Published:Updated:

தேசியக்கொடி விற்பனைச் சர்ச்சை... கதரை வீழ்த்திய பாலியஸ்டர்!

தேசியக்கொடி
பிரீமியம் ஸ்டோரி
தேசியக்கொடி

75-வது ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டம் எங்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது

தேசியக்கொடி விற்பனைச் சர்ச்சை... கதரை வீழ்த்திய பாலியஸ்டர்!

75-வது ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டம் எங்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது

Published:Updated:
தேசியக்கொடி
பிரீமியம் ஸ்டோரி
தேசியக்கொடி

சுதந்திர தின அமுத விழாவை விமரிசையாகக் கொண்டாடும் வகையில், இந்திய மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார இயக்கம் நடத்தியது மத்திய பா.ஜ.க அரசு. அதற்காக ஒரு தேசியக்கொடி ரூ.25 என்ற விலையில், நாடு முழுவதும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள், ரேஷன் கடைகள், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகமும் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த ‘ஹர் கர் திரங்கா’ பிரசாரத்தின் மூலம் சுமார் ரூ.500 கோடி வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், 30 கோடிக்கும் அதிகமான இந்திய தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders (CAIT) பெருமையுடன் தெரிவித்திருக்கிறது.

இன்னொருபுறம், தேசியக்கொடியை மத்திய பா.ஜ.க அரசு அவமதித்துவிட்டதாகவும், காதி மற்றும் கைத்தறி நெசவாளர்களை வஞ்சித்துவிட்டதாகவும் காங்கிரஸ்காரர்களும், காதி கதர் உற்பத்தியாளர்களும் குற்றம்சாட்டிவருகின்றனர். காரணம், காலங்காலமாக பருத்தி, பட்டு, காதித் துணியில் செய்யப்பட்ட தேசியக்கொடிகளே பயன்படுத்த அனுமதிக் கப்பட்ட நிலையில், பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை இழைகளில் செய்யப்பட்ட கொடிகளையும், இயந்திரத்தில் உருவாக்கப்பட்ட தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம் என்று சட்டத் திருத்தம் செய்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 8-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாலியஸ்டர் துணி, இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகளுக்கும் ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தார்.

தேசியக்கொடி விற்பனைச் சர்ச்சை... கதரை வீழ்த்திய பாலியஸ்டர்!

இந்த அறிவிப்புகளை எதிர்த்து தொடர்ச்சியாகக் கருத்து வெளியிட்ட அஜோய் குமார், ஜெய்ராம் ரமேஷ், நானா படோலே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், ``இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட, இறக்குமதி செய்யப்பட்ட பாலியஸ்டர் கொடிகளை அனுமதித்ததன் மூலம் காதியின் சாரத்தையும், மகாத்மா காந்தியின் பாரம்பர்யத்தையும் பிரதமர் மோடி தாக்கியிருக்கிறார். காதி நிறுவனத்தின் பாதுகாவலராகத் தன்னை காட்டிக்கொள்ள, கடந்த ஆண்டு ‘மன் கி பாத்’ உரையில் காதிப் பொருள்களையே வாங்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்ட மோடி, இன்று காதியின் அழிவுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். சீனாவிலிருந்து தேசியக் கொடிகளை இறக்குமதி செய்ய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறார்கள் இந்தப் போலி தேசியவாதிகள்” என்று விமர்சித்திருக்கின்றனர். பாலியஸ்டர் இழை உற்பத்தியில் உலகிலேயே முன்னணி வகிக்கும் அம்பானிக்குத்தான் இந்த உத்தரவு பலனளித்திருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக் கின்றன.

இதுநாள் வரை இந்திய தேசியக்கொடியைத் தயாரிக்கும் BIS சான்றிதழ் பெற்ற ஒரே நிறுவனமாக இருந்துவந்த, பெங்கேரியிலுள்ள `கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கம்’ (KKGSS) கடுமையான விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்த ஆண்டு, 8 - 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 2 கோடி ரூபாய் ஆர்டர்களை மட்டுமே பெற்றிருக்கிறது KKGSS. “விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவால் எங்கள் ஊதியம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 75-வது ஆண்டு சுதந்திரத் திருநாள் கொண்டாட்டம் எங்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துவிட்டது” என்று வருத்தம் தெரிவித்திருக்கின்றனர் அதன் பெண் தொழிலாளர்கள்.