Published:Updated:

Tamil News Today: ஓபிஎஸ், அவர் மகன் ரவீந்திரநாத்குமார் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு!

ஓபிஎஸ், அவர் மகன் ரவீந்திரநாத்குமார்
Live Update
ஓபிஎஸ், அவர் மகன் ரவீந்திரநாத்குமார்

09-01-2022 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

09 Jan 2022 7 PM

ஓபிஎஸ், அவர் மகன் ரவீந்திரநாத்குமார் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு!

தேனி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. பொறியாளரான இவர், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகக் கடந்த 2018 வரை இருந்தவர். இந்நிலையில் இவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி தனித்தனியாக இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மாஜிஸ்ட்ரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜனவரி 6, ஜனவரி 7-ம் தேதிகளில் நடைபெற்றது.‌ வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் குறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை அறிக்கையை வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், புகாரில் தெரிவிக்கப்பட்ட இருவரையும் வாரன்ட் இன்றி கைதுசெய்யக் கூடாது எனவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ஓபிஎஸ், அவர் மகன் ரவீந்திரநாத்குமார்
ஓபிஎஸ், அவர் மகன் ரவீந்திரநாத்குமார்

இந்த நிலையில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது தற்போது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

09 Jan 2022 5 PM

கொரோனா பரவல்; புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் கொரோனா பரவல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருந்துவருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, மற்றும் ஏனாம் பகுதிகளில் இயங்கிவரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மறு அறிவிப்பு வரும் வரை (10.01.2022) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு இணைய வழி கல்வி (Online) மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
09 Jan 2022 10 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News Today: வேகமெடுக்கும் கொரோனா பரவல்; பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் புதுவகை திரிபான ஒமைக்ரானின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் கொரோனாவின் 3-ம் அலை வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா என நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியிருக்கும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

09 Jan 2022 9 AM

கொரோனா கட்டுப்பாடுகள்; மருத்துவத்துறை நிபுணர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்திருக்கிறது. இந்த ஊரடங்கு கட்டுபாட்டுகள் நாளை முடிவடைய இருக்கின்றன.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளைய தினம் மருத்துவத்துறை நிபுணர்களுடன் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

09 Jan 2022 9 AM

முழு ஊரடங்கு: விழுப்புரத்தில் வெறிச்சோடிய சாலைகள்!

09 Jan 2022 8 AM

தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு!

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழ்நாடு அரசு, இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தையும் அறிவித்திருக்கிறது. அந்த வகையில், இன்று அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பிற சேவைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.