Published:Updated:

தண்ணீரை சிக்கனப்படுத்தும் கழிப்பறைகள்!

கழிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
கழிப்பறை

நீர் நம் உயிர்!

தண்ணீரை சிக்கனப்படுத்தும் கழிப்பறைகள்!

நீர் நம் உயிர்!

Published:Updated:
கழிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
கழிப்பறை

வாழ்வின் அடிப்படை ஆதாரமே நீர்தான். நம் பயன்பாட்டுக் கணக்கீட்டின்படி அதிக அளவு நீர் சமையலறையிலும் கழிப்பறை களிலும்தான் செலவழிக்கப்படுகின்றன. நம் வீடுகளிலுள்ள பழைய `ஃப்ளஷிங்' (Flush) கழிப்பறைகளுக்கு, சராசரியாக ஒரு முறைக்கு 13.6 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. `அல்ட்ரா லோ ஃப்ளோ' (Ultra low flow) கழிப்பறைகளுக்கு சராசரியாக 6 லிட்டர் தண்ணீர் செலவழிக் கிறது. வேக்யூம் கழிப்பறைகளோ ஒரு ஃப்ளஷுக்கு சராசரியாக 1.5 லிட்டர் மட்டுமே பயன்படுத்துகிறது. தண்ணீரை சிக்கனப் படுத்துவதில் இந்தக் கழிப்பறைகளே சிறந்து விளங்குகின்றன. குப்பைகளை அகற்ற வேக்யூம் க்ளீனர் பயன் பட்டதுபோல, இன்று கழிவுகளை அகற்ற வேக்யூம் கழிப்பறை பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீரை சிக்கனப்படுத்தும் கழிப்பறைகள்!

வேக்யூம் கழிப்பறை என்பது தண்ணீரைக் கொண்டு சுத்தம்செய்யும் கழிப்பறைகளைப் போலவேதான். ஆனால், சுத்தம் செய்வதற்கு காற்று பயன்படுத்தப்படுகிறது. காற்று எதிர் திசையில் உறிஞ்சப்படுவதால், கழிப்பறை யிலிருந்து மலம் மற்றும் சிறுநீரை நீக்குகிறது. இதனால் தண்ணீர் மிகக்குறைவாகவே செலவிடப்படுகிறது. இதுபோன்ற வேக்யூம் கழிப்பறைகள் ரயில்கள், விமானங்கள், கப்பல்களில் பயன்படுத்தப்படுகின்றன. இனி, பெரிய மற்றும் சிறிய கட்டடங்களுக்கும் இந்தக் கழிப்பறைகள் மிகவும் பொருந்தும்.

வேக்யூம் கழிப்பறைகள் கிரே வாட்டர் மற்றும் பிளாக் வாட்டரை முறைப்படுத்தும் வடிவமைப்பைப் பெற்றுள்ளன. காற்று கழிவுகளை உள்ளே இழுத்த பிறகு, முதலில் கிரே வாட்டர் (குளியல், சலவை, சமையலறையில் உபயோகிக்கப்பட்ட கழிவு நீர். இவை தாவரங் களுக்கு ஊட்டமளிக்கும், குறைந்த மாசுள்ள நீர்) சிறிதளவு தெளித்து சுத்தப்படுத்தும்; பின்பு சுத்தமான நீர் தெளித்து கழிப்பறையைச் சுத்தப்படுத்தும். மலத்தோடு கலக்கப்பட்ட நீர் `பிளாக் வாட்டர்' எனப்படும். இந்த நீர், மாசு கலந்த பாக்டீரியாக்களைக் கொண்டது. இந்த இரண்டு நீரையும் தனித்தனியாக முறைப் படுத்தி உபயோகப்படுத்தும் சிறப்பம்சம் இந்த அமைப்பில் உள்ளது.

அதோடு, `ஏரோபிக் செரிமான' முறையின் மூலம் பயோகேஸை உற்பத்திசெய்கிறது. ஏரோபிக் செரிமானம் என்பது கரிம கழிவைச் சுத்திகரிக்கும் முறை. கரிமப் பொருள்களின் சிதைவால் ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் உருவாகும் வாயுக்கலவையே பயோகேஸ் ஆகும். இது ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், இதில் சிறுநீரை திசை திருப்பும் அமைப்பும் (urine diversion) உள்ளது. அதாவது, மலத்தையும் சிறுநீரையும் தனித்தனியாகப் பிரித்து சுத்தம் செய்ய இந்த அமைப்பு, பயன்படுகிறது. இந்தப் பயன்பாட்டு அமைப்பு, துப்புரவுப் பணி அதிகம் இல்லாத இடங்களுக்கும், நீர் வழங்கல் குறைவாக உள்ள இடங்களுக்கும் உகந்தது.

தண்ணீரை சிக்கனப்படுத்தும் கழிப்பறைகள்!

வேக்யூம் கழிப்பறையில் இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகள் உண்டு.

நிலையான வெற்றிட அமைப்பு (Constant vacuum system)

இந்த அமைப்பு பெரிய கட்டடங்களுக்கு உகந்தது. அதிகப்படியான கழிப்பறைகளை இதில் இணைத்துக்கொள்ள முடியும். இதில் நிரந்தர வேக்யூம் இருப்பதால் கசிவு ஏற்படும் அபாயமும் குறைவு. இவற்றைத் தொடர்ந்து இயக்க அதிக ஆற்றல் தேவைப்படும். இது எப்படி இயங்குகிறது?

ஸ்டெப் 1: பயனர், முதலில் (Push) பொத்தானை அழுத்தும்போது இடைமுக வால்வு திறந்து கழிவுநீரை வெளியேற்றி சுத்தம்செய்கிறது. கூடவே, எதிர் திசையில் காற்றைச் செலுத்தி கழிவுகளை உள்ளே இழுக்கிறது. அதே நேரத்தில், சுத்தமான நீர் திறந்து முழுவதும் தெளிக்கிறது.

ஸ்டெப் 2: வேக்யூம் வால்வு மூடப்பட்டு நீர் வால்வு மட்டும் திறக்கும். இப்போது சிறிய அளவு புதிய நீர் கழிவுக் கிண்ணம் முழுவதும் தெளிக்கப்படும்.

ஸ்டெப் 3: நீர் வால்வு முழுவதும் மூடிக் கொள்ளும். ஒரு சிறிய அளவு தண்ணீர் மட்டும் கழிப்பறையின் அடியில் தங்கிவிடும். இப்போது கழிப்பறை மீண்டும் உபயோகத்துக்குத் தயாராகிவிடும். சேகரிக்கப்பட்ட நீர், கழிவுநீர்த் தொட்டி, பொது பாதாளச் சாக்கடை, உயிர் வாழ் உற்பத்தி போன்று பல்வேறு வழிகளில் வெளியேற்றப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தேவைக்கேற்ற வெற்றிட அமைப்பு (Vacuum on demand)

இந்த அமைப்பு வெறும் காற்றை மட்டும் பயன்படுத்தி கழிவுகளை நீக்குகிறது. நீர், உள்ளிழுக்கப்படும் கழிவுகளைக் குழாய் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் கடத்துகிறது.

இதில், பயனர் ஆக்டிவேட்டர் பொத்தானை அழுத்தும்போது, வடிகுழாயிலிருந்து காற்று வெளியேறுகிறது. வால்வு திறக்கப்படும்போது வெவ்வேறு விதமான காற்றின் அழுத்தம் கழிவுநீரை வெளியேற்றுகிறது. குறைந்த ஆற்றல் தேவையின் காரணமாக இந்த அமைப்பு சூரியஒளி மூலமும் இயக்கப்படுகிறது. வெளியேற்றப்படும் கழிவுகள் முதலில் வடிகட்டப்பட்டு ஒரு தொட்டியில் சேகரிக்கப் படுகிறது. இந்தத் தொட்டியில் நிரப்பப்பட்ட உடன் சேகரிக்கப்பட்ட திரவம், உரமாக்கும் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இது, உயர் தொழில்நுட்ப அமைப்பு என் பதால் இதன் விலை சற்று அதிகம். ஆனால், பொதுவான ஃப்ளஷிங் கழிப்பறையை ஒப்பிடும்போது, குழாய்களுக்கு ஆகும் செலவைவிட இவற்றின் விலை மலிவாகவே உள்ளது.

பலன் என்ன?

*நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு.

*காற்றை உள்ளிழுத்து உறிஞ்சுவதன் மூலம் சுத்தம் செய்வதால் துர்நாற்றத்திலிருந்து விடுதலை கொடுக்கிறது.

*சுத்தம் செய்வதற்கு உபயோகப்படுத்தும் சோப்புகளின் அளவைக் (Detergent) குறைக்கிறது.

*உபயோகப்படுத்துவதற்கு மிகவும் எளிதானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism