Published:Updated:

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!
பிரீமியம் ஸ்டோரி
எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

கோ.சௌந்தர்யா

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

கோ.சௌந்தர்யா

Published:Updated:
எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!
பிரீமியம் ஸ்டோரி
எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

தமிழ் சினிமாவுல பல இசையமைப்பாளர்களும் கேம்பஸ் ஏரியாவை குறிவெச்சுதான் மியூஸிக் நோட்ஸ் எழுதுறாங்க. இப்போ இருக்குற ட்ரெண்டுல கல்லூரி மாணவர்களின் ஃபேவரைட் லிஸ்ட்ல இருக்குற இசையமைப்பாளர்கள் யார், யார்?

சென்னை, இராணி மேரி கல்லூரி மாணவிகள்கிட்ட எடுத்த ஒரு க்விக் சர்வே இங்கே...

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

யுவன் இசைக்கு நாங்க அடிமை!

கல்லூரி ப்ரின்சஸ்களின் ப்ளே லிஸ்ட்டை ஆளும் ராஜாவா இருக்கார், யுவன் சங்கர் ராஜா. ‘`எங்களுக்கு இவரோட இசை ஒரு போதை மாதிரி. ‘நினைத்து நினைத்துப் பார்த்தால்...’ பாட்டு ஒண்ணு போதும், யுவன் யாருன்னு சொல்ல. இவர் கம்போஸ் பண்ணுற பாடல்கள்ல இசை தனிச்சு நிற்காம, படத்துல அந்தச் சூழல், கேரக்டர்களோட ஃபீலிங்ஸை எல்லாம் பிணைச்சு தர்ற மேஜிக் இருக்கே... சான்ஸே இல்ல. பாடல்கள் மட்டுமில்ல... இவரோட பேக் கிரவுண்ட் மியூஸிக்கும் மிரட்டும். உதாரணமா, ‘மங்காத்தா’ பிஜிஎம். சொல்லும்போதே அந்த மியூஸிக் ‘டட் டட டன்’னு நம்ம காதுல கேட்க ஆரம்பிக்குதுல... அதிலும், மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் - யுவன் காம்போ பாடல்கள் க்ளாஸிக்ஸ்... இரவோ, பகலோ... எந்த சூழலுக்கும் ஏத்த க்ளாஸிக்ஸ்!''

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

ஜி.வி.பிரகாஷ்... உருக வைக்கும் இசை!

``ஜி.வி.பிரகாஷ் பாடல்களைக் கேட்டுட்டு, அதை அவர் கம்போஸ் பண்ணினப்போ அவர் வயசு என்னன்னு பார்த்தா... இன்னொரு தடவை வாவ் சொல்லணும்’'னு பொக்கே கொடுக்குறாங்க கண்மணிகள். `` ‘மதராச பட்டினம்', ‘வெயில்’, ‘அங்காடித் தெரு’னு ஜி.வி பண்ணினது எல்லாம் மெஸ்மரைஸிங் மெட்டுகள். நா.முத்துக்குமார், சைந்தவி... இவங்க ஜி.விகூட சேர்ந்துட்டா, நாம அவுட். ஜி.வி.பிரகாஷுக்கு கேம்பஸ்ல ஒரு ஆர்மியே இருக்கு. அவருக்கு தேசிய விருது இனியும் லேட் ஆகாம சீக்கிரமே கிடைக்கணும் பாஸ்!”

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

எங்க ஹார்ட் பீட்... அனிருத்

``கேம்பஸ் ஹார்ட் பீட்டை மியூசிக்கா போடுறவர் அனிருத்’’னு சொல்லி உருகுறாங்க, மருகுறாங்க கேர்ள்ஸ். ‘`இவரோட பெப்பி சாங்ஸுக்கு ஆடாம இருந்தா அது சாதனைதான். ஒருபக்கம் குத்தாட்டம் போட வைக்கிற ஹேப்பி பீட்ஸ்னு லைவ்லியா ஒரு ஜானர், மறுபக்கம் உருக வைக்கும் காதல் பாடல்கள்னு எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கிறவர். இசை மட்டுமில்ல... இவரோட குரலுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்காங்க. உங்களோட அடுத்தடுத்த ஆல்பம்ஸுக்காக வெறித்தனமா வெயிட்டிங்.’’

