Published:Updated:

`கொரோனாவால் கடும் பாதிப்பு!' - உள்நாட்டுப் பயணிகளைக் கொண்டு முன்னேறுமா கேரள சுற்றுலாத்துறை?

கேரளா
கேரளா

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் கேரளச் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயற்கை எழில் சூழ் பிரதேசமான கேரளாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் அதிகளவு வருவாய் கிடைக்கிறது. மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், படகுசவாரி, சொகுசான படகு இல்லம், கேரள உணவு வகைகள், ஆயுர்வேத மருத்துவம், கலை எனச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் மாநிலமாக கேரளா உள்ளது. இயற்கை கொடையாக அளித்த ஏராளமான விஷயங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. இதன் காரணமாகவே கேரளாவை கடவுளின் தேசம் என்றழைக்கின்றனர்.

கேரளா
கேரளா

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் கேரளச் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் 2018-ம் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இருந்தும் கேரளம் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டது.

இதுகுறித்து பேசிய சுற்றுலாத்துறையினர், ``உலகெங்கும் கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மார்ச் மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு வருகை புரிவார்கள். கேரளாவில் ஜனவரி மாதம் ஒருவருக்குக் கொரோனா அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டதும் இங்கு நிலைமை மாறியது. இந்த மாதங்களில் 80 சதவிகித ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை அப்படியில்லை. இந்திய அரசாங்கம் பல வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. சொல்வதற்கு ஒன்றுமில்லை.

கேரளா
கேரளா

உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கேரளாவில் விடுமுறையைக் கழிப்பார்கள் என நம்புகிறோம். அவர்கள் ஐரோப்பா போன்ற நாடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உள்நாட்டுப் பயணிகளின் வருகையால் கேரள சுற்றுலா மீண்டும் முன்னேறும் என நம்புகிறோம்’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு