Published:Updated:

இறந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! - பூஸ்டர் டோஸ் போடவும் வருவார்களா?

கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

ஒரு தடுப்பூசிக் குப்பியைத் திறந்தால் 10 பேருக்கு டோஸ் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அது வீணாகிவிடும்.

இறந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! - பூஸ்டர் டோஸ் போடவும் வருவார்களா?

ஒரு தடுப்பூசிக் குப்பியைத் திறந்தால் 10 பேருக்கு டோஸ் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அது வீணாகிவிடும்.

Published:Updated:
கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில், இறந்துபோன லட்சுமி என்ற பெண்மணி அரசு மருத்துவமனைக்கு வந்து இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகச் சான்றிதழ் வழங்கி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் மருத்துவத்துறையினர்.

இது தொடர்பாக லட்சுமியின் மகன் செல்வகுமாரிடம் பேசினோம். “ஈரோடு மாவட்டம், பனையம்பள்ளியில் வசித்துவந்த என் தாயார் லட்சுமி (60) பி.புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் 2021, டிசம்பர் 18-ல், கோவாக்சின் முதல் டோஸைப் போட்டுக்கொண்டார். ஏற்கெனவே இருந்த உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 1-ம் தேதி தவறிவிட்டார். இறந்த என் தாயார், அதே மருத்துவமனையில் ஜூலை 24-ம் தேதி, இரண்டாம் டோஸ் செலுத்திக் கொண்டதாக, அவரது எண்ணுக்குக் குறுஞ்செய்தி வந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, முறையான விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை” என்றார்.

இறந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! - பூஸ்டர் டோஸ் போடவும் வருவார்களா?

இறந்த நபருக்குச் சான்றிதழ் கொடுப்பது இது முதன்முறையல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா (66) கடந்த 2021 மே 22-ம் தேதியே இறந்துவிட்டார். பின்னர் ஐந்து மாதங்கள் கழித்து அக்டோபர் 28-ம் தேதி அவர் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டதாகக் குறுஞ்செய்தி வந்திருந்தது.

இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். “ஒரு தடுப்பூசிக் குப்பியைத் திறந்தால் 10 பேருக்கு டோஸ் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அது வீணாகிவிடும். அவ்வாறு வீணாகும்போது, மேலதிகாரிகள் திட்டுவார்கள் என்ற அச்சத்தில் கீழ்மட்டப் பணியாளர்கள், நீண்ட நாள்களாக இரண்டாம் டோஸ் போடாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் தடுப்பூசி போட்டதாகப் பொய்யாக ‘என்ட்ரி’ செய்துவிடுகிறார்கள். இந்தப் பிரச்னை கொரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய காலத்திலிருந்தே இருக்கிறது” என்ற `பகீர்’ தகவலைச் சொன்னார்கள். போடாதவர்களுக்கு போட்டதாகக் கணக்கு காட்டி, தனியார் மருத்துவ மனைகளுக்கு தடுப்பூசிகள் விற்கப்படுவதாகவும் சந்தேகம் கிளப்புகிறார்கள் சிலர்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இது தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``தொழில்நுட்ப தவறுகள் காரணமாகவே சிலருக்கு தவறாக மெசேஜ் சென்றிருக்கிறது. கிட்டத்தட்ட 10 புகார்கள் வந்ததுமே அதை உடனடியாகச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குச் செலுத்திய தாகச் சொல்லவேண்டிய அவசியம் எதுவுமில்லை. வீதி வீதியாக, தெருத் தெருவாக அலைந்து திரிந்து, கெஞ்சிக் கூத்தாடி தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறோம். இலவசமாகச் செலுத்துவதற்கே இந்தப்பாடு எனும்போது, அதை விற்பனை செய்ய வாய்ப்பே இல்லை” என்றார்.

லட்சுமி
லட்சுமி
இறந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! - பூஸ்டர் டோஸ் போடவும் வருவார்களா?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 96.21 சதவிகிதம் பேர் முதல் டோஸும், 90.07 சதவிகிதம் பேர் இரண்டாவது டோஸும், 14.96 சதவிகிதம் பேர் பூஸ்டர் டோஸும் செலுத்தியிருப்பதாகச் சொல்கிறது மருத்துவத்துறை. இப்படிக் கணக்கு காட்டுவதற்காக, இறந்தவர்கள் இரண்டாம் டோஸ் போட்டதாகச் சொன்னவர்கள், அடுத்து அவர்கள் பூஸ்டர் டோஸ் போட வந்ததாகவும் சொல்லாமல் இருந்தால் சரி!