இப்படி அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழித்து, இது போன்ற டிரஸ்ட்டுகளை வளர்த்திருக்கிறார்கள். மாவட்டத்திலுள்ள குழந்தைகள் பாதுகாப்பு யூனிட், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, பெண்கள் - குழந்தைகள் கடத்தல் தடுப்பு காவல்துறை ஆகியவையும் அனுமதியில்லாத காப்பகம் செயல்படுவதைக் கண்டுகொள்ளாமல் அதைப் பிரபலப்படுத்தியுள்ளனர். இதையெல்லாம் தனது கிரிமினல் வேலைகளுக்கும், நன்கொடை வசூலிக்கவும் முதலீடாக சிவக்குமார் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் செல்வாக்கில் வளர்ந்தவர் சிவக்குமார் என்பதால், இந்த வழக்கை உள்ளூர் போலீஸார் விசாரிப்பது சரியாக இருக்காது’’ என்றார்.

இது பற்றி விளக்கம் அளித்த மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், ‘‘சட்ட விரோதக் காப்பகம் பற்றித் தொடர்ந்து விசாரித்துவருகிறோம். அதில் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் கண்டிப்புடன்.

அசாருதீன், முத்துக்குமார்
அசாருதீன், முத்துக்குமார்

இதற்கிடையே சிவக்குமாரை போடியில் வைத்து ஜூலை 3-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தியபோது, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பேசியிருக்கிறார். ‘‘ஆதரவற்ற குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்பதால், குழந்தையில்லாத வசதியானவர்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னது தவறா? நாங்கள், குழந்தைகளைக் கடத்தினோமா... இல்லை தவறாகப் பயன்படுத்தினோமா? பணத்துக்காக இதைச் செய்யவில்லை. அவர்களாகத்தான் டிரஸ்ட் அக்கவுன்ட்டில் பணம் போட்டார்கள். காப்பகத்துக்குத் தண்ணீர் கேன் சப்ளை செய்த ராஜா, செஞ்சிலுவைச் சங்கத்தில் வேலை செய்த செல்வி ஆகியோர்தான் புரோக்கர்களாகச் செயல்பட்டார்கள். நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை’’ என்று கேஷுவலாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் சிவக்குமார்.

உயர் நீதிமன்றம் தலையிட்டால்தான் இந்த வழக்கில் உண்மைகள் வெளிவரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism