Published:Updated:

"அநியாய பேக்கேஜ்", ''இதுவே போதாது''... கொரோனா ட்ரீட்மென்ட் சர்ச்சை!

கொரோனா ட்ரீட்மென்ட்
கொரோனா ட்ரீட்மென்ட்

எல்லா மருத்துவமனைகளுக்கும் ஒரே கட்டணம் என்பதே தவறு. `100 படுக்கைகள்கொண்ட ஒரு மருத்துவமனையில் 25 படுக்கைகளை கொரோனாவுக் கென்று ஒதுக்க வேண்டும்

சமீபத்தில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த வசதியான பெண்மணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஆயிரம் விளக்கிலுள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். 'படுக்கை இல்லை'எனக் கைவிரித்தது மருத்துவமனை நிர்வாகம். பாதிக்கப்பட்டவர் தரப்பில், 'செலவு பற்றிப் பிரச்னையில்லை'என்று பேச, ''சூட் ரூம்தான் இருக்கு. 14 நாள்களுக்கு மொத்தம் 16 லட்சம். ஆனால், மூன்று லட்ச ரூபாய்க்குத்தான் பில் தருவோம். விருப்பமிருந்தால் சேருங்கள்''என்றிருக்கிறார்கள். கேட்ட தொகையைச் செலுத்திவிட்டு, சிகிச்சை எடுத்துவருகிறார் அந்தப் பெண்மணி. `இந்த பேக்கேஜ் முறைதான் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் நடைமுறையில் இருக்கிறது'என்கிறார்கள்.

'அட்மிட் செய்யும்போதே 14 நாள்களுக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும். நோயாளி எட்டு நாள்களில் குணமடைந்து வீடு திரும்பினாலும், மீதிப் பணத்தை திருப்பித் தர மாட்டார்கள். இப்போது பெரும்பாலான மருத்துவமனைகளில், `பெட் இ்ல்லை'என்று கைவிரிக்கிறார்கள். `இது செயற்கையாக டிமாண்டை உருவாக்கத்தான்'என்கிறது சுகாதாரத்துறை வட்டாரம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`அரசு நிர்ணயித்த கட்டணத்தையெல்லாம் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மதிப்பதேயில்லை'என்கிறார்கள். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் என்று வந்தால், 'பெட் இல்லை'என்ற பதில்தான். 'எவ்வளவு வேண்டுமானாலும் செலவுசெய்யத் தயார்'என்றால் பெட் முளைத்துவிடும். உயிர் பயத்தில் எதையேனும் விற்று, செலவு செய்ய முனைகிறார்கள் மக்கள்.

''இந்தக் கட்டணம் போதாது!''

தனியார் மருத்துவமனைகள்மீது வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஜெயலாலிடம் பேசியபோது, ''உண்மையில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் தனியார் மருத்துவமனைகளுக்குப் போதுமானதாக இல்லை. எல்லா மருத்துவமனைகளுக்கும் ஒரே கட்டணம் என்பதே தவறு. `100 படுக்கைகள்கொண்ட ஒரு மருத்துவமனையில் 25 படுக்கைகளை கொரோனாவுக் கென்று ஒதுக்க வேண்டும்'என்கிறது அரசு. அப்படிச் செய்தால், பிற வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

மருத்துவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்வரை அனைவருக்கும் கவச உடைகள் வழங்க வேண்டும். இவையெல்லாம் நிர்வாகத்துக்குக் கூடுதல் செலவு. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்படும்பட்சத்தில் பிற நோயாளிகள் அந்த மருத்துவமனைக்கு வர யோசிப்பார்கள்; அதுவும் நஷ்டம். தவிர, அரசிடமிருக்கும் அளவுக்கு மனிதவளமும் தனியாரிடம் இல்லை''என்றார்.

இன்னொரு தனியார் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி, ''அரசு மருத்துவமனையில் முழுச் சிகிச்சையையும் இலவசமாக வழங்குகிறார்கள். மருத்துவமனை நிர்வாகம், ஊழியர்கள், மருத்துவர்கள், மருந்துகள் உட்பட அனைத்துக்கான செலவுகளையும் கணக்கிட்டால், தனியார் மருத்துவமனைகள் பெறும் கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும். அந்தத் தொகையை அரசு ஈடுசெய்கிறது. தனியார் மருத்துவமனைகள் எப்படி ஈடுசெய்வது? தற்போது தனியார் மருத்துவமனைகள் பெறும் கட்டணம் என்பது அது மாதிரியான நிர்வாகச் செலவினங்களுக்கு உட்பட்ட தொகைதான்''என்கிறார்.

"அநியாய பேக்கேஜ்", ''இதுவே போதாது''... கொரோனா ட்ரீட்மென்ட் சர்ச்சை!

- உலக அளவில் ஒரு பெருநோய்த்தொற்று பரவி முடக்கிப்போட்டுள்ள இந்தச் சூழலில், முழுப் பொறுப்பேற்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய தமிழக அரசு சிகிச்சைக்குக் கட்டணத்தை அறிவித்து, கடமையிலிருந்து விலகிக்கொள்ள நினைக்கிறது... என்னதான் நடக்கிறது? > ஓர் ஒப்பீட்டு கட்டுரையாக வெளிவந்துள்ள ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > கொரோனா ட்ரீட்மென்ட் - ஒடிசாவில் இலவசம்... தமிழகத்தில் ரூ.2.55 லட்சம் https://bit.ly/2UwvzER

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு