Published:Updated:

`அந்த தம்பி இறந்துட்டான்னு அம்மா சொன்னாங்க!'- சுஜித் விழுந்த குழியைப் பார்த்து கலங்கிய குழந்தைகள்

சுஜித் வில்சன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சிறுவர்கள்
சிறுவர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த 25-ம் தேதி மாலை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தை சுஜித் வில்சன் இன்று சடலமாக மீட்கப்பட்டான். அவனின் உடல் திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சொந்த ஊரான நடுக்காட்டுப்பட்டியை அடுத்துள்ள பாத்திமா புதூர் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

சிறுவர்கள்
சிறுவர்கள்

இதேபோல் நடுக்காட்டுப்பட்டி சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் பலரும் பள்ளிக்குச் செல்லாமல் பாதிக்கப்பட்ட சிறுவன் வீட்டுக்கு வந்து அவர் தவறி விழுந்த ஆழ்துளைக்கிணறு சிமென்ட் கலவை போட்டு மூடப்பட்ட நிலையிலும்கூட அந்தக் கிணற்றின் அருகே வந்து கண்ணீரோடு கையெடுத்துக் கும்பிட்டு வணங்கிச் செல்கிறார்கள்.

`உலகைவிட்டு பிரிந்த சுர்ஜித்!'  குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது? #LiveUpdate

குழந்தை சுஜித் வில்சன் விழுந்த ஆள்துளைக் கிணறு அருகே சோகத்தோடு நின்றுகொண்டிருந்த கருங்குளத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்கிற எட்டாம் வகுப்பு மாணவனிடம் பேசினோம். ``சுஜித் வில்சன் எங்களுக்கு ஒரு வகையிலான உறவுதான். அவன் குழாயில் விழுந்த தகவல் கேட்டு அப்பா அம்மாவுடன் வந்து பார்த்தேன். எப்படியாவது பிழைத்துக்கொள்வான் என நினைத்தோம். கடந்த மூன்று நாள்களாக வந்துவந்து பார்த்துச் சென்றேன். இன்று காலை தூங்கி எழுந்ததும் அந்தத் தம்பி இறந்துவிட்டான்னு அம்மா சொன்னாங்க. வந்து பார்த்தால் மொத்த இடமும் அமைதியா இருக்கு. சுஜித் கிடந்ததாக சொல்லப்படும் இடத்தில் சிமென்ட் கொண்டு மூடியிருக்கிறார்கள். இப்படி ஆகும் எனக் கனவில்கூட நினைக்கவில்லை'' என்றபடி தன் தம்பியை ஆரத் தழுவினான்.

அவர்களைப் போல நாங்களும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றிவிட மாட்டார்களா என்கிற நம்பிக்கையில் இங்கு இருக்கும் குப்பைகளை அள்ளி வந்தோம்.
துப்புரவு பணியாளர் சித்ரா

அந்தப் பகுதியில் துப்புரவுப் பணிகள் பணியாளராக பணியாற்றி வந்த சித்ரா, ``கடந்த மூன்று நாள்களாக இந்தப் பகுதியில் துப்புரவுப் பணி செய்கிறோம். இன்று காலை வரை குழந்தையைக் காப்பாற்றி விடுவார்கள் என்கிற நம்பிக்கையில் இந்தப் பகுதியைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து போனார்கள். அவர்களைப் போல நாங்களும் அந்தக் குழந்தையைக் காப்பாற்றிவிட மாட்டார்களா என்கிற நம்பிக்கையில் இங்கு இருக்கும் குப்பைகளை அள்ளி வந்தோம். இப்படி ஆகும் என கனவில் கூட நினைக்கவில்லை'' எனக் கலங்கினார்.