Published:Updated:

கொரோனாகால பி.எஃப் முன்பணம்! - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு?

பி.எஃப் 
முன்பணம்
பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப் முன்பணம்

பிராவிடன்ட் ஃபண்டை ஒருபோதும் யாராலும் நிறுத்த முடியாது. அது ஊழியரின் சொந்தச் சேமிப்பு.

கொரோனாகால பி.எஃப் முன்பணம்! - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு?

பிராவிடன்ட் ஃபண்டை ஒருபோதும் யாராலும் நிறுத்த முடியாது. அது ஊழியரின் சொந்தச் சேமிப்பு.

Published:Updated:
பி.எஃப் 
முன்பணம்
பிரீமியம் ஸ்டோரி
பி.எஃப் முன்பணம்
ன்றாட வாழ்க்கைச் சூழலையே புரட்டிப் போட்டிருக்கிறது கொரோனா பெருந்தொற்று.

‘கொரோனா பேரிடர் ஊரடங்கில், ஊழியர்கள் பணச் சிக்கலால் பாதிக்கப்படக் கூடாது’ என்ற நல்ல நோக்கத்தில், பி.எஃப்-ல் சேர்த்து வைத்த பணத்தில் சிறப்பு முன்பணம் பெற விதிமுறை திருத்தம் ஒன்றைச் செய்தது மத்திய அரசு. இதன்படி, நாடெங்குமுள்ள ‘எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட்’ (EPF - Employees Provident Fund) ஊழியர்கள், தங்களது பிராவிடன்ட் ஃபண்டிலிருந்து ‘கொரோனா’ சிறப்பு முன்பணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாகால பி.எஃப் முன்பணம்! - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊழியர்களின் மூன்று மாதச் சம்பளம் அல்லது அவரது பி.எஃப் கணக்கில் உள்ள தொகையில் 75% இரண்டில் எது குறைவோ அதை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு ஆவண ஆதாரம் எதுவும் தரத் தேவையில்லை. உடல்நலக் குறைவு, கல்விச் செலவு போன்றவற்றுக்காக சமீபத்தில் கடன் வாங்கியிருந்தாலும், இந்தச் சிறப்பு முன்பணத்தைப் பெறலாம். விண்ணப்பித்த 72 மணி நேரத்தில் வங்கிச் கணக்கில் பணம் வந்துசேரும் என்பதெல்லாம் இதிலிருக்கும் கவர்ச்சிகரமான அம்சங்கள். 

இந்தச் சலுகையைப் பயன்படுத்தி 9.6 லட்சம் பி.எஃப்  உறுப்பினர்கள் ரூ.2,985 கோடியைத் திரும்ப எடுத்திருக்கிறார்கள். அதாவது, சராசரியாக ஓர் ஊழியர் எடுத்தப் பணம் ரூ.31,093 (06.05.2020 வரையான கணக்கு இது. ‘பிராவிடன்ட் ஃபண்ட்’ என்பது ஊழியர்களின் ஓய்வுக்காலத்துக்கான ஊன்றுகோல். இதிலுள்ள பணத்தை எடுக்க எடுக்க ஊன்றுகோலின் உயரம் குறைந்துவிடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்கள்கூட பி.எஃப் பணம் பெற்றுள்ளதை நியாயப்படுத்திவிடலாம். ஏனென்றால் இவர்களில் பலர் ரூ.10,000 - 15,000 என்ற அளவில் மாதச் சம்பளம் பெறுபவர்கள். ஆனால், இ.பி.எஃப் அமைப்பில் சேராத வேறு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இதைவிட அதிகமான பணத்தைத் தங்கள் கணக்கிலிருந்து எடுத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

கொரோனாகால பி.எஃப் முன்பணம்! - முதிர்வுத் தொகையில் என்ன பாதிப்பு?

இந்த ஊழியர்கள் அனைவருமே இ.பி.எஃப் அமைப்பைச் சேர்ந்தவர்களல்ல. இ.பி.எஃப் அமைப்பில் சேருவதிலிருந்து விலக்களிக்கப் பட்ட (Exempted) நிறுவனங்களும் உண்டு. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் (TCS) போன்ற தனியார் துறை பெருநிறுவனங்கள், ஓ.என்.ஜி.சி போன்ற தன்னாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் என ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இ.பி.எஃப்.ஓ அமைப்பில் அங்கம் வகிக்கவில்லை. இந்த நிறுவனங்கள், தங்களது ஊழியர்களின் பி.எஃப் கணக்கைத் தாமே நிர்வகித்துக்கொள்பவை. இவற்றின் ஊழியர்களும் கொரோனா பேரிடர் காலத்தில் பி.எஃப்-லிருந்து முன்பணம் பெற்றுள்ளனர்.

பி.எஃப் 
முன்பணம்
பி.எஃப் முன்பணம்

 அவ்வாறு முன்பணம் வழங்கிய நிறுவனங்களின் வகை, முன்பணம் வாங்கிய ஊழியர் எண்ணிக்கை, சராசரியாக ஒவ்வொரு ஊழியரும் பெற்றுள்ள முன்பணத் தொகை தற்போது பெற்றுள்ள முன்பணம் காரணமாக, இன்னும் 25 ஆண்டுகள் கழித்து ஓய்வுபெறும்போது ஏற்படும் முதிர்வுத் தொகை இழப்பு ஆகியவை பரிசீலிக்கப்பட வேண்டியவை. (பார்க்க மேலே உள்ள அட்டவணை). இவர்களுள், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 3,255 ஊழியர்கள் பெற்றுள்ள மொத்த முன்பணம் ரூ.84.4 கோடி. அதாவது, ஓர் ஊழியர் பெற்ற சராசரி முன்பணம் ரூ.2,59,293. மற்ற நிறுவன ஊழியர்கள் பெற்றுள்ள தொகையைவிட அதிகம்.

‘இதில் என்ன தவறு? பணத்தேவை என்று வரும்போது பி.எஃப்-ல் இருக்கும் பணத்தை எடுக்காமல், வேறென்ன செய்வது?’ என்று ஊழியர்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். சேர்த்துவைத்த பி.எஃப் பணத்திலிருந்து ஒருபகுதியை எடுப்பதில் தவறில்லைதான், ஆனால், இப்போது வந்துபோன ஊரடங்கைப் போல, இன்னொரு ஊரடங்கு இனி வரவே வராது என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படியொரு நெருக்கடி மீண்டும் வந்தால், அந்தக் கஷ்டத்தைச் சமாளிக்கத் தேவையான பணத்துககு எங்கே போவது? தவிர, கொரோனாவின் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவால், பெருநிறுவனங்களேகூட 10% - 50% வரை சம்பளக் குறைப்பு செய்துள்ளன. அரசு ஊழியர்களுக்கேகூட பலவகையான சலுகைகளை இழக்கவேண்டிய நிலை. அவ்வளவு ஏன், நிதி நெருக்கடி காரணமாக பென்ஷன், கிராஜுவிட்டி போன்றவைகூட குறைக்கப்படலாம் என்பதே இன்றைய நிலை.

* 27.04.2020 அன்று உள்ள நிலவரம். வட்டி 7% (வரிசை எண் 5 மட்டும் 8% வட்டி 6.5.2020 நிலவரம்) 
* 27.04.2020 அன்று உள்ள நிலவரம். வட்டி 7% (வரிசை எண் 5 மட்டும் 8% வட்டி 6.5.2020 நிலவரம்) 

ஆனால், பிராவிடன்ட் ஃபண்டை ஒருபோதும் யாராலும் நிறுத்த முடியாது. அது ஊழியரின் சொந்தச் சேமிப்பு. அதுவும் கட்டாயச் சேமிப்பு. எனவே பி.எஃப் பணத்தில் எவரும் உரிமை கோர முடியாது. அரசோ, நிறுவனமோ நினைத்தால்கூட அதைத் தனது செலவுக்கு எடுத்துக்கொள்ள முடியாது. வருவாய் நீதிமன்றமோ, உரிமையியல் நீதிமன்றமோ, குற்றவியல் நீதிமன்றமோ, ஊழியர் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது பி.எஃப் தொகையைப் பிணையாக்க (Attachment) முடியாது.

இத்தனை பாதுகாப்பு அம்சம் கொண்ட ஒரே நிதியைச் ‘சங்கடம்’ என்று வந்தால் மட்டுமே எடுக்க நினைக்கவேண்டுமே தவிர, ‘சந்தர்ப்பம்’ கிடைக்கும்போதெல்லாம் எடுக்க முயலக்கூடாது.