தமிழகத்தின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவர் கவின்கேர் குழுமத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன். இவருடைய நீண்டநாள் கனவுத் திட்டம், செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கி நடத்துவது. அவருடைய கனவு அண்மையில் நனவாகியிருக்கிறது.

சென்னை அடையாரில் ‘சாஞ்சூ’ (Sanchu) என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தச் சிறப்பு மருத்துவமனை குறித்துப் பேசினார் சி.கே.ரங்கநாதன்.

“ `சாஞ்சூ’ என்ற செல்லப்பிராணிகளுக்கான மருத்துவமனையைத் தொடங்குவது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் அர்த்தமுள்ள, மனநிறைவைத் தரும் ஒன்று. எனக்குச் சிறு வயதிலிருந்தே செல்லப்பிராணிகள் என்றால் உயிர். என் நண்பர்களாகவே அவற்றைப் பார்க்கிறேன். பறவை வளர்ப்பில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால், பல வகைப் பறவைகளை வளர்த்துவருகிறேன்.

எனக்கு நெருக்கமான இந்த உயிர்களுக்குச் சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி பெற முழுமையான மருத்துவமனை வேண்டும் என்று தேடினேன். பல நிபுணர்களைச் சந்தித்தேன். அப்போதுதான் `இந்த சேவையைத் தரத் தொடங்கினால், செல்லப்பிராணிகள் வளர்க்கும் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்குமே...’ என்று தோன்றியது. ஆனால், இதற்குத் தெளிவான முன் ஆராய்ச்சி வேண்டுமென்பதால் இதைச் செயல் வடிவத்துக்குக் கொண்டுவரச் சற்றே கால அவகாசம் தேவைப்பட்டது’’ என்றார் ரங்கநாதன்.

இது சாதாரண கால்நடை மருத்துவமனை போன்றதல்ல. மனிதர்களுக்கிருக்கும் பல்நோக்கு மருத்துவமனையைப்போலவே, வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவமனையை மேற்பார்வை செய்துவரும் சந்தீப்பிடம் பேசினோம்.

‘‘நரம்பியல், இதயவியல், எலும்பியல், உள் மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி என அனைத்துத் துறைகளுக்கும் இந்த மருத்துவமனையில் தனித்தனிப் பிரிவுகள் இருக்கின்றன. இந்தப் பிரிவுகளில் தனித்தனி மருத்துவ நிபுணர்களும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.

மருத்துவ வசதிகள் போக ஸ்பா, சலூன் எனப் பல வசதிகளும் இந்த மருத்துவ மனையில் இருக்கின்றன!

எக்ஸ்ரே, அல்ட்ராசோனோகிராபி, இ.சி.ஜி., அனஸ்தீஸியா பிரிவு என உயர்தர லேப் வசதிகளும் இங்கே இருக்கின்ரன. இதுபோக, உள்நோயாளி, வெளிநோயாளிப் பிரிவுகள், ஆபரேஷன் தியேட்டர், சிகிச்சையின்போது செல்லப்பிராணிகளுடன் உரிமையாளர்கள் தங்குவதற்கான டீலக்ஸ் அறைகள் எனப் பல வசதிகள் இருக்கின்றன’’ என்கிறார் சந்தீப்.

வருடத்தின் அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் இந்த மருத்துவமனை இயங்குமாம். மருத்துவ வசதிகள் போக ஸ்பா, சலூன், செல்லப்பிராணிகளுக்கான சூப்பர் மார்க்கெட் என இன்னும் பல வசதிகளும் இந்த மருத்துவமனையில் இருக்கின்றன. செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து இணையத்தில் ட்ராக் செய்யும் வசதி, அவற்றை மருத்துவமனைக்கு அழைத்துவர ‘பெட் டாக்ஸி’ வசதி எனப் பல வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குழந்தைகள் தினத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால், பல இன நாய்களுடன் சிறுவர்கள் நடந்துவரும் `ராம்ப் வாக்’ நிகழ்ச்சியும் நடந்தது. இந்த மருத்துவமனை தரப்பில், `செல்லப்பிராணிகள் எதுவாக இருந்தாலும் சராசரியான கட்டணத்தில் அவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதே எங்கள் நோக்கம்’ என்கிறார்கள்.

‘‘இது ஒரேயொரு மருத்துவமனையாக நின்று விடாமல், உலகமெங்கும் இதற்குப் பல கிளைகள் ஆரம்பிக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு’’ என்று மருத்துவமனை தொடக்க விழாவில் பேசினார் சி.கே.ரங்கநாதன். கனவு பலிக்கட்டும்!