Published:Updated:

சமையல் சந்தேகங்கள் - 30 - உதிராத கட்லெட்... சைவ கொத்துப் பரோட்டா... கரிக்காத கருப்பட்டி...

சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

எஸ்.சித்ரா

சமையல் சந்தேகங்கள் - 30 - உதிராத கட்லெட்... சைவ கொத்துப் பரோட்டா... கரிக்காத கருப்பட்டி...

எஸ்.சித்ரா

Published:Updated:
சமையல் சந்தேகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமையல் சந்தேகங்கள்

வாசகிகளின் சமையல் சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்

மல்லிகா பத்ரிநாத்
மல்லிகா பத்ரிநாத்
சமையல் சந்தேகங்கள் - 30 - உதிராத கட்லெட்... சைவ கொத்துப் பரோட்டா... கரிக்காத கருப்பட்டி...

வெஜிடபுள் கட்லெட் கலவையை எண்ணெயில் போடும் போது சில நேரம் உதிர்ந்து விடுகிறது. உதிராமல் முழுதாக எடுக்க என்ன செய்ய வேண்டும்‌?

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

காய்கறிக் கலவையில் அதிக ஈரப்பதம் இருந்தால் கட்லெட் எண்ணெயில் போடும்போது உதிர்ந்துவிடும். வேகவைத்த காய்கறிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை முழுவதும் வடிகட்டிய பின்புதான் தேவைக்கேற்ப பிரெட் தூள் சேர்க்க வேண்டும். பிரெட் தூளுக்கு பதிலாக சிறிதளவு ஓட்ஸை லேசாக வறுத்துப் பொடித்து, காய்கறிக் கலவையோடு சேர்த்தும் செய்யலாம். மக்காச் சோள மாவு (கார்ன்ஃப்ளார்) சேர்த்துச் செய்தாலும் அதன் ருசி மாறாமல் நன்றாக இருக்கும்.

சமையல் சந்தேகங்கள் - 30 - உதிராத கட்லெட்... சைவ கொத்துப் பரோட்டா... கரிக்காத கருப்பட்டி...

கொத்துப் பரோட்டாவை முட்டை கலக்காமல் சுத்த சைவமாக சுவையாகச் செய்யலாமா?

- வி.அன்புச்செல்வி, புதுச்சேரி

தாராளமாகச் செய்யலாம். கடாயில் எண்ணெய்விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி எல்லாம் சேர்ந்து வதக்கவும். பிறகு சிறு துண்டு களாக்கிய பரோட்டாவையும் சேர்த்து ஒரு கரண்டி காய்கறி கிரேவி அல்லது குருமாவைச் சேர்த்து நன்கு புரட்டவும். மசாலாவோடு பரோட்டா துண்டுகள் நன்றாகக் கலந்ததும் சிறிது மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி புரட்டி இறக்கினால் சுவையான, சைவ கொத்துப் பரோட்டா ரெடி.

சமையல் சந்தேகங்கள் - 30 - உதிராத கட்லெட்... சைவ கொத்துப் பரோட்டா... கரிக்காத கருப்பட்டி...

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வைத்து இனிப்பு செய்யும்போது லேசாக உப்பு கரிக்கிறதே... இதைத் தவிர்க்க முடியுமா?

- எல்.கண்மணி, திருச்சி-9

சந்தையில் நல்ல கருப்பட்டியைவிட, கலப்பட கருப்பட்டியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதுதான் காரணம். கருப்பட்டித் துண்டைக் கடித்து மென்றால், அதன் சுவை கரிப்புத்தன்மையுடன்கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால் அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. கருப்பட்டியை மெல்லும்போது வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவையை மட்டும் உணர முடிந்தால் அது போலி. போலி கருப்பட்டியில் உப்புச்சுவை அதிகமாக இருக்கும். இதைத் தவிர்ப்பது நல்லது. நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாக கரையாது. தண்ணீரில் ஒரு துண்டு கருப்பட்டியைப் போட்டால் அது முழுதாகக் கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமே கரைந்து விடும். அதுபோல் ஒரிஜினல் கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலான தாக இருக்கும். இதுவே பளபளப்பாக காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்று அர்த்தம். மொத்தத்தில் ஒரிஜினல் கருப்பட்டியில் இனிப்பு செய்தால் உப்பின் சுவை இருக்காது.

சமையல் சந்தேகங்கள் - 30 - உதிராத கட்லெட்... சைவ கொத்துப் பரோட்டா... கரிக்காத கருப்பட்டி...

கேரட் தவிர வேறு எதிலெல்லாம் கீர் செய்யலாம்?

- சுதா செல்வன், காட்பாடி

கீர் என்பது பாயசம் செய்வது போன்றதுதான். கெட்டியான பதத்தில் இல்லாமல் சிறிது நீர்க்க இருக்க வேண்டும். கேரட் தவிர பிஸ்தா, முந்திரி, பாதாம் உள்ளிட்ட அனைத்து விதமான நட்ஸ், பனீர், தாமரை மொட்டு, பச்சைப்பட்டாணி சேர்த்து என பலவற்றிலும் செய்யலாம். கடைசியாக சிறிது நெய்யில் வறுத்த உலர் பழங்களைத் தூவி அலங்கரித்தால் அனைவரும் விரும்பிச் சாப்பிடு வார்கள்.

கேசரி, அல்வா போன்ற உணவுப்பொருள்களில் ஃபுட் கலர் என்று விதம்விதமான வண்ணங்கள் சேர்க்கிறோம். இந்த வண்ணங்கள் இயற்கையான பொருள்களால்தான் தயாராகின்றனவா, ஆரோக்கியத்துக்கு உகந்தவை தானா?

- அ.யாழினிபர்வதம், சென்னை-78

என்றோ ஒரு நாள் இனிப்புகளில் சிறிதளவு கேசரி கலர் சேர்ப்பதால் எந்தத் தீங்கும் இல்லை. அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இனிப்பு களுக்கு செயற்கை கலருக்கு, பதிலாக சிறிதளவு குங்குமப்பூவை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து கைகளால் கரைத்து, சமைக்கும்போதே சேர்த்துவிட்டால் இளம் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே அழகாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism