Published:Updated:

நீலகிரி: இலவசமாக வழங்கவிருந்த 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்; தேர்தல் கண்காணிப்புக்குழு நடவடிக்கை

பரிசுப் பொருள்கள்

நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஜெயலலிதா பிறந்தநாள் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுவரும் சர்ச்சையைத் தொடர்ந்து, இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி: இலவசமாக வழங்கவிருந்த 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்; தேர்தல் கண்காணிப்புக்குழு நடவடிக்கை

நீலகிரியில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஜெயலலிதா பிறந்தநாள் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுவரும் சர்ச்சையைத் தொடர்ந்து, இலவச கோழிக்குஞ்சுகள் வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பரிசுப் பொருள்கள்

ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. பொதுமக்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள், விலையில்லா பொருள்களை வழங்கக் கூடாது என்பதும் முக்கிய விதி.

தேர்தல்t
தேர்தல்t

ஆனால், நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே, நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்களை வழங்கிய ஆளுங்கட்சியினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு, பரிசுப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும், விதிமுறைகளை மீறி ஆளுங்கட்சியினர் சார்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுவருவதாக புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலையில்லா கோழிக்குஞ்சுகளை வீடு வீடாக வழங்கி வந்திருக்கிறார்கள். இதை அறிந்த எதிர்க்கட்சியினர், தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தனர். நேரில் சென்று ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் 4,500 கோழிக்குஞ்சுகளைப் பறிமுதல் செய்து பண்ணைகளுக்கே திருப்பி அனுப்பிவைத்தனர்.

கோழிக்குஞ்சுகள்
கோழிக்குஞ்சுகள்

ஆளுங்கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கவே இவை கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர், ``ஒரு குடும்பத்துக்கு 25 கோழிக்குஞ்சுகள் வீதம், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கவே தற்போது கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இந்த கோழிக்குஞ்சுகள் கொண்டுவரப்பட்டன. தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் திருப்பி அனுப்பிவிட்டோம்" என்றார்.

இது குறித்துப் பேசிய எதிர்க்கட்சியினர், ``தேர்தல் நடத்தை விதிமுறைகளை கட்சியினருக்குச் சொல்லித்தர வேண்டிய அரசு அதிகாரிகளே தேர்தல் விதிகளை மீறி இலவசமாக கோழிக் குஞ்சுகளை வழங்கியது விந்தையாக இருக்கிறது"என்கின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கோழிக் குஞ்சுகள்
பறிமுதல் செய்யப்பட்ட கோழிக் குஞ்சுகள்

``விதிகளை மீறி மக்களுக்கு இலவசமாக கோழிக்குஞ்சுகளை வழங்கிய செயலில் தொடர்புடைய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மற்றொரு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.