Published:Updated:

2K kids: வாழை நாரில் வண்ணங்கள்... சின்னாளப்பட்டி பட்டின் வசீகரம்!

பட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டு

ஹரிஹரன்.ரா

காஞ்சிப்பட்டு, பனாரஸ்பட்டு, ஆரணிப்பட்டு, திருபுவனம் பட்டு போன்ற பிரபல பட்டு வகைகள் பற்றி அறிந்த நம்மில் சிலருக்கு, சின்னாளம்பட்டி பட்டு பற்றித் தெரிவதில்லை. அந்தப் பட்டு நெசவாளர் விஸ்வநாதன், அது பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...

‘`திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி தான் என் சொந்த ஊரு. இப்போ தஞ்சாவூர்ல இருக்கேன். எங்க முப்பாட்டன், பாட்டன், அப்பா, நான்னு எல்லாருக்கும் நெசவுதான் தொழிலு. எங்க மூதாதையர் வடநாட்டைச் சேர்ந்தவங்க. காசிப் பகுதியில இருந்து பிழைப்புத் தேடி, எங்க மக்கள் தென்னிந்தியா பக்கம் வந்தாங்களாம். பல குடும்பங்கள் பெங்களூருவுல குடியேறி வாழ்ந்திருக்காங்க. அங்கயிருந்து பிரிஞ்சு எங்க குடும்பங்கள் பல ஊர்கள்லேயும் குடியேற, நாங்க தமிழ்நாட்டுல, திண்டுக்கல் மாவட்டத்துல இருக்குற சின்னாளப்பட்டியில் குடியேறி னோம். அங்க நெசவ எங்க தொழிலா ஆக்கிக்கிட்டோம்.

2K kids: வாழை நாரில் வண்ணங்கள்... சின்னாளப்பட்டி பட்டின் வசீகரம்!
2K kids: வாழை நாரில் வண்ணங்கள்... சின்னாளப்பட்டி பட்டின் வசீகரம்!

சின்னாளப்பட்டி நெசவுல சின்னாளப் பட்டி பட்டும், சுங்குடிச் சேலைகளும் பிரபலம். நாங்க முன்ன நெய்தது எல்லாம் சின்னாளப்பட்டி பட்டுதான். அதை வாழை நார் பட்டுனும் சொல்லுவாங்க. காஞ்சிப் பட்டுபோல, இது பட்டுப்பூச்சியில இருந்து எடுக்குற நூலுல செய்யுற பட்டு இல்ல. வாழை மர தண்டுகள்ல இருந்து வாழை நாரை பிரிச் செடுத்து, கண்ணைப் பறிக்குற சாயங்கள், முந்தானையில நூல் வேலைப்பாடுகள்னு சின்னாளப்பட்டி பட்டு தனித்துவமா இருக்கும். பொதுவா காஞ்சிப் பட்டுப் புடவையை, தண்ணியில அலசமாட்டாங்க. ஆனா, இதை தண்ணியில அலசினாலும் நூல் பாதிக்கப் படாது. சின்னாளப்பட்டி பட்டுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாம, இந்தியா முழுக்க நல்ல வரவேற்பு இருந்தது. வெளிநாடுகளுக்குக்கூட ஏற்றுமதி செய்யப்பட்டுச்சு. வருஷம் முழுக்க நெசவு நடக்கும். ஆனா, ஏறுமுகமா நடந்துட்டு இருந்த தொழில்ல ஒரு தடங்கல் வந்து விழுந்துச்சு. 1950-ம் வருஷத்துக்கு அப்புறம் வந்த பஞ்சத்துல, பொழப்புத் தழப்பெல்லாம் நாசமாபோச்சு. விளைச்சல் இல்ல. பஞ்சத்துல அடிபட்ட எங்க குடும்பம், ரயிலேறி தஞ்சாவூர் போய், கூலிவேலை பார்த்து, தொட்டிக் கஞ்சி காய்ச்சிக் குடிச்சோம். நெசவுத் தொழில் நசிஞ்சுக்கிட்டே வந்துச்சு. பட்டு நெய்ய முடியல. எங்களுக்கு வேற தொழிலும் தெரியாது. அதனால, சுங்குடி சேலைய நெய்ய ஆரம்பிச்சோம். அது பருத்திப் புடவை. பருத்தில இருந்து நூல் எடுத்து, முதல்ல வெள்ளத் துணியா நெய்வோம். அந்தத் துணியில சாயம் ஏத்தி, டிசைன் போடுவோம். அதுதான் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை. அதுவும் ரொம்பப் பிரபலம் இப்போவரை.

2K kids: வாழை நாரில் வண்ணங்கள்... சின்னாளப்பட்டி பட்டின் வசீகரம்!
2K kids: வாழை நாரில் வண்ணங்கள்... சின்னாளப்பட்டி பட்டின் வசீகரம்!

காலம் போகப் போக, இந்தத் தொழில்ல கைத்தறிக்கு பதிலா மெஷின் தறிகள் வந்தது. கூடவே, ஆலைகள்ல பெரிய பெரிய தறிமெஷின் வெச்சு நெய்ய ஆரம்பிக்க, கைத்தறிகளை நம்பியிருந்த குடும்பங்கள் எல்லாம் நலிவடைஞ்சு போச்சு. சிலர் சொசைட்டியில இருந்து நூல் வாங்கி துணியா நெய்து சொசைட்டியிலேயே கொடுத்துடுவாங்க. பலரும் குடும்பத்தைக் காப்பாத்த வேற வேற வேலைகள், தொழில்கள் செய்யக் கிளம் பிட்டாங்க. சின்னாளப்பட்டி பட்டு உற்பத்தியும் பெருமையும் தேய்ஞ்சுக் கிட்டே வருது.

 விஸ்வநாதன்
விஸ்வநாதன்

எனக்கு இப்போ 75 வயசாகுது. ஜவுளி வியாபாரம் செய்றேன். என் பசங்க, பொண்ணுங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. ஆனாலும், என் நெசவுப் புள்ள சவலப்புள்ளையா இருக்குற குறைதான் மனசுல மருகிக்கிட்டே இருக்கு. பன்னாட்டு தொழிற்சாலைகள் எல்லாம் நம்ம நாட்டுல வந்து நல்லா சம்பாதிக் கிறாங்க. நம்ம கைத்தறியையும், தறி நெசவாளர் களையும் கைதூக்கிவிட அரசு உரிய கவனம் கொடுக்கணும்!”

- நூலில் ரேகை தேய்ந்த உள்ளங்கைகள் கூப்பிச் சொல்கிறார் விஸ்வநாதன்.