`கொரோனா தொற்றுப் பரவல், இறைச்சி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகளையும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத சந்தைகளையும் உடனடியாக தடைசெய்ய வேண்டும்’ - தேசிய அளவிலான பல்வேறு விலங்கு நல அமைப்புகள், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தன. இதுதான் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சீனாவில் உள்ள வூஹானில் அமைந்திருக்கும் இறைச்சி மற்றும் காட்டு விலங்குகள் விற்பனைச் சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ‘கடந்த பல