Published:Updated:

பினாமி பெயரில் டெண்டர்... ஆபாச அர்ச்சனை... ‘தற்கொலை நாடக’ ஊராட்சித் தலைவி!

மேலூர்
பிரீமியம் ஸ்டோரி
மேலூர்

இவங்களை ‘மேலூர் சொர்ணாக்கா’ன்னுதான் எல்லாரும் சொல்றாங்க. அந்த அளவுக்கு அடாவடி.

பினாமி பெயரில் டெண்டர்... ஆபாச அர்ச்சனை... ‘தற்கொலை நாடக’ ஊராட்சித் தலைவி!

இவங்களை ‘மேலூர் சொர்ணாக்கா’ன்னுதான் எல்லாரும் சொல்றாங்க. அந்த அளவுக்கு அடாவடி.

Published:Updated:
மேலூர்
பிரீமியம் ஸ்டோரி
மேலூர்

நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா, மேலூர் ஊராட்சித் தலைவரும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவருமான ரேணுகாதேவி குறித்த புகார்களும் சர்ச்சைகளும் மாவட்டம் தாண்டியும் பேசுபொருளாகியிருக்கின்றன. பினாமி பெயரில் டெண்டர், பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினால் ஆபாச அர்ச்சனை; தற்கொலை முயற்சி என்று பரபரப்பாகியிருக்கும் மேலூர் ஊராட்சியில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய களமிறங்கினோம்.

ரேணுகாதேவி
ரேணுகாதேவி

ரேணுகாதேவி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார் ஊராட்சித் துணைத் தலைவர் நாகராஜ். “இந்த அம்மாவோட முழு நேரத் தொழிலே கான்ட்ராக்ட்தான். ஊராட்சித் தலைவர் ஆனதும், மாமியார் சரஸ்வதி பேர்ல டெண்டர் எடுத்தாங்க. நாங்க கொடுத்த புகாரால் அதற்குத் தடை வந்தது‌. உடனே தன்னோட கார் டிரைவரையே ‘பினாமி’யாக்கி அவர் பெயரில் டெண்டர் எடுக்குறாங்க. மீன்மலை ஏரியாவுல தடுப்புச் சுவருடன் நடைபாதை அமைச்சுக் கொடுத்ததாக, அவர் போலி பில் போட்டதை ஆர்.டி.ஐ-ல கேட்டுக் கண்டுபிடிச்சோம்‌. இந்த முறைகேடு பிரச்னையிலிருந்து மக்களை திசைதிருப்பவே தற்கொலை நாடகம் போட்டாங்க” என்றார்.

மற்ற வார்டு உறுப்பினர்களோ, “இவங்களை ‘மேலூர் சொர்ணாக்கா’ன்னுதான் எல்லாரும் சொல்றாங்க. அந்த அளவுக்கு அடாவடி. குடிநீர்ப் பிரச்னை பற்றி கலெக்டருக்கு மனுப்போட்டவங்க தெருவுக்கே போய் அசிங்க அசிங்கமாத் திட்டுனாங்க. தவறுகளைத் தட்டிக்கேட்ட மன்ற உறுப்பினர் ஒருத்தரை, ‘கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு. குழந்தை பெத்துக்கத் துப்பில்லை. நீயெல்லாம் என்னைக் கேள்வி கேட்க வந்துட்டியா’ன்னு அசிங்கமாப் பேசிட்டாங்க. இவரை எப்படிங்க மக்கள் அணுக முடியும்?” என்றனர் வேதனையுடன்.

பினாமி பெயரில் டெண்டர்... ஆபாச அர்ச்சனை... ‘தற்கொலை நாடக’ ஊராட்சித் தலைவி!

இந்தப் புகார்கள் குறித்து குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரிடம் கேட்டோம். “சார், நான் இப்போதான் புதுசா வந்துருக்கேன். இவரோட செயல்பாடுகள் சம்பந்தமாக மேலிடத்துக்குப் புகார்கள் போயிருக்கு. மேலதிகாரிகள் விசாரிச்சு நடவடிக்கை எடுப்பாங்க” என்றார்.

நீலகிரி ஆட்சியர் அம்ரித்திடம் கேட்டபோது, “இந்த ஊராட்சியிலிருந்து நிறைய புகார்கள் வந்ததால், ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க துறைசார் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தோம். தற்போது சீல் வைக்கப்பட்ட உறையில் அறிக்கை வந்திருக்கிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

நாகராஜ்
நாகராஜ்
அம்ரித்
அம்ரித்

குற்றச்சாட்டுகள் குறித்து ரேணுகாதேவியிடமே கேட்டோம். “என்னுடைய கார் டிரைவர் சத்யராஜ் டெண்டர் எடுத்து வேலை செய்வது உண்மைதான். எனக்கும் அதுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. என்னுடைய பினாமி சத்யராஜ் என்றும், அவருடன் தகாத உறவில் இருக்கிறேன் என்றும் துணைத் தலைவர் நாகராஜ் மற்றும் சில உறுப்பினர்கள் அவதூறு பரப்பிவருகிறார்கள். இவர்களால் மன உளைச்சல் அடைந்துதான் நான் தற்கொலை வரை சென்றேன். என்மீது வைக்கும் எந்த குற்றச்சாட்டும் உண்மை இல்லை” என்றார்.