லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

அப்பார்ட்மென்ட் கொரோனா அலர்ட்... - குடியிருப்போருக்கான பாதுகாப்பு டிப்ஸ்

அப்பார்ட்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பார்ட்மென்ட்

- ரேவதி

உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடூர வைரஸ் இரண்டாம் பேரலையாகத் தமிழகத்தைக் கண்ணீர் சிந்த வைத்துக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் பீதியைக் கிளப்புகின்றன.

சென்ற முறை கொரோனா தாக்கியவர்களை, இழிவாகப் பார்க்கப்பட்ட நிலை மாறி, இன்று, எங்கள் பையனுக்கு கொரோனா, மாப்பிள்ளைக்கு கொரோனா என்று பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்ளும் நிலை உருவாகி யிருக்கிறது. குடும்பம் குடும்பமாக, கொத்துக்கொத்தாகப் பாதிக்கப்படுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். பாதுகாப்பு என்ற ஓற்றை வார்த்தைதான் அனைவருக்கும் இன்றைய தாரக மந்திரம்.

சிறிய, பெரிய குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பத் தினருக்கு அந்தப் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய சென்னை குடியிருப்புகளை அலசினோம். அந்த வகையில் மணப்பாக்கத்தில் 114 குடியிருப்புகள் அடங்கிய ஐசிஐபிஎல் அமோரா (ICIPL AMORA) குடியிருப்பு ஆச்சர்யமளிக்கிறது.

அந்தக் குடியிருப்பு நலச் சங்கத்தின் துணைத் தலைவரான அருண் கிஷோர் பாதுகாப்பு பற்றியும் இங்கு வசிக்கும் பெண்கள் சிலர் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அப்பார்ட்மென்ட் கொரோனா அலர்ட்... - குடியிருப்போருக்கான பாதுகாப்பு டிப்ஸ்

அருண் கிஷோர்

``85 முதல் 90 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. அத்தனை குடும்பங்களையும் பாதுகாக்க தனியாக ஒரு குழுவை அமைத்தோம். கண்டிப்பாக மாஸ்க் அணிவது, சானிடைஸர் போடுவது மற்றும் வரும் எல்லோரையும் டெம்ப்ரேச்சர் செக் பண்ணி உள்ளே அனுமதிப்பது போன்றவற்றைக் கடைப்பிடித்தோம். செக்யூரிட்டி உள்ளிட்ட ஊழியர்களுக்கு மாஸ்க், கிளவுஸ் கொடுத்தோம். வெளியாட்கள் யாரும் உள்ளே வராமல் தடுத்ததுதான் எங்களின் முதல் வேலை. டோர் டெலிவரியும் கிடையாது. காலை பால் போடுபவருக்கு மட்டும் அனுமதி. ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தால், கேட்டுக்கு வெளியேயே நிற்க வைத்து உரிய நபர்களை வந்து வாங்கிக்கொள்ளச் சொல்கிறோம். குடியிருப்பில் உள்ள அனைவரும் சேர்ந்து வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து தினமும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோம். குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்குகிறோம். கார்ப்பரேஷன் உதவியுடன் எங்கள் இடத்துக்கே வந்து கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது. வயதானவர்கள், குழந்தைகள் என எல்லா வயதினரும் இருப்பதால் இங்கு தொற்று ஏற்படாத அளவுக்கு எப்போதும் அலர்ட்டாகவே இருக்கிறோம்.''

அப்பார்ட்மென்ட் கொரோனா அலர்ட்... - குடியிருப்போருக்கான பாதுகாப்பு டிப்ஸ்

பத்மஜா

``என் கணவருக்கு கொரோனா வந்தது. எனக்கும் மைல்டா இருந்தது. அசோஷியேஷன்ல சொன்னோம். அவங்களே என் கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, எல்லா ஏற்பாடு களும் பண்ணித் தந்தாங்க. இப்ப நல்லா இருக்கார். நாங்க தடுப்பூசியும் போட்டுக்கிட்டோம். இப்போ கார்டனிங் கில் அதிகமா கவனம் செலுத்தறேன். மாடியில் கத்திரி, வெண்டை, தக்காளி, கீரை, புதினான்னு நிறைய காய்கறிகள் போட்டிருக்கேன். அதைத்தான் சமைச்சு சாப்பிடுறோம். சமூக இடைவெளி விட்டு வாக்கிங் போறோம். யோகாவும் தியானமும் பண்றோம். பயமில்லாம இருக்கோம்.''

அப்பார்ட்மென்ட் கொரோனா அலர்ட்... - குடியிருப்போருக்கான பாதுகாப்பு டிப்ஸ்

ஜோதி

``யாராவது மாஸ்க் போடாம இருந்தாலோ, ஒழுங்கா போடலைன்னாலோ உடனே அலர்ட் செய்தி அனுப்பிடுவாங்க. காய்ச்சல், தொண்டைவலி இருந்தா உடனே அசோசி யேஷன்ல சொல்லிடணும். அவங்களைத் தனிமைப்படுத்திக்கச் சொல்லி, தேவையான உதவிகளைச் செய்யுறாங்க. யாராவது வெளியிலிருந்து வர்றாங்கன்னா அவங்க பெயரை பதிவு செய்யணும். மை கேட்-னு ஒரு ஆப்(APP)பை எல்லோரும் டௌன்லோடு பண்ணிருக்கோம். அதன் மூலம் யார் வந்தாலும், சம்பந்தப்பட்டவங்களுக்கு செய்தி போயிடும். அதிகபட்ச பாதுகாப்போடு இருக்கோம்.''

அப்பார்ட்மென்ட் கொரோனா அலர்ட்... - குடியிருப்போருக்கான பாதுகாப்பு டிப்ஸ்

லலிதா

``ஹவுஸ் மெய்டு இல்லாம சமாளிக்கிறதுனு முதல்ல முடிவு பண்ணினோம். நோய் தொற்றாம இருக்க அதுதான் சரியான முடிவு. எல்லோரும் சேர்ந்து பேசி, வீட்டு வேலை செய்யறவங்களுக்கு ரெண்டு மாச சம்பளத்தைத் தந்து, வீட்டுலேயே பாதுகாப்பாக இருக்கச் சொன்னோம். நாங்க மட்டுமல்லாம எங்களைச் சார்ந்திருக்கிறவங்க பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினோம்.''

அப்பார்ட்மென்ட்களில்தான் இது சாத்தியம் என்ப தில்லை. முயன்றால், ஒவ்வொரு தெரு மற்றும் கிராமத்தில்கூட சாத்தியமே. சொல்லப்போனால், ஒடிசா மாநிலத்தில் இத்தகைய கட்டுப்பாடுகளுடன் ஆயிரக்கணக்கான கிராமங்கள், கொரோனா பிடியிலிருந்து தப்பிக்கொண்டிருக்கின்றன. அங்குள்ள உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சியினர், பொதுநல அமைப்பினர் என அனைவரும் இந்த மணப்பாக்கம் அப்பார்ட்மென்ட் போல கரம்கோத்து இதைச் சாதித்துக் கொண்டுள்ளனர். முயன்றால், தமிழகத்திலும் இது சாத்தியமே!

அப்பார்ட்மென்ட் கொரோனா அலர்ட்... - குடியிருப்போருக்கான பாதுகாப்பு டிப்ஸ்

அட்டென்ஷன் அப்பார்ட்மென்ட் வாசகிகளே - பொது மருத்துவர் குகன்

* அவசியம் என்றால் மட்டுமே வெளியில் வாருங்கள். வீட்டை விட்டு வெளியே வரும் சூழல் இருந்தால் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். வெளி யிலிருந்து வீட்டுக்குள் வந்தால் சானிடைஸரைப் பயன்படுத்துங்கள்.

* லிஃப்டில் ஆட்கள் அதிகம் இருந்தால் வெயிட்செய்து, அடுத்தமுறை செல்லுங்கள். முடிந்தவரை மாடிப் படிகளைப் பயன்படுத்துவது நல்லது.

நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்யும் இடங்களில் நிறைய இடைவெளி விடுங்கள்.

* வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கு வது பெட்டர்.

* குடியிருப்புவாசிகள் அசோசியேஷன் மீட்டிங் வைத்து, ஆக்ஸிஜன் கான் சன்ட்ரேட்டரோ, ரெக்ரியேஷன் ரூமில் 4 பெட் போட்டு, தற்காலிகமாக இடத்தை ஏற்பாடு செய்தோ, பாசிட்டிவ் நோயாளிகளைத் தனிமைப்படுத்திக் கொள்ளச் செய்யலாம்.

* குடியிருப்பில் டாக்டர்கள் வசித்தால், அவர்களின் ஆலோசனைகளை நாடலாம்.