இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், மத்திய அரசு வெளியிட்ட ஓர் அறிவிப்பு கவனம் பெற்றது.

‘21 நாள்கள் ஊரடங்கு முடிந்த பிறகு அதை மத்திய அரசு நீட்டிக்கும் என வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை. அதுபோன்ற எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை’ என்று மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் மார்ச் 22-ம் தேதி `மக்கள், சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி, ‘அடுத்த 21 நாள்களுக்கு அதாவது ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது’ என்று அறிவித்தார். மேலும், பொதுமக்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்பைப் பற்றிய விழிப்புணர்வு எதுவுமில்லாமல் அலட்சியமாக இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

இந்த நிலையில், மத்திய அரசிடமிருந்து ‘ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை’ என வந்திருக்கும் அறிவிப்பு, மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக் கிறது. இந்த ஊரடங்கு தொடர்பாக ஆராய்ச்சி நடத்தியுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ராஜேஷ் சிங் மற்றும் ரோனாஜாய் அதிகரி ஆகியோர், ‘இந்தியாவில் ஊரடங்கை 49 நாள்களாக அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

‘‘தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், நோயாளிகளையும் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் எளிதில் கண்டறிந்து தனிமைப்படுத்த முடிகிறது. அவர்களிடமிருந்து வேறு நபர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கவும் முடியும். ஊரடங்கு தளர்த்தப்பட்டால், மக்கள் வெளியிடங்களில் புழங்க ஆரம்பித்துவிடுவார்கள். இதனால் நோய் தாக்கியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதும், அவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிப்பதும் சவாலாகி விடும்’’ என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து தொற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம். ‘‘நோய் பரவல் என்பது குறிப்பிட்ட 21 நாளைக்குள்ளோ ஒரு மாதத்துக்குள்ளோ கட்டுக்குள் வரும் என கணிக்க முடியாது. சமூகத்தில் எத்தனை பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் பரவல் எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதைக் கருத்தில்கொண்டு தான் சமூகத்திலிருந்து தனித்து இருத்தலைத் தீர்மானிக்க முடியும்.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆறு மாதங்கள் வரை ஊரடங்கை நீட்டிக்கத் திட்ட மிட்டுள்ளன. வளர்ந்த நாடுகள் என்பதால் அங்கெல்லாம் பெரிய பிரச்னை இருக்காது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு களிலிருந்து மீளுதல் என இரண்டையும் சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும். அப்படிச் சமாளிக்க முடிந்தால் 49 நாள்கள் மட்டுமல்ல, எத்தனை நாள்கள் தேவையோ அத்தனை நாள்கள் நீட்டிக்க முடியும்.

தற்போது நாட்டில் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நோயைக் கண்டறியும் பரிசோதனை களும் அதிகரித்துவருகின்றன. பரிசோதனைகள் அதிகரிக்கப்பதால், நோய்த்தொற்று உள்ளோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால், ஏப்ரல் 10-ம் தேதிக்குள் நாட்டின் உண்மையான நிலை என்ன என்பது ஓரளவு தெரிந்துவிடும். அதன் அடிப்படையில் ஊரடங்கு குறித்து முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

மருத்துவரும் சமூகச்செயற் பாட்டாளருமான பாரதி செல்வன், , ‘‘இந்த 21 நாள்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் அரும்பல் காலம் (Incubation Period) முடிந்து, சளி, இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விடும். தற்போது எல்லோரும் ஊரடங்கில் இருப்பதால் அறிகுறிகள் தெரிந்தவுடன் அந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனை களை அணுகிவிடுவர். அப்போது நோயாளி யுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களையும் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை தனிமைப் படுத்துவதன் மூலம் சமூகத்தில் நோய் பரவாது. அதனால் இன்னும் இரண்டு வாரங்களாவது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். அதற்குப் பிறகு தேவைப்பட்டால், எந்தப் பகுதியில் நோய் பரவல் காணப்படுகிறோ அந்தப் பகுதியில் மட்டும் ஊரடங்கை நீட்டிக்கலாம்.

தற்போது இந்தியாவில் முழு ஊரடங்கு பின்பற்றப்படவில்லை. அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் வகையில் தளர்த்தப்பட்ட ஊரடங்குதான் அமலில் உள்ளது. அதே நிலையை இன்னும் 14 நாள்களுக்கு தொடர வேண்டும்’’ என்றார்.

‘‘கொள்ளை நோய் பரவிவரும் இந்த நேரத்தில், ஊரடங்கு நாள்களை அதிகரிக்காமல் பத்து நாள்கள் இடைவெளிவிட்டால்கூட இத்தனை நாள்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி, தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுவோம்’’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பது நோக்கமல்ல; கொரோனா இந்தியாவில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் நோக்கமும். அதை அறிந்து மத்திய, மாநில அரசுகளும் செயல்பட வேண்டும்.