Election bannerElection banner
Published:Updated:

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத இந்த 5 நாடுகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத ஐந்து நாடுகள்
கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத ஐந்து நாடுகள் ( Facebook )

கொரோனாவால் பாதிக்கப்படாத சில நாடுகள் உள்ளன. அங்கு கொரோனா தொற்றால் பத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவில் பல நாடுகள் இன்னும் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. எல்லாம் 2021-ல் சரியாகிவிடும், உலகம் மீண்டும் பழைய இயல்புக்குத் திரும்பிவிடும் என அனைவரும் நினைக்க, வேறொரு புதிய நிலைக்கு உலகம் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், இந்தச் சூழலிலும் கொரோனாவால் பாதிக்கப்படாத சில நாடுகள் உள்ளன. அங்கு கொரோனா தொற்றால் பத்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் நாடுகள் குறித்து மட்டும் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம்.

மைக்ரோனேசியா (Federated States of Micronesia)

`இங்கு கொரோனாவால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்’ என்கிறது கொரோனா தொற்று குறித்த தகவல்களைத் தொடக்கத்திலிருந்து வழங்கிக்கொண்டிருக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இணையதளம்.

மைக்ரோனேசியா
மைக்ரோனேசியா
https://www.facebook.com/piofsm/ Richard Andrew Clark

மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தொகுப்புகளின் நாடு மைக்ரோனேசியா. இங்கு 600-க்கும் அதிகமான தீவுகள் உள்ளன. இந்த நாட்டின் மக்கள்தொகை 5,50,000. இந்த நாட்டின் பரப்பளவு 700 சதுர கி.மீ.

கொரோனா சார்ந்த ஓர் இறப்புகூட அங்கு பதிவாகவில்லை.

வனுவாட்டு (Vanuatu)

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தரும் தகவல்களின்படி இங்கு கொரோனாவால் மூவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் தீவுகளின் தொகுப்புதான். ஏறத்தாழ 80 தீவுகள் இங்கு உள்ளன. ஆஸ்திரேலியா பக்கத்தில் இந்த நாடு அமைந்துள்ளது.

வனுவாட்டு
வனுவாட்டு
https://www.facebook.com/LivingInVanuatuPage/ Richard Andrew Clark

ஒரு சமயத்தில் இந்த நாடு பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது.

சமோவா

சமோவா
சமோவா
https://www.facebook.com/samoagovt/

சமோவா. இதுவும் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு நாடுதான். இங்கு, மூன்று பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் நியூசிலாந்தின் காலனி நாடாக இருந்த இந்த நாடு 1961-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இந்த நாடும் தீவுகள் கூட்டம்தான். இந்த நாட்டின் மக்கள்தொகை இரண்டு லட்சம்.

மார்ஷல் தீவுகள் (Marshall Islands)

வெறும் 55,000 பேர் வசிக்கும் தீவு நாடு இது. இங்கு இதுவரை நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மார்ஷல் தீவுகள்
மார்ஷல் தீவுகள்
https://www.facebook.com/Republic-of-the-Marshall-Islands

போர்ச்சுக்கீசியர்கள், ஜெர்மன், ஸ்பெயின், ஜப்பான், அமெரிக்கா என பல்வேறு நாடுகள், பல்வேறு காலகட்டங்களில் இந்த நாட்டை ஆக்கிரமித்திருந்தன.

இந்த நாடு தனிநாடாக இருந்தாலும், இப்போதும் அமெரிக்கக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

பசிபிக் பெருங்கடலில்தான் இந்த நாடும் அமைந்துள்ளது.

சாலமன் தீவுகள் (Solomon Islands)

பப்புவா நியூகினியாவுக்கு தென் கிழக்கே அமைந்துள்ள தீவுகளின் கூட்டம் இது. இப்போதுவரை அங்கு கொரோனாவால் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவு. இந்த நாட்டின் மக்கள்தொகை ஏறத்தாழ 7 லட்சம்.

சாலமன் தீவுகள்
சாலமன் தீவுகள்
https://www.facebook.com/VisitSolomonIslands/

மீன்பிடித் தொழில்தான் இந்த நாட்டின் பிரதான தொழில்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு