Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: கோடிக்கணக்கில் புரளும் பணம்.. ஆள் கடத்தல் புகார்! - நெல்லை மாவட்ட `பஞ்சாயத்து’

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க-வுக்குள் மோதல் அதிகரித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சாதிய மோதலாக உருவெடுக்கும் ஆபத்த்தை எட்டியுள்ளது.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்துக்கு உள்பட்ட 12 கவுன்சிலர்களில் 11 பேர் தி.மு.க-வும் ஒரு காங்கிரஸ் கவுன்சிலரும் உள்ளனர். அதனால் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெறப்போவது உறுதியாகிவிட்டது. ஆனால் அது யார் என்பதில் தான் குழப்பம் நீடிக்கிறது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்
மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்

அ.தி.மு.க-வில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு மறைந்த ஜெயலலிதாவால் நீக்கப்பட்டு பின்னர் தி.மு.க-வில் இணைந்த தொழிலதிபர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷுக்கும், கடந்த ஆண்டு அ.ம.மு.க-வில் இருந்து தி.மு.க-வில் ஐக்கியமான அரசு ஒப்பந்ததாரர் அமிதாப் என்பவரின் மனைவி செல்வலட்சுமி என்பவருக்கும் இடையே யார் தலைவர் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் உள்கட்சி விவகாரம் அறிந்தவர்கள்.

சபாநாயகர் அப்பாவு, நெல்லை எம்.பி-யான ஞானதிரவியம் ஆகியோர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷுக்கு ஆதரவாகவும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் அப்துல் வஹாப் ஆகியோர் செல்வலட்சுமிக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார்களாம். இரு தரப்புக்கும் தலா 5 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இரு கவுன்சிலர்கள் பதவியேற்க வராமல் தலைமறைவாக இருக்கிறார்கள்.

செல்வலட்சுமி
செல்வலட்சுமி

இந்தச் சூழலில், நடுநிலையாக இருந்த இரு கவுன்சிலர்களும் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தரப்பால் தூக்கிச் செல்லப்பட்டு விட்டதாகத் தகவல் பரவியதால் எதிர் தரப்பினர் அதிருப்தியடைந்துள்ளனர். அதனால் மகேஸ்வரன் என்ற கவுன்சிலரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தும் இரு தரப்புமே கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறர்களாம். இதன் பின்னணியில் சாதியமும் இருப்பதால் சென்சிட்டிவான நெல்லை மாவட்டத்தில் சாதிய வன்முறை வெடிக்கும் ஆபத்து உருவாகியிருக்கிறது என்கிறார்கள்.

வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆதரவாளர்கள்
வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆதரவாளர்கள்

வழக்கமாக ஒன்றிய சேர்மன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கான நபர்களைக் கட்சி மேலிடமே அறிவிப்பது வழக்கம். இந்த முறை தி.மு.க மேலிடம் எதையும் கண்டுகொள்ளாததால் கட்சிக்குள் பெரும் குழப்பம் நீடிப்பதற்கு காரணம் என்கிறார்கள். இந்த விவகாரம் நெல்லை தி.மு.க தொண்டர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு