Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 25 - கெட்டியான தயிர்... நிறம் மாறாத காய்கறிகள்... இன்ஸ்டன்ட் ஊறுகாய்...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

- சுகுனரோஷிணி

சமையல் சந்தேகங்கள் - 25 - கெட்டியான தயிர்... நிறம் மாறாத காய்கறிகள்... இன்ஸ்டன்ட் ஊறுகாய்...

- சுகுனரோஷிணி

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் செஃப்' பாலகிருஷ்ணன்

சமையல் சந்தேகங்கள் - 25 - கெட்டியான தயிர்...
நிறம் மாறாத காய்கறிகள்...
இன்ஸ்டன்ட் ஊறுகாய்...

பொடி தோசையில் தூவும், பொடியை எப்படித் தயாரிப்பது?

- மஞ்சுளா ராமன், கோவை

பொடி தோசையில் தூவும் பொடி என்பது வழக்கமாக நாம் பயன் படுத்தும் இட்லிப்பொடிதான். உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 15, எள் - ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள்- கால் டீஸ்பூன், நல் லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது, பூண்டுப் பற்கள்- 10, உப்பு - தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயை சூடாக்கி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிற மாக வறுக்கவும். பிறகு மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற் றைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் இவற்றை மிக்ஸியில் கொரகொரப் பாக அரைத்துக்கொள்ளவும். இறுதி யில் பெருங்காயத்தூளைச் சேர்க்க வும். தோசை மாவைக் கல்லில் ஊற் றியதும் இந்தப் பொடியைத் தூவி நல் லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சமையல் சந்தேகங்கள் - 25 - கெட்டியான தயிர்...
நிறம் மாறாத காய்கறிகள்...
இன்ஸ்டன்ட் ஊறுகாய்...

பாலில் தயிர் உறை சேர்ப்பதற்கு எவ்வளவு தயிர் சேர்க்க வேண்டும்?

- சிவசங்கரி செந்தில், நாகை

ஒரு லிட்டர் பால் என்றால், அதற்கு அதிகபட்சமாக 100 மில்லி தயிர் சேர்க்க வேண்டும். பாலை மிதமான சூட்டில் காய்ச்சி இறக்கி, ஆறவைத்து தயிர் சேர்த்துக் கலக்கி மூடிவைத்து விட்டால், நல்ல கெட்டியான தயிர் கிடைக்கும். மூடி வைத்தபின் பாத் திரத்தைத் திறப்பதோ, மீண்டும் மீத முள்ள பால், தயிரைச் சேர்ப்பதோ கூடாது.

காய்கறிகளை ஊட்டச்சத்துகள் குறையாமல் எப்படிச் சமைப்பது? பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட முடிவதில்லை. வேறு எந்த வகையில் காய்கறிகளை நிறம் மாறாமல் சத்துடன் சாப்பிடலாம்?

-கே. ஆர்த்தி, சென்னை-44

காய்கறிகளை சுத்தமாகக் கழுவி நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அவற் றின் மேல் தேவையான அளவு உப்புத் தண்ணீர் தெளித்து, இட்லிப் பானையில் ஐந்து நிமிடங்களுக்கு வேகவைக்கவும். வெந்த காய்கறி களில் சிறிதளவு மிளகுத்தூள், சீரகத் தூள், உப்புத்தூள் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இப்படிச் சாப்பிட்டால் காய்கறிகள் சுவையாகவும் நிறம் மாறாமலும் இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 25 - கெட்டியான தயிர்...
நிறம் மாறாத காய்கறிகள்...
இன்ஸ்டன்ட் ஊறுகாய்...

சிக்கன் கிரேவி தயாரிக்கும்போது நிறைய நேரம் வேகவைத்தாலும் கிரேவியில் மசாலா ஒட்டாமலே இருக்கிறது. இதை எப்படிச் சரி செய்வது?

- சி.ஷர்மிலி, புதுச்சேரி

சிக்கன் வாங்கும்போது அதிக எடை யுள்ள கோழியை வாங்கினால் அதில் மசாலா பொருள்கள் அவ்வளவு எளிதாக ஏறாது. சுவை சற்று குறைந்து, மாவு போல் இருக்கும். எலும்புடன் ஒட்டி இருக்கிற சதைப்பகுதிகளான, தொடை, கால் போன்ற பகுதிகள் மிகவும் சுவையாக இருக்கும். கோழியின் நெஞ்சுப் பகுதியில் மசாலா பொருள்கள் ஏறுவது சற்று சிரமமாக இருக்கும். அதனால் அதை சிறிய துண்டுகளாக வெட்டி எண்ணெய்விட்டு வதக்கி, தேவை யான அளவு மசாலாவைச் சேர்த்து வதக்கினால், நன்றாக இருக்கும். கோழிக்கறியில் மசாலா நன்றாக ஏற வேண்டுமானால் தொடைப் பகுதியையும் கால் பகுதியையும் பார்த்து வாங்குவது நல்லது. கோழி யின் எடையும் மிக முக்கியம்.

சமையல் சந்தேகங்கள் - 25 - கெட்டியான தயிர்...
நிறம் மாறாத காய்கறிகள்...
இன்ஸ்டன்ட் ஊறுகாய்...

இன்ஸ்டன்ட்டாக தயாரிக்க ஊறுகாய் ரெசிப்பி ஒன்றைச் சொல்லுங்கள்…

- திவ்யா மனோ, செங்கல்பட்டு

மாங்காய் சீசன் வர இருக்கிறது. மாங்காயைக் கழுவி சுத்தமாகத் துடைத்து எடுத்துக்கொண்டு பொடி யாக நறுக்கிக்கொள்ளவும். தேவையான அளவு உப்புத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் குலுக்கி வைக்கவும். வாணலியை சூடாக்கி, நல்லெண்ணெயில் கடுகு, பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும். இதில் நறுக்கிய மாங்காய்த்துண்டு களைச் சேர்த்துப் புரட்டி எடுத்தால், ஊறுகாய் ரெடி. இந்த திடீர் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்து, ஐந்து நாள்களுக்குப் பயன்படுத்த லாம். வெளியே வைத்திருந்தால், மூன்று நாள்களுக்கு மேல் பயன் படுத்த முடியாது.

சமையல் சந்தேகங்கள் - 25 - கெட்டியான தயிர்...
நிறம் மாறாத காய்கறிகள்...
இன்ஸ்டன்ட் ஊறுகாய்...

சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் கெட்டியாவதற்கு கடலை மாவு சேர்க்கிறோம். கடலை மாவு சேர்க்கும்போது சுவை மாறிவிடுகிறது. கடலை மாவுக்கு பதில் வேறு எதைச் சேர்க்கலாம்?

- டி.எலிசபெத், நெல்லை

சாம்பார் நீர்த்துவிட்டாலோ, உப்பு அதிகமாகிவிட்டாலோ கடலை மாவுக்கு பதில், வேகவைத்த உருளைக்கிழங்கைத் துருவிச் சேர்க்கலாம். அப்படிச் சேர்க்கும் போது அதிலுள்ள காரம் குறைந்து விடும். கடலை மாவாகச் சேர்க்கும் போது அதன் பச்சைவாடை காரண மாக சாம்பாரின் சுவை குறையும். அதுவே பொட்டுக்கடலையைப் பொடித்துச் சேர்க்கும்போது பச்சை வாடையும் வராது, காரமும் குறை யாது, ருசியும் கூடும். சாம்பாரும் கெட்டியாகும்.