Published:Updated:

Corona Live Updates: `ஒரே நாளில் 3,965 பேருக்கு தொற்று; 3,591 பேர் டிஸ்சார்ஜ்’ - தமிழகத்தில் கொரோனா நிலவரம்

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

11.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

11 Jul 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்:

தமிழகத்தில், இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 85,915 ஆக உயர்ந்தது. பலி எண்ணிக்கை 69 ஆகக் கூடிய நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று
கொரோனா தொற்று
Pixabay

சென்னையில் மேலும் 1,185 பேருக்கு தொற்று:

சென்னையில் மட்டும், இன்று 1,185 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து எட்டாவது நாளாக 2,000-க்கும் குறைவாகப் பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,158 ஆக அதிகரித்துள்ளது.

11 Jul 2020 5 PM

கே.பி.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது:

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது என அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 Jul 2020 10 AM

இந்தியாவில் 8 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,20,916 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 519 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,385 ஆகவும் உயர்ந்துள்ளது.

11 Jul 2020 9 AM

உலகளவில் கொரோனா:

கொரோனா
கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,30,634 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 73,66,487 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,62,888 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு