Published:Updated:

சென்னை ‘ஹாட்ஸ்பாட்’ ஏன்?

சென்னை
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை

கொரோனா பரிசோதனைக்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது, கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான்.

சமீப நாள்களாக, தமிழகத்தில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் படுகிறது. அதில் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதா, சென்னை மட்டும் ஹாட்ஸ்பாட் ஆக என்ன காரணம்? இதுதான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களின் இப்போதைய கேள்வி.

சென்னை ‘ஹாட்ஸ்பாட்’ ஏன்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து நம்மிடம் பேசிய பொது மற்றும் அறுவைசிகிச்சை மருத்துவர் பூபதி ஜான், ‘‘ஒரு வைரஸின் பரவும் தன்மை, அதன் பெருக்கத் தன்மையைப் பொறுத்தது. அதாவது பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் H1N1 வைரஸ், ஒரு நபர் மூலம் இரண்டு பேருக்குப் பரவும். ஆனால், கொரோனா வைரஸ் அப்படியல்ல. ஒருவர்மூலம் ஐந்து பேருக்குப் பரவுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் ஐந்து பேருக்குப் பரப்புகின்றனர். அதுதான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம்.நெருக்கமான சூழ்நிலைகளில் வேகமாகவும், காற்றோட்டம் உள்ள விசாலமான பகுதிகளில் மெதுவாகவும் தொற்று பரவும். மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியாக சென்னை இருப்பதால், கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது’’ என்றார்.

‘சென்னையில் மட்டும் பரிசோதனையை அதிகரிக்க காரணம் என்ன... சென்னை மட்டும் ஹாட்ஸ்பாட்டாகப் பார்க்கப்படுவது ஏன்?’ என்று இன்னொரு பக்கம் கேள்விகள் எழுந்துள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர் வடிவேலிடம் கேட்டோம், ‘‘இது திட்டமிட்டுச் செய்யப்படுவதில்லை.

கொரோனா பரிசோதனைக்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது, கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான்.

அதன் அடிப்படையில்தான் ஆரம்பத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நம்மிடையே அறிகுறிகளற்ற கொரோனா நோயாளிகளே அதிகமாக இருக்கின்றனர் எனத் தெரியவந்தவுடன், அறிகுறிகளற்ற நபர்களுக்கும் பரிசோதனை செய்யத் தொடங்கினோம்.

சென்னை ‘ஹாட்ஸ்பாட்’ ஏன்?

அதன்படி, கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டவரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறியே இல்லையென்றாலும், அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அந்த வகையில் சராசரியாக, நோயாளியோடு தொடர்பிலிருந்த 24 பேருக்கு தொற்றுப் பரிசோதனை செய்துவருகிறோம். இதற்கு பெயர்தான், ‘கான்டாக்ட் டிரேஸிங்.’ இதில், ஒருவரைக்கூட தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அதனால், அனைத்து மாவட்ட காவல்துறை, புலனாய்வுத் துறை வல்லுநர்கள், கிராம வளர்ச்சித் துறை அலுவலர்கள் என அனைவரையும் கான்டாக்ட் டிரேஸிங் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.

இப்படியான கான்டாக்ட் டிரேஸிங்கில் பிற மாவட்டங்களைவிடவும் சென்னையில்தான் அதிகமான நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆகவேதான், சென்னையில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கான்டாக்ட் டிரேஸிங்கில் பிற மாவட்டங்களிலும் அதிகமான நபர்கள் கண்டறியப்பட்டால், எந்தப் பாகுபாடுமின்றி அங்கும் அதிகமாக சோதனைகள் செய்யப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் கான்டாக்ட் டிரேஸிங்கில் சிறப்பாகச் செயல்படுகிறோம். அதனால்தான் நோயாளிகள் எல்லோரையும் முதல் நிலையிலேயே நம்மால் கண்டறிய முடிகிறது. குணமானோரின் விகிதம் பிற மாநிலங்களைவிடவும் தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தே காணப்படுகிறது. காரணம், கான்டாக்ட் டிரேஸிங்தான்’’ என்றார்.

பெரும்பாலான காய்கறிச் சந்தைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. சாலைகளிலும் மக்கள் நடமாட ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது மது வாங்க கூடிய கூட்டம் இவை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது. இதில் யாருக்கேனும் கொரோனா தொற்று இருந்து மற்றவர்களுக்கு பரவியிருந்தால், எப்படி கான்டாக்ட் டிரேஸிங் செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தச் சிக்கலை அரசு எப்படி கையாளப்போகிறது?