Published:Updated:

“ஊருக்கெல்லாம் சமைச்சுப் போட்டோம்... இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோம்!”

ஊரடங்கு துயரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கு துயரங்கள்!

ஊரடங்கு துயரங்கள்!

“ஊருக்கெல்லாம் சமைச்சுப் போட்டோம்... இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோம்!”

ஊரடங்கு துயரங்கள்!

Published:Updated:
ஊரடங்கு துயரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
ஊரடங்கு துயரங்கள்!

வகை வகையாக... ருசியாக... ஊருக்கே சமைத்துப்போட்ட சமையல் கலைஞர்கள், இன்றைக்கு கொரோனா பிரச்னையால் வாழ்வாதாரம் இழந்து பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்!

கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்’ என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், ஆயிரம் பேர், இரண்டாயிரம் பேர் பங்கேற்கக்கூடிய வகையில் திருமணங்கள் கோலாகலமாக நடைபெறுவதில்லை. எனவே தொழிலின்றி, திருமணங்களில் உணவு சமைக்கும் கலைஞர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

‘‘எங்க கிராமமே சமையல் தொழிலை நம்பித்தான் இருக்கு. `மணப்பட்டி சமையல்’னு சொன்னாலே, அது உலக ஃபேமஸ். நாங்க சமைக்கிற மட்டன் சுக்காவையும், சிக்கன் வறுவலையும், ரத்தப் பொரியலையும் சாப்பிட்டீங்கன்னா, அந்த ருசி நாக்கைவிட்டுப் போறதுக்கே பல நாளாகும். சமையல் சமையல்னு எப்பவும் ஓடிக்கிட்டே இருப்போம். ஆனா, கடந்த ஒன்றரை வருஷமா சுத்தமா வேலை இல்லை. ஊருக்கே சமைச்சுப்போட்ட நாங்க, இப்ப அன்றாடச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோம்...” - சமையல் மாஸ்டர் முனியாண்டி பேசும்போது, துக்கத்தில் நா தழுதழுக்கிறது.

“ஊருக்கெல்லாம் சமைச்சுப் போட்டோம்... இப்போ சாப்பாட்டுக்கே கஷ்டப்படறோம்!”

மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள மணப்பட்டி கிராமம், திறமை வாய்ந்த சமையல் கலைஞர்கள் நிறைந்த ஊர். கல்யாணம், காதுகுத்து, சடங்கு எனச் சமைப்பதற்கு ஆர்டர்கள் குவியும். தென் மாவட்டங்களில் 500 பேர் பங்கேற்கக்கூடிய சிறிய திருமணங்கள் முதல் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோரின் தடபுடலான குடும்ப நிகழ்ச்சிகள்வரை மணப்பட்டி சமையல்காரர்களை விரும்பி அழைப்பார்கள்.

மதுரையிலிருந்து புறப்பட்டு மேலூரைத் தாண்டியதும், பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மணப்பட்டிக்குள் நுழைந்தோம். மரத்தடிகளிலும் திண்ணைகளிலும் ஆங்காங்கே அமர்ந்து சிலர் பேசிக்கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் கவலை ரேகைகள் படிந்திருந்தன. சமையல் கான்ட்ராக்டர் ராஜேந்திரனிடம் பேசினோம்.

‘‘எங்களுக்குச் சமையலைத் தவிர வேற தொழில் தெரியாது. இந்தத் தொழிலை நம்பி எங்க கிராமம் மட்டுமில்லாம, சுத்துவட்டார கிராமங்கள்ல நிறைய பேர் இருக்காங்க. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராம்நாடுனு தென் மாவட்டங்கள் முழுக்க ஆர்டர்கள் வரும். கொரோனா வந்ததுலருந்து பொழப்பு போச்சு. ரொம்ப கஷ்டத்துல இருக்கோம். எங்களை நம்பியிருக்குறவங்களும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க. காய்கறி வெட்டிக் கொடுக்குறது, பாத்திரம் கழுவுறது மாதிரியான வேலைகளுக்குப் பெண்கள் வருவாங்க. அந்தச் சீட்டு, இந்தச் சீட்டுனு நிறைய குழுவுல பணம் எடுத்துவெச்சுருப்பாங்க. எங்களோட வேலைக்கு வந்து அந்தக் கடனை அடைப்பாங்க. இப்போ வருமானமே இல்லாததால, தவணை கட்ட முடியலை. கஷ்டத்தைச் சமாளிக்க முடியாம தவிக்கிறாங்க. பொழப்பு இல்லாம உட்கார்ந்திருக்கோம். வேலை இல்லைன்னாலும் பிள்ளைகளுக்கு ஆன்லைன்ல நடக்கற கிளாஸுக்கு ஃபீஸ் கட்டித்தானே ஆகணும்... நாங்க என்னதான் பண்றது?’’ என்றார் வேதனையுடன்.

‘‘நாங்கள்லாம் ஆயிரம், ரெண்டாயிரம் பேருக்குச் சமைக்கிறவங்க. ஒரு எடத்துக்குச் சமைக்கப் போனா, 2,500 ரூபா கூலியா கெடைக்கும். சின்ன நிகழ்ச்சிக்கெல்லாம் சமைக்கப் போக மாட்டோம். இப்போ எங்க நெலமையே மாறிப்போச்சு. யாராவது சமைக்கக் கூப்பிட மாட்டாங்களா... பத்து நூறாவது கிடைக்காதான்னு மனசு தவிக்குது. போன மாசம் ஒரு கல்யாணத்துக்குக் கூப்பிட்டாங்க. காய்கறியெல்லாம் நாங்களே வெட்டிக் கொடுத்துருவோம்னு சொல்லி கூலியைக் குறைவா சொன்னாங்க. அம்பது பேருக்கு சமைக்கணும்னாங்க. ஆனா, 150 பேரு வந்தாங்க. அதுக்காகக் கூலியைச் சேர்த்துக் கொடுங்கன்னு கேட்க முடியலை. பேசுன கூலியை மட்டும் வாங்கிட்டு வந்தேன். என்ன பண்றது... எங்க நிலைமை அப்படி ஆகிப்போச்சு’’ என்ற சமையல் மாஸ்டர் அய்யாவுவின் குரலில் மிகுந்த விரக்தி ஒலித்தது.

பாரம்பர்யமிக்க செட்டிநாடு உணவு வகைகளை, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று சமைத்துக்கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த அலமேலுவிடம் பேசினோம். ‘‘சமையல் கலைஞர்கள் மட்டுமில்லாம காய்கறி, மளிகை, டெக்கரேஷன், கல்யாண மண்டப உரிமையாளர்கள்னு பல தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்காங்க. கல்யாண சமையல் பெரிய அளவுக்கு இல்லை. சீர் பலகாரங்களுக்குக் கொஞ்சம் ஆர்டர் வருது. அதனால, எங்களை நம்பியிருக்குற சமையல் கலைஞர்களுக்குக் கொஞ்சம் உதவிசெய்ய முடியுது. நம்மள நம்பியிருக்குற சமையல் மாஸ்டர்களைத் தக்க வெச்சுக்கலைன்னா, கொரோனாவுக்குப் பின்னாடி தொழில் செய்யறது ரொம்ப கஷ்டமாயிரும்னு சிலபேர் சொத்துகளை வித்து மாஸ்டர்களுக்குச் சம்பளம் கொடுக்குறதா கேள்விப்பட்டேன்’’ என்றார்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

ஹோட்டல்கள் மற்றும் சமையல் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.எல்.ராஜாவிடம் பேசினோம். ‘‘தமிழ்நாட்டில் சமையல் தொழிலாளர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அவர்களை அடையாளம் காண்பதிலும், அவர்களை ஒன்று சேர்ப்பதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், இந்த நெருக்கடியான காலத்தில் அவர்களுக்கான கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க முடியவில்லை. உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில்தான், சமையல் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். 2011-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் சமையல் தொழிலாளர்களுக்கு என்று தனி நல வாரியம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வாரியம் செயல்படாமல் கிடக்கிறது. அதைச் செயல்படுத்தி, சமையல் தொழிலாளர்களை மாநிலம் முழுவதும் அடையாளம் கண்டு, வாரியத்தில் உறுப்பினர் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்தப் பணியை விரைவாகச் செய்து முடித்து, அவர்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து, தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்’’ என்றார்.

2011-ல் அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கிய பணியை, 2021-ன் இன்றைய முதல்வர் ஸ்டாலின் செய்து முடித்து, சமையல் கலைஞர்களின் துயர் துடைப்பாரா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism