Published:Updated:

பன்றிக்காய்ச்சல் பாதையில் கொரோனா! - 13 மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை...

பன்றிக்காய்ச்சல் பாதையில் கொரோனா!
பிரீமியம் ஸ்டோரி
News
பன்றிக்காய்ச்சல் பாதையில் கொரோனா!

எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்...

சென்னையை மட்டும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருந்த கொரோனா வைரஸ், பிற மாவட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்து பயத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறது.

‘‘தமிழகத்தின் பெரிய நகரங்கள் அனைத்துமே கொரோனாவின் கூடாரமாக மாறும். அதன் அருகிலிருக்கும் பகுதிகளும் கொரோனாவால் பாதிக்கப்படும்’’ என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, `பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்த பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருக்கும்’ என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கருத்தை உண்மையாக்குவதுபோல சென்னையைத் தாண்டி பிற மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்துப் பேசிய சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி, ‘‘பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, கொரோனாவும் அதே முறையில்தான் (Pattern) பரவுகிறது. தமிழகம் மட்டுமன்றி குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அங்குதான் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகம் இருக்கிறது.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு பட்டியலிலுள்ள 13 மாவட்டங்களின் நகர்ப்புறங் களில்தான் கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது. அதிக மக்கள்தொகை, மக்களின் நடமாட்டம், மருத்துவமனைகள் ஆகிய மூன்றுமே இதற்கு முக்கியக் காரணிகள். குறிப்பாக, மருத்துவமனை களிலிருந்து நோய் பரவுவதன் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்.

பன்றிக்காய்ச்சல் பாதையில் கொரோனா! - 13 மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை...

எனவே, மருத்துவமனைகளில் சரியான இடைவெளிகளில் கிருமிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையில் மக்கள் சிகிச்சைக்காக வரும்போது அருகிலுள்ள கடைகளுக்கு, உணவகங்களுக்குச் செல்வார்கள். அதனால் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வேலூர் மாவட்டத்தில் பெரிய மருத்துவமனைகள் அதிகம் இருப்பதால், நோய் பரவுதற்கான வாய்ப்புகள் அதிகம். புதுச்சேரி யிலும் அதே நிலைதான்’’ என்றவரிடம், “பன்றிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடிந்த நம்மால் கொரோனாவை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?” என்று கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“தொடுதல், எச்சில், சளி ஆகியவற்றால்தான் பன்றிக்காய்ச்சல் பரவியது. பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் H1N1 வைரஸ், கொரோனா வைரஸைவிட வீரியம் அதிகம் கொண்டது. ஆனால், கொரோனாவுடன் ஒப்பிட்டால் பரவலும், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைவு. கொரோனா வைரஸ் வீரியம் குறைந்தது என்றாலும், பரவலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 10 முதல் 20 மடங்கு அதிகம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை ஒரு சதவிகிதமாக இருந்தால்கூட பிற காய்ச்சல்களுடன் ஒப்பிட்டால் அது மிக அதிகமே. இது போன்ற நேரங்களில் நகர்ப்புறங்களில் வசிக்கும் முதியோர், தங்கள் சொந்த கிராமங்களில் வீடுகள் இருந்தால் கொஞ்ச காலத்துக்கு அங்கேயே சென்று தங்கலாம். முதியவர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் குறைக்கலாம்” என்றார்.

பன்றிக்காய்ச்சல் பாதையில் கொரோனா! - 13 மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை...

இது பற்றிப் பேசும் மருத்துவத்துறை செயற்பாட்டாளர்கள், ‘‘தமிழக அரசு சென்னையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பிற மாவட்டங்களிலுள்ள மருத்துவர்கள், செவிலியர்களை சென்னைக்கு வந்து பணியாற்ற உத்தர விட்டுள்ளனர். தற்போது பிற மாவட்டங் களிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்டங்களிலிருக்கும் மருத்துவப் பணியாளர்களைச் சென்னைக்கு அனுப்பிவிட்டால், மாவட்டங்களில் தரமான சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படும்’’ என்று எச்சரிக்கின்றனர்.

‘‘பன்றிக்காய்ச்சல் பரவிய மாவட்டங்களில் கொரோனா தடுப்புக்காகக் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறதா?’’ என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகத்திடம் கேட்டோம். ‘‘சென்னை மட்டுமல்ல... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். மருத்துவக் கட்டமைப்பு களை மேம்படுத்துவது, சிகிச்சைக்கான உபகரணங்கள், மருந்துகள் இருப்பு என அனைத்தையும் சரியாகக் கையாள்கிறோம். மருத்துவர்கள், செவிலியர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், தேவைப்படும்போது மீண்டும் அவர்களை அந்தந்த மாவட்டங்களுக்கே திருப்பியனுப்ப முடியும். கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட்டால் புதிதாகப் பணிக்கு அமர்த்தவும் வழிகள் உள்ளன. தற்போது கொரோனாவை முழுவீரியத்துடன் சுகாதாரத்துறை கையாண்டு வருகிறது. அடுத்தடுத்தக் கட்டங்களில் கொரோனா எத்தனை வீரியமாக வந்தாலும் எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர் மாநிலம் முழுக்க தயாராகவே உள்ளனர்’’ என்றார்.