Published:Updated:

சாத்தான்குளம்: அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவு! -பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கும் முதல்வர்?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

'நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் வழக்கு விசாரணை நடைபெற்றுவருவதால், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது' என்கிறார்கள், ஜெயராஜ் குடும்பத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

சிபிசிஐடி போலீஸார், இந்த வழக்கில் அதிக அக்கறை எடுத்து விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், காவல் நிலையம், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டிவருகிறார்கள்.

சாத்தான்குளம்: ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பு!  -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிக்கிய பின்னணி

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் வழங்கினார்கள். 

அ.தி.மு.க சார்பாக நிதி வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ
அ.தி.மு.க சார்பாக நிதி வழங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

அரசு சார்பாக உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 20 லட்சம் ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அரசு அறிவித்த நிதியையும் அரசு வேலைக்கான உத்தரவையும் வழங்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு, தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியிருப்பதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நேரில் வந்து அரசின் உதவிகளை வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 4-ம் தேதி (சனிக்கிழமை) சாத்தான்குளத்துக்கு நேரில் வந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. அதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

சாத்தான்குளம்: ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பு!  -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிக்கிய பின்னணி

முதல்வரின் வருகை குறித்து உயிரிழந்த ஜெயராஜின் மைத்துனர் தாவீதிடம் கேட்டதற்கு, “தற்போது நடந்துவரும் விசாரணை சரியான திசையில் செல்வதுபோல இருக்கிறது. தொடர்ந்து இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணித்து, என் மைத்துனர் மற்றும் மருமகன் இறப்புக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். 

தாவீது
தாவீது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்கள் குடும்பத்தை சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அரசு வேலைக்கான உத்தரவு தொடர்பாகவும் அதிகாரிகள் பேசினார்கள். மைத்துனர் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி விஜயவாடாவில் இருக்கிறார். அவரது கணவரின் சொந்த ஊர் புளியங்குடி என்பதால், பெர்சிக்கு தென்காசியில் அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு