ஏறத்தாழ நூறு நாடுகளைத் தாண்டி `கோவிட்-19' கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் சூழலில், கடந்த இரு வாரங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளனர் அதிகாரிகள்.

இத்தகைய சூழலில் கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் ஆரோக்கியம் குறித்த விஷயங்களில் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

இதுகுறித்து மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் விளக்குகிறார்.

`கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், அவர்களின் தாய்மார்கள் என யாராக இருந்தாலும் சுயசுத்தம் மூலமாக கொரோனாவை எளிதாகத் தடுத்துவிடலாம்.

சோப் வாட்டர் அல்லது ஹேண்ட் வாஷ் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுவது.

ஹேண்ட் சானிடைஸர் உபயோகிப்பது.

வீட்டில் தரைப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது.

இருமல், தும்மலின்போது உள்ளங்கையால் வாய் மற்றும் மூக்கை மூடுவதற்குப் பதில், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பயன்படுத்துவது.

ஒருவேளை கைக்குட்டை அல்லது டிஷ்யூ கிடைக்காவிட்டால், முழங்கைக்குக் கீழே தும்முவது, இருமுவது.

கூட்டமான, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது.

கொரோனா பாதிப்புள்ள வெளிநாட்டு - உள்நாட்டு பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது.

காய்ச்சல், இருமல், தும்மல் தொந்தரவுகள் தெரியவந்தால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது.

தாய்ப்பால் கொடுக்கும் முன், தாய்மார்கள் சுயசுத்தத்தை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பவர்கள் தங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சளி, இருமல் தொந்தரவுள்ள தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், குழந்தைகளின் பொருள்களைக் கையாள்வதில் கவனமாக இருத்தல் அவசியம்.

பெற்றோர் இருவரும், குழந்தைகளுக்கு சுய சுத்தத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஹேண்ட் வாஷ் உபயோகிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்து வது கட்டாயம்.

சில குழந்தைகளுக்கு, கைகளை அடிக்கடி முகத்துக்குக் கொண்டு செல்லும் பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கத்திலிருந்து அவர்களை வெளிக்கொணரவும்.

குழந்தைகள் எப்போதும் காற்றோட்டமான இடத்தில் இருப்பது நல்லது.

பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சுய சுத்தத்தை எடுத்துரைக்கும்போது, அவர்களுக்கு நோய் குறித்த தகவல்களைக் கதையாகச் சொல்வது நல்லது. காரணம், கொரோனா குறித்து அப்படியே சொன்னால், குழந்தைகள் பதற்றம் அல்லது பயம் கொள்ள நேரிடும்.

கொரோனா மற்றும் சுய சுத்தம் சார்ந்த சந்தேகம் ஏதும் குழந்தைகளுக்கு இருக்கிறதா எனப் பெற்றோர் அவ்வப்போது விசாரித்து, அவற்றை முறையாகத் தெளிவுபடுத்தவும்.

சுய சுத்தத்தை குழந்தைகள் பின்பற்றுகிறார்களா என்பதைப் பெற்றோர் அடிக்கடி உறுதிசெய்யவும்.

சளி, இருமல் தொந்தரவுள்ள தாய்மார்கள், குழந்தை யோடு நேரம் செலவிடும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தொற்றுப்பிரச்னைக்கான தீவிரம் அதிகமுள்ள குழந்தைகள், சுவாச சிக்கல்கள் உள்ள குழந்தைகள் ஆகியோரை, பெற்றோர் கூடுதல் அக்கறையோடு கவனித்துக்கொள்ள வேண்டும். உடல்நலன் விஷயத்தில் வழக்கத்துக்கு மீறிய, இயல்புக்கு அப்பாற்பட்டு இந்தக் குழந்தைகள் ஏதேனும் செய்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

தாய்ப்பால் கொடுத்தால், கொரோனா பரவும்.

கர்ப்பிணிகள், மிகச் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு கொரோனா பாதிப்பு எளிதில் ஏற்படும்.

கர்ப்பிணிக்கு பாதிப்பு ஏற்பட்டால், சிசுவின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், கருக்கலைப்பு நிகழலாம்.

இருமல் தும்மல் இருந்தாலே, அது கொரோனா பாதிப்புதான்.

கொரோனா பாதிப்பில், இறப்பு விகிதம் அதிகம்.

மேற்கண்ட ஆறு தகவல்களும் அறிவியல் அடிப்படையற்ற வெற்று வதந்திகளே... கவலை வேண்டாம்!

சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் தெரியவரும் குழந்தைகளுக்குப் பள்ளியில் கட்டாய விடுப்பு கொடுக்கவும்.

இருமல், தும்மல் போன்ற சிக்கலுள்ள குழந்தைகளுக்கு, முழங்கைக்கு அடியில் தும்முவது, இருமுவதைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும்விட முக்கியமானது, கொரோனா குறித்து பதற்றமடையாமல் இருப்பது. நமக்குத் தேவைப்படுவதெல்லாம் விழிப்புணர்வு மட்டும்தானே அன்றி, பயம் இல்லை!

24 மணி நேர கொரோனா உதவி எண்கள்

24 மணி நேர உதவி எண்: 104 / 011-23978046

தொலைபேசி: 044-29510400 / 044-29510500

கைப்பேசி: 9444340496 / 8754448477

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மேற்கண்ட எண்களில் உடனே தொடர்பு கொள்ளுங்கள்.