Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: தேசிய சராசரியைவிட அதிகமான இறப்பு விகிதம்! - தடுமாறும் உத்தரகாண்ட் அரசு

கொரோனா
கொரோனா

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரனோவின் இரண்டாவது அலை மக்களையும், அரசையும், அடிப்படை வாழ்வியலையும் புரட்டி போட்டுவரும் இந்த வேளையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தேசிய சராசரியைவிட அதிகமாகி நிற்கிறது உத்தரகாண்ட் மாநிலம்.

இந்தியாவிலுள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான உத்தரகாண்ட் மாநிலத்தில், அரசு பல்வேறு கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளபோதும், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. தற்போது வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விகிதம் 4.1% ஐ எட்டியுள்ளது, அத நேரத்தில் இறப்பு விகிதம் 1.4% ஆக உயர்ந்துள்ளது, இது தேசிய சராசரியான 1.13% விட அதிகமாகும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர், குணமடையும் விகிதம் 69.96%-ஆக உள்ளது. இந்த விகிதம் மார்ச் மாதம் வரை 95%-ஆக இருந்தது. இரண்டாம் அலை கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா
Channi Anand

இவர்களில் நேற்று மட்டும் 1,471 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஐந்து நாள்களில் மட்டும் 250 பேர் இறந்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக அதிகரித்துவரும் தொற்று பாதிப்பால், அந்த மாநில அரசு திங்கட்கிழமை முதல் வார ஊரடங்கை பிறப்பித்திருக்கிறது. டேஹ்ராடூன் மாவட்டம் அதிகபட்ச நோய்தொற்றுக்குக் காரணமாக உள்ளது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ் அவசியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சைக்கு என 52 சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு