Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 26 - மணக்கும் பிரியாணி... சுவையான உருளை பொரியல்... சூப்பரான மட்டன் சுக்கா...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

சமையல் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் செஃப் மால்குடி கவிதா

கவிதா
கவிதா

- சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்கள் - 26 - மணக்கும் பிரியாணி... சுவையான உருளை பொரியல்... சூப்பரான மட்டன் சுக்கா...

பிரியாணிக்கு இஞ்சி - பூண்டு விழுதை எந்த அளவு சேர்க்க வேண்டும்?

- கே.வெண்ணிலா, நாகர்கோவில்

பிரியாணி தயாரிப்பதென் றாலும் மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி போன்ற கிரேவி வகைகள் செய்வதாக இருந்தாலும் இஞ்சி, பூண்டு இரண்டையும் சம அளவு சேர்த்துக்கொள்ளலாம். ஆனாலும், தோலை நீக்கும் போது பூண்டின் அளவு சற்று குறையுமென்பதால் மூன்று பங்கு பூண்டு, இரண்டு பங்கு இஞ்சி என்ற விகிதத்தில் சேர்த்தால், பிரியாணி சுவை யாகவும் மணமாகவும் இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 26 - மணக்கும் பிரியாணி... சுவையான உருளை பொரியல்... சூப்பரான மட்டன் சுக்கா...

ஹோட்டல்களில் கிரில்டு சிக்கன் சாப்பிடும்போது கூடவே மயோனைஸும் புதினா சாஸும் கொடுக்கிறார்கள். அந்த புதினா சாஸ் வித்தியாச மான சுவையுடன் உள்ளது. அதை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?

- மலர்விழி, அறந்தாங்கி

புதினா சாஸ் தயாரிப்பதற்குத் தேவையானவை: ஒரு கைப்பிடி அளவு புதினா, இரண்டு கைப்பிடி அளவு கொத்தமல்லித்தழை, நான்கு பச்சை மிளகாய், சிறு நெல்லிக்காய் அளவு இஞ்சி, அதே அளவு புளி, சிறிதளவு கெட்டித் தயிர் மற்றும் அரை டீஸ்பூன் சாட் மசாலா, தேவையான அளவு உப்பு. முதலில் புதினா, மல்லித்தழையைச் சுத்தம் செய்து சூடான எண்ணெயில் லேசாக வதக்கிக்கொள்ள வேண்டும். அதிகமாக வதக்கினால் அதில் உள்ள பச்சை நிறம் போய்விடும். இத்துடன் சிறிதளவு கெட்டித் தயிர் மற்றும் அரை டீஸ்பூன் சாட் மசாலா சேர்த்து அரைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் சுவையான புதினா சாஸ் தயார். கிரில்டு சிக்கனுக்கு என்றில்லை... இட்லி, தோசைக்கும் இதைத் தொட்டுக்கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 26 - மணக்கும் பிரியாணி... சுவையான உருளை பொரியல்... சூப்பரான மட்டன் சுக்கா...

மட்டன் சுக்கா தயாரிக்கும் போது மட்டனை எண்ணெ யில் லேசாக வதக்கி, நேரடியாகவே மசாலாப் பொருள்களுடன் சேர்க்க லாமா... தனியாக வேக வைத்துச் சேர்க்க வேண் டுமா?

- மேரி தாஸ், செங்கல்பட்டு

மட்டன் சுக்கா தயாரிக்க, மட்டனை லேசாக எண்ணெ யில் வதக்கி, நேரடியாக வேகவைத்துத் தயாரிக்கும் போது அதன் சுவை சற்றுக் கூடுதலாக இருக்கும். விறகு அடுப்பு அல்லது பெரிய அளவிலான கமர்ஷியல் கேஸ் அடுப்பில் தயாரிக்கும் போது இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். மட்டன் சரியான பதத்துக்கு எளிதில் வெந்துவிடும்.குறைந்த நபர்கள் சாப்பிடும் அளவில் தயாரிக்கும்போது மட்டனை குக்கரில் வேக வைத்து அதன் பிறகு தயாரிப்பதுதான் நல்லது. மட்டன் வேகவைத்த தண்ணீரை சூப்பாக பயன் படுத்திக் கொள்ளலாம்.

சமையல் சந்தேகங்கள் - 26 - மணக்கும் பிரியாணி... சுவையான உருளை பொரியல்... சூப்பரான மட்டன் சுக்கா...

கடைகளில் பிரியாணி சாப்பிடும்போது நெய்யின் வாசனையை நம்மால் உணர முடிகிறது. வீட்டில் தயாரிக்கும்போது எவ்வளவு நெய் சேர்த்தாலும் மணம் வருவதில்லை. பிரியாணியில் நெய்யை எப்போது சேர்க்க வேண்டும்?

- டி.சங்கீதா, ராஜபாளையம்

பிரியாணி தயாரிக்க பட்டை, சோம்பு, கசகசா போன்றவற்றைத் தாளிக்கும்போது சேர்க்கும் எண்ணெயின் அளவில் கால் பங்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு பிரியாணி தயாரித்து முக்கால் பதத்தில் ‘தம்’ போட்டு எடுப்போம். தம் பிரிக்கும்போது மீதமுள்ள முக்கால் பங்கு நெய் சேர்த்துக் கிளறி மூடிவைத்து விட்டு, சிறிது நேரம் கழித்துப் பரிமாறினால், பிரியாணியில் நெய்யின் மணம் கமகமக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 26 - மணக்கும் பிரியாணி... சுவையான உருளை பொரியல்... சூப்பரான மட்டன் சுக்கா...

உருளைக்கிழங்கில் பொரியல், வறுவல், கட்லெட், போன்றவை தயாரிக்கும்போது லேசான பிசுபிசுப்பு இருப்பதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

- அஞ்சலி, சென்னை-32

உருளைக்கிழங்கை சுத்தமாகக் கழுவிவிட்டு, அதன் தோலை நீக்கி, வேகவைத்து நறுக்கி, சமைப்பது ஒரு முறை. உருளைக்கிழங்கைக் கழுவி வேகவைத்துவிட்டு, பிறகு தோலை உரித்து வெட்டிச் சமைப்பது இன்னொரு முறை. இரண்டாவது முறையில் செய்யும்போது உருளைக்கிழங்கில் பிசுபிசுப்புத் தன்மை ஏற்படும். சீக்கிரமே கெட்டுப் போய்விடும் குணமும் இதற்கு உண்டு. அதனால், உருளைக்கிழங்கு பொரியல் தயாரிக்க முதலில் நன்றாகக் கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு, நீரில் வேகவைத்து, பின்னர் சமைத்தால் மிகவும் சுவையாகவும், நீண்ட நேரம் கெடாமலும் பிசுபிசுப்பாக இல்லாமலும் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism