Published:Updated:

`எய்ம்ஸில் 2 வருடம்; இரட்டையர்களுக்கு நடந்த அறுவை சிகிச்சை'- ஒடிசா திரும்பும் சிறுவர்கள்!

ராம் பிரசாத்

ஓடிசாவை சேர்ந்த இரட்டையர்கள் சிகிச்சை முடிந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேறவுள்ளனர்.

Jaga and Kalia
Jaga and Kalia

ஒடிசாவை சேர்ந்த இரட்டையர்களான ஜகா மற்றும் கலியாவின் பெயர்கள் 2017-ம் ஆண்டு மத்தியில் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வெளியானது. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரிப்பதற்காக ஒடிசாவில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2017 ஜூலை மாதத்தில் அனுமதித்தனர். பழங்குடியின குடும்பத்தை சேர்ந்த இவர்களது பெற்றோர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவும் செய்யும் நிலையில் இல்லை. இரண்டு வயது குழந்தைகளாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவை ஓடிசா மாநில அரசு கொடுத்தது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்கு பிறகு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்தில் இரண்டு கட்டங்களாக அறுவை சிகிச்சை நடந்தது. பல்வேறு துறைகளை சார்ந்த 20 மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்தனர். வெற்றிகரமாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் எய்ம்ஸ் மருத்துவர்கள் உலக கவனம் பெற்றனர்.

Jaga and Kalia
Jaga and Kalia

அறுவை சிகிச்சைக்கு பின்னர் இருவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்த சில மாதங்களில் ஜகாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கலியாவின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் ஓடிசா திரும்பவில்லை மருத்துவமனையிலே தங்கிவிட்டனர். இதன் காரணமாக ஜகாவும் மருத்துவமனையில் தங்கினார். கலியாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர். இந்த இரண்டு வருடத்தில் இருவரும் மருத்துவமனையின் செல்லப்பிள்ளைகளாகி விட்டனர். ஜகா மற்ற சிறுவர்களை போல சுறுசுறுப்பாக விளையாடி வருகிறார். கலியா தான் சுணக்கமாக காணப்படுகிறார்.

`பொம்மைக்கும் உனக்கும் சிகிச்சை!' - டெல்லிக் குழந்தையை வழிக்குக் கொண்டுவந்த`வாவ்' யோசனை

5 வயதை பூர்த்தியடைந்ததும் ஜகாவும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இந்நிலையில் இவர்கள் இருவரையும் ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர். ஆனால் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்தது. குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்ககூடிய நவீன சிகிச்சை உபகரணங்கள் இல்லை எனக் காரணம் சொன்னது. இதனையடுத்து தான் கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டத்தில் குழந்தைகளை ஒடிசாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க மாநில அரசு முடிவு செய்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மறுப்பையடுத்து சிறுவர்களை அழைத்து வருவதில் சிக்கல் நீடித்தது. சிறுவர்கள் செப்டம்பர் மாதத்தில் அழைத்து வரவுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Jaga and Kalia
Jaga and Kalia

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் பேசுகையில், “ செப்டம்பர் 7 -ம் தேதி இரட்டையர்கள் இருவரும் ரயில் மூலம் ஓடிசா வரவுள்ளனர். சிறுவர்களும் எய்ம்ஸ் மருத்துவக்குழு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உடன் வருவார்கள். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செப்டம்பர் 6-ம் தேதி அழைத்து வரவுள்ளனர். கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவக்குழு இவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கவுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது” என்றார். இரண்டு வருடங்களுக்கு பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறுவர்கள் இருவரும் ஒடிசா வரவுள்ளனர்.