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

`ஹிப்ஹாப்' ஆதி... இன்ஸ்பிரேஷன்!

‘ஆதிண்ணா’... இப்படித்தான் ஹிப்ஹாப் ஆதியை சொல்றாங்க பசங்க. ‘`இவர் ஒரு மியூசிக் செலிபிரிட்டி என்பதைத் தாண்டி, நாங்க இவரை எங்களுக்கான இன்ஸ்பிரேஷனாவும் பார்க்குறோம். படிப்புதான் எதிர்காலம்னு இல்ல, நமக்குப் பிடிச்சதை அதுக்கான அர்ப்பணிப்போட செஞ்சா சக்சஸ் ஆகலாம்னு தன்னோட வாழ்க்கை மூலமா எங்களுக்குச் சொன்னவர். இசையைப் பொறுத்தவரை, அவரோட ராப் எங்களுக்கெல்லாம் கேம்பஸ் கீதம். முழு ராப் பாடலை நாங்க மனப்பாடம் செய்து பாடினதுனா, அது இவரோட பாடல்கள்தான். வரிகள் எல்லாம் எங்களுக்கு அத்துப்படி. இசை மட்டு மில்ல... நடிப்பு, இயக்கம், காமெடினு ஆதிண்ணாவை பிடிக்க காரணங்களை அடுக்கலாம்.’’

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!
2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

ராஜா-ரஹ்மான்... லெஜண்ட்ஸ்!

இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் ரேங்க்ல கொண்டுட்டு வர முடியாத லெஜண்ட்ஸ்னு சொல்றாங்க கேர்ள்ஸ். ‘`இவங்க காலத்தை கடந்த கலைஞர்கள். தலைமுறைகளா தலையா இருக்குறவங்க. இவங்களை ஏன் பிடிக்கும்னு காரணம் சொன்னா, அது சின்னப் புள்ளத்தனமா போயிடும். தமிழ் இசையில இவங்கதான் எங்களுக்குத் தாலாட்டு எப்பவும்!’’

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

ஸ்டேட்டஸ் சப்ளையர்... சந்தோஷ் நாராயணன்

‘`நம்ம ஊரு இசையை இளைஞர்கள்கிட்ட கொண்டு போறவர் சந்தோஷ்’’னு சொல்லி கொண்டாடுது இளைஞர் பட்டாளம். ‘`சநா (சந்தோஷ் நாராயணன்) - பிரதீப் குமார் கூட்டணி பாடல்கள் எல்லாம் எங்களுக்கு உசுரு. இவரோட குத்துப் பாடல்கள், மெலடி பாடல்கள்னு இதெல்லாம்தான் வாட்ஸ்அப், இன்ஸ்டா ஸ்டேட்டஸ்ல ட்ரெண்டிங்ல இருக்கு.’’

2K kids: எங்களுக்குப் பிடிச்ச இசையமைப்பாளர்!

ஸ்பெஷல் மென்ஷன்... பிடிஎஸ் பேண்ட்!

‘`ஏழு பசங்களைக்கொண்ட சௌத் கொரியன் மியூசிக் பேண்ட்தான்... `பிடிஎஸ்' (BTS). `பேங்க்டன் பாய்ஸ்; (Bangtan Boys)னும் இவங் களை சொல்லலாம். இப்போ உலகின் டாப் மோஸ்ட் பேண்ட் இவங்கதான். 2013-ல்தான் பயணத்தை ஆரம்பிச்சாங்க... இப்போ வரை பல மியூசிக் ரெக்கார்ட்ஸை பிரேக் பண்ணியிருக் காங்க. உலகம் முழுக்க இருக்குற டீன்ஏஜ் பெண்களுக்கு, இந்த ஏழு பசங்களும் கிரஷ்ஷோ கிரஷ்’’னு ஆர்ட்டின் விடுறாங்க கேர்ள்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism