Published:Updated:

` மகள் திருமணத்தை தேவாலயத்தில் நடத்த அனுமதிக்கவில்லை!'- ஊர் கட்டுப்பாட்டால் போராடிய தொழிலாளி

ஜி.சதாசிவம்
எஸ்.தேவராஜன்

ஊர் கட்டுப்பாட்டால் தேவாலயத்தில் மகள் திருமணம் நடத்தவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூலித் தொழிலாளி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

church
church

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள ஆர்.சி. கோயிலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் (47). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து மாப்பிள்னை பார்த்து திருமணம் ஏற்பாடு செய்துள்ளார். நேற்று முன்தினம் மகள் திருமணத்தை வீராரெட்டிக்குப்பத்தில் உள்ள தேவாலயத்தில் நடத்த தேவாலய பங்குத் தந்தை மைக்கேல் துரைராஜிடம் அனுமதிக் கடிதம் கேட்டுள்ளார்.

Officers are investigating
Officers are investigating

ஆனால், பங்குத் தந்தை ஊர் கட்டுப்பாட்டின்படி தன்ராஜ் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருப்பதால், கடிதம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திமடைந்த தன்ராஜ் தனது உறவினர்களுடன் தேவாலய வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்த ஊ.மங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தன்ராஜ் கூறுகையில், ``கடந்த ஜூலை மாதம் என்னை ஆர்.சி. கோயிலாங்குப்பத்தைச் சேர்ந்த சிலர் ஊர் பஞ்சாயத்துக்கு வருமாறு அழைத்தனர். நான் எதற்காக அழைக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் நான் பஞ்சாயத்துக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக பஞ்சாயத்தார் எனது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர்.

Dhanraj
Dhanraj

இந்த நிலையில், என் மகளுக்குத் திருமணத்தை தேவாலயத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். ஒரு சிலர் வேண்டும் என்றே என் மகள் திருமணத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்காக வீராரெட்டிக்குப்பம் ஆலய பங்குத் தந்தையிடம் எனது குடும்பத்தைப் பற்றி தவறாகக் கூறியுள்ளனர். அவரும் சரியாக விசாரிக்காமல் தேவாலயத்தில் திருமணம் நடத்த அனுமதிக் கடிதம் தர மறுத்துவிட்டார். இது குறித்து ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். என் மகள் திருமணத்தை நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.

Vikatan

இது குறித்து எதிர்தரப்பைச் சேர்ந்த தேவசகாயம் என்பவர் கூறுகையில், ``ஊரில் வரி வசூல் செய்வதில் பிரச்னை ஏற்பட்டு பஞ்சாயத்துக்கு அழைத்ததற்கு தன்ராஜ் தரப்பினர் வரவில்லை. எங்களை மதிக்காதவர்கள் திருமணத்தில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை.

Devasahayam
Devasahayam

மற்றபடி அவர் கூறியதுபோல் பங்குத் தந்தை கடிதம் கொடுக்காமல் இல்லை. கடிதம் கொடுத்து அவரின் மகளின் திருமணமும் நன்றாக முடிந்துவிட்டது. வழக்கை திசை திருப்ப வேண்டும் என்றே பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருகிறார்'' என்று கூறினார்.