பிரீமியம் ஸ்டோரி

கொரோனாவின் இரண்டாம் அலை மிக மோசமாக இருக்கிறது. அந்நியன் போல முதலில் வந்தபோது, அதன் தன்மை பற்றி தெரியாமல் அதைச் சமாளிக்க முடியாமல் திணறியது சரி. ஆனா, ஓராண்டைக் கடந்தும் இன்னமும் குறைந்தபட்ச பாதுகாப்பு உணர்வுகூட இல்லாமல் கொரோனாவை எதிர்கொள்வது சரியாகாது. அரசும் மற்றவர்களும் செய்வதெல்லாம் இருக்கட்டும். நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இந்த இதழில் அதைப் பார்க்கலாம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். எதிர்ப்புச் சக்தி தரும் உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். நிலைமை சீராகும் வரை சுற்றுலாக்களைத் தவிருங்கள். முக்கியமாக, இது தற்காலிகமான சூழல். விரைவில் உலகம் சரியாகும் என நம்பிக்கையோடு இருங்கள்.

உங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவ தேவைக்கென முடிந்தவரை கையில் கொஞ்சம் பணம் வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற பொருள்களை இப்போது வாங்காமல் தவிர்க்கவும். நிலைமை சீராகும்வரை பொறுமையாக இருக்கலாம். தவறில்லை.

திருமணம் உள்ளிட்ட பல விஷயங்கள் வாழ்வில் ஒரு முறை நடக்குமென அவற்றை முக்கியமென நினைக்க வேண்டாம். கொரோனாவை விட வேறு எதுவுமே இப்போது முக்கியமில்லை. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நம் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்கிறார்கள். அதனால், `ஸூம்' மூலம் வாழ்த்தினால் போதும்.

ஊரடங்கை அரசு அறிவிப்பது இருக்கட்டும். நாமே நமக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம். அரசு தடுக்காது. தேவையின்றி வெளியில் செல்வது, தேவைக்காகச் சென்றால் தனிமனித இடைவெளியை எல்லா சூழலிலும் உறுதி செய்வது, மாஸ்க் அணிவது, அவ்வப்போது கைகளைக் கழுவுவது என ‘சுய கட்டுப்பாடு’ நமக்கும் நம் குடும்பத்துக்கும் நல்லது.

விழிப்புணர்வு என்பது அரசு மட்டுமே செய்யும் விஷயமல்ல. நாம் அனைவரும் செய்யலாம். கொரோனா பற்றிய பயமில்லாமல் இருப்பவர் களிடமும், அதன் கோரமுகம் பற்றித் தெரிந்து கொள்ளாதவர் களிடமும் உறுதி செய்யப்பட்ட தகவல்களைப் பகிருங்கள். அவர்களையும் பாதுகாப்பாக இருக்கச் சொல்லுங்கள். அதற்காகத் தேவையற்ற, உறுதி செய்யப்படாத வாட்ஸ்அப் தகவல்களை அனுப்பாதீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு