Published:Updated:

மதுரையை மிரட்டும் கொரோனா...

மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை

சென்னையை விஞ்சிய இறப்பு விகிதம்!

மதுரையை மிரட்டும் கொரோனா...

சென்னையை விஞ்சிய இறப்பு விகிதம்!

Published:Updated:
மதுரை
பிரீமியம் ஸ்டோரி
மதுரை
சென்னையைக் கதிகலங்கச் செய்த கொரோனா, தற்போது மதுரையை மிரட்டிக்கொண்டிருக்கிறது. தற்போது மதுரையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியுள்ளது. 114 பேர் பலியாகியுள்ளனர். சிகிச்சை பலனளிக்காமல் இறப்பது ஒருபக்கம் என்றால், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாதது, ஆம்புலன்ஸ் வசதிகள் கிடைக்காதது, சோதனை முடிவுகள் தாமதமாகக் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களாலும் மரணங்கள் அதிகரிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரை மாநகரில் 2,000-க்கும் மேற்பட்ட தெருக்கள், `கொரோனா தீவிரத் தொற்றுடையவை’ என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. அமைச்சர் செல்லூர் ராஜூ, அவரின் மனைவி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தினமும் 10 பேர் கொரோனாவால் பலியாவதாகத் தகவல்கள் வருகின்றன. அதேசமயம், `இறப்புகள் தொடர்பாக அரசுத் தரப்பில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

சு.வெங்கடேசன் - சங்குமணி - சரவணன்
சு.வெங்கடேசன் - சங்குமணி - சரவணன்

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் பேசினோம். “சென்னையில் 3,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தபோது அங்கு பலி எண்ணிக்கை 24-தான். ஆனால், மதுரையில் 3,000 பேருக்கு தொற்றுக்கு ஏற்பட்டிருந்தபோது பலி எண்ணிக்கை 51. சென்னையில் 5,000 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தபோது பலி எண்ணிக்கை 42. அதுவே மதுரையில் 5,000 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தபோது பலி எண்ணிக்கை 86. ஆக, சென்னையை ஒப்பிட்டால், மதுரையில் இரு மடங்காக இறப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் அலட்சியமே இதற்குக் காரணம்.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்தவுடன், பிற மாவட்டங்களிலிருந்த ஆம்புலன்ஸ்கள் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டன. மதுரையிலிருந்தும், சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் 40 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 200 ஊழியர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டனர். அவசரத் தேவைக்காக அனுப்பியது சரிதான். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக, தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் ஆம்புலன்ஸ்களும் ஊழியர்களும் திருப்பி அனுப்பப்பட வில்லை. ஆம்புலன்ஸுக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ்களை உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். கூடுதலாக ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மதுரையில் ஆரம்பத்தில் தினசரி 500-க்கும் குறைவான சோதனைகளே நடத்தப் பட்டன. `பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தியதால், தற்போது தினசரி 2,100 சோதனைகள் நடத்தப்படுகின்றன. இவையும் போதாது; இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் மதுரையில் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆக்ஸிஜன் வசதியுடன் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். இது குறித்து தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சு.வெங்கடேசன் சொல்வதை உறுதிப்படுத்துவதுபோல், மருத்துவச் செயற்பாட்டாளரும் ஆர்.டி.ஐ ஆர்வலருமான ஆனந்தராஜ் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அதற்கு கோவிட்-19 ஒரு காரணமாக இருக்கலாம். அதுபோல் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் குணமடைந்து திரும்புவோரின் சதவிகிதமும் மதுரை மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வென்டிலேட்டர் செயல் படாததன் காரணமாக ஐந்து உயிர்கள் பலியானபோது தாக்கல் செய்யப் பட்ட பொதுநல வழக்கில் பல உத்தரவுகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் விதித்திருந்தது. அது எதையும் இப்போதுவரை நடைமுறைப்படுத்த வில்லை’’ என்றார்.

மதுரையை மிரட்டும் கொரோனா...

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வும், தி.மு.க மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரு மான டாக்டர் சரவணன், ‘கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் காலதாமதமாகிறது’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரிடம் பேசினோம். “மதுரை உட்பட தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய நேரத்தில் சோதனை செய்யப்படுவ தில்லை. சோதனை செய்தாலும், முடிவு கிடைக்க தாமதமாகிறது.

ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது. தற்போது இந்தக் கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ரேபிட் கருவி மூலம் பரிசோதனை செய்ய 500 ரூபாய்தான் செலவாகும். எனவே, அரசு ரேபிட் கருவிகளை அதிக அளவில் வாங்கி, பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இதை நீதிமன்றத்திலும் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

இது பற்றி மதுரை அரசு இராசாசி மருத்துவமனை டீன் சங்குமணியிடம் கேட்டோம். ‘‘மற்ற மாவட்டங்களில் உள்ளது போலத்தான் இங்கும் இறப்பு விகிதம் உள்ளது. அதைவிட குண்மடைந்து திரும்புவோர் எண்ணிக்கை இங்கு அதிகம். கொரோனா பாதித்த 71 கர்ப்பிணிகளுக்கு நல்லவிதமாகக் குழந்தை பிறந்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி யுள்ளோம். ஆரம்பத்தில் கொரோனா பிரிவில் 564 படுக்கைகள் இருந்தன. தற்போது அது 1,461 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் வசதியுடன் 481 படுக்கைகள் இருந்தன. இப்போது கூடுதலாக 670 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு வேலையே இல்லை. ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் தீர்க்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களிலிருந்து வரும் சீரியஸான கொரோனா நோயாளி களுக்கும் மதுரையில் வைத்தே சிகிச்சை அளிக்கிறோம். அதனால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. அது மட்டுமில்லாமல், கொரோனா தொற்று உறுதியான நிலையில் வருகிற நோயாளிகளின் மரணத்தைதான் கொரோனா மரணம் என்று அறிவிக்கிறோம். கொரோனா அறிகுறியுடன் வந்து அவர்கள் வேறு வகையான உடல் பிரச்னைகளால் மரணம் அடையும்போது அதை கொரோனா மரணமாக அறிவிக்க முடியாது. அதைத்தான் சிலர் குழப்பிக் கொள் கிறார்கள். மக்களை காக்கத்தான் அனைவரும் பாடுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism