`சுட்டி விகடன்' நடத்திய ‘தஞ்சை 200 - ஊரைத் தெரிஞ்சுக்கிட்டோம்!' போட்டியில் 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, அக்டோபர் 19 அன்று தஞ்சாவூரிலுள்ள மத்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தின் (IIFPT) அரங்கில் நடைபெற்றது. சுட்டி விகடன் - தஞ்சை மீனாட்சி மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, IIFPT இயக்குநர் முனைவர் அனந்தராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டினன், மீனாட்சி மருத்துவமனை குழந்தைகள்நல மருத்துவர் கார்த்திக், EGS பிள்ளை பொறியியல் கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் மாணவ மாணவிகளுக்குப் பரிசளித்தனர். தஞ்சாவூர் தாமரை இன்டர்நேஷனல் பள்ளியினர், பள்ளிகளுக்கிடையேயான சிறப்புக் கோப்பையை வென்றார்கள். இந்தப் போட்டியில், அரசுப் பள்ளி மாணவர்கள் - குறிப்பாக, பெண் குழந்தைகள் அதிகம் பங்குபெற்றது விழாவுக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇயந்திரப் பொறியியலில் பெண்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இந்நிலையை மாற்ற வேண்டும். பெண்களுக்கு உகந்ததில்லை என எதுவுமில்லை!
சிறப்புரையாற்றிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்த முதலமைச்சர் யார் என மாணவர்களிடம் கேட்டார். 'கர்மவீரர் காமராஜர்' என மாணவர்களின் கோரஸ் பறக்க, பாராட்டிய ஆட்சியர்... தான் சிறுவயதில் இதற்கு தவறான விடையளித்த தைப்பற்றி பகிர்ந்துகொண்டார்.

``உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா மிக பின்தங்கிய நிலையில் உள்ளதைக் குறிப்பிட்டு, உணவை வீணாக்காமல் உண்ணும் பழக்கத்தை மாணவர்கள் கற்க வேண்டும்'' என்றார் IIFPT இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.ராமகிருட்டினன், ``மாணவர்களான நீங்கள் பாடப் புத்தகத்தை மட்டுமல்லாது பொது அறிவை வளர்த்துக்கொள்ள அத்தனை விஷயங்களையும் தேடிப் படியுங்கள். சுட்டி விகடனின் இந்தப் போட்டி, பொது அறிவைப் பெருக்கிக்கொள்ள திடமான வாய்ப்பு'' என்று பாராட்டினார்.

மருத்துவர் கார்த்திக், மாணவர்களுக்கு டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சில குறிப்புக்களை வழங்கிப் பேசினார்.
``மாணவிகள் இதேபோல எல்லா களங்களிலும் துணிந்து இறங்க வேண்டும். உதாரணமாக இயந்திரப் பொறியியலில் பெண்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இந்நிலையை மாற்ற வேண்டும். பெண்களுக்கு உகந்ததில்லை என எதுவுமில்லை'' என உற்சாகப்படுத்தினார் EGS பிள்ளை பொறியியல் கல்லூரியின் சந்திரசேகர்.

வெற்றிக்கோப்பையும் தன்னம்பிக்கையுமாக மாணவ மாணவிகள் புறப்பட்டனர்!