Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை... புளிக்காத மோர்க்குழம்பு... ஒட்டாத சாதம்...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

சுகுன ரோஷிணி

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை... புளிக்காத மோர்க்குழம்பு... ஒட்டாத சாதம்...

சுகுன ரோஷிணி

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்
சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...

சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா தின்கர்

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...

மாங்காய் சாதம் செய்வது எப்படி? மாங்காய் சாதத்துக்கு எந்த வகை மாங்காய் சிறந்தது?

- அனுசுயா, சேலம்

மாங்காய் சாதம் செய்வதற்கு கிளிமூக்கு மாங்காய்தான் நன்றாக இருக்கும். இதை திருச்சி, சேலம் பகுதிகளில் ‘கல்லாமணி மாங்காய்’ என்று சொல்வார்கள். கிளிமூக்கு மாங்காய் அதிகம் புளிப்பு இல்லாமல் நல்ல சுவையுடன் இருக்கும். மாங்காயைக் கழுவித் துடைத்து, துருவிக்கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை இவற்றைத் தாளித்துத் துருவிய மாங்காய் சேர்த்துக் கிளறவும். அதிகமாகக் கிளறக் கூடாது. அப்படிச் செய்தால் மாங்காய் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். லேசாகக் கிளறிவிட்டு அதனுடன் உதிராக வடித்த சாதத்தையும், தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கிளறி எடுத்தால் சுவையான மாங்காய் சாதம் ரெடி.

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...
சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...

ஃப்ரிட்ஜில் காய்கறிகள், மாவு, பால் இவற்றை எத்தனை நாள்கள் வைத்திருக்கலாம்... மேலும், உணவுப் பொருள்களை அதில் வைத்து எப்படிப் பயன்படுத்தலாம்?

- கே.சந்திரிகா, சென்னை- 23

ஃப்ரிட்ஜில் காய்கறி, தோசை மாவு, பால் இவற்றை மூன்று அல்லது நான்கு நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம். நீங்கள் வைக்கும் பாத்திரம், மூடி இவற்றைப் பொறுத்து உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்கும். நன்கு இறுக்கமாக மூடி வைத்தால், கெடாமல் நன்றாக இருக்கும். அப்படி இல்லாமல் அரையும் குறையுமாக மூடி வைத்தால் உணவுப் பொருள்கள் சீக்கிரமே கெட்டுப்போகும். ஃப்ரிட்ஜில் வைத்துள்ள உணவுப்பொருளை வெளியே எடுத்து ரூம் டெம்பரேச்சர் வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான் மைக்ரோவேவ் ஓவன் அல்லது ஸ்டவ்வில் சூடு செய்து சாப்பிட வேண்டும்.

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...

ஹோட்டலில் சாப்பிடும் அடை மொறுமொறுவென்று நன்றாக இருக்கிறது. அதேபோல் வீட்டில் செய்வது எப்படி?

- பாகீரதி மணி, செங்கல்பட்டு

அடைக்கு ஊற வைக்கும்போது கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா 300 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றின் அளவைவிட சிறிது குறைவாக அதாவது, 200 கிராம் அளவுக்கு அரிசி எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை 2-3 மணி நேரம் ஊறவைத்து மிகவும் நைசாக அரைக்காமல், கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். கல்லில் எண்ணெய்விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அடை வார்த்தால், மொறுமொறுவென நன்றாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...

கடைகளில் தயாரிக்கும் மசால் வடையைப் போன்று கிரிஸ்பியாக வீட்டில் தயாரிப்பது எப்படி?

- எஸ்.மாலதி, கோவை

மசால் வடைக்குப் பயன்படுத்தும் கடலைப்பருப்பு, உளுந்து இரண்டையும் ஊற வைத்து மிக்ஸியில் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாகக் கலந்து எண்ணெயில் பொரித்தெடுத்தால் மசால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...

எப்போது மோர்க்குழம்பு செய்தாலும் புளிப்புச்சுவை தூக்கலாகவே இருக்கிறது. மோர்க்குழம்பின் புளிப்பைத் தவிர்க்க என்ன செய்வது?

- கீதா மணிகண்டன், ஆம்பூர்

மோர்க்குழம்பு வைப்பதற்கு காரணமே தயிர், மோர் அதிகளவில் மீந்துபோவதுதான். நாள்பட்ட மோர், தயிர் என்றால் நிச்சயம் புளித்துப் போயிருக்கும். இந்தப் புளிப்பை சரி செய்வதற்கு ஒரு சூட்சுமம் உள்ளது. புளிக்காத மோர்க்குழம்பு தயாரிப்பதற்கு மோருடன் சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 28 - மொறுமொறு அடை...
புளிக்காத மோர்க்குழம்பு...
ஒட்டாத சாதம்...

குக்கரில் வைக்கும் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருப்பதால் சாப்பிடப் பிடிப்பதில்லை. உதிரியாக சாதம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

- கனகவள்ளி சண்முகம், காஞ்சிபுரம்

குக்கரில் விசில் வந்து இறக்கியதும், பிரஷரை ரிலீஸ் செய்து வெயிட்டை எடுத்துவிட வேண்டும். உடனே சாதத்தை ஹாட் பேக்கிற்கு மாற்றி வைத்துவிட்டால், குக்கர் சாதம் சாப்பிட மிருதுவாகவும் உதிரியாகவும் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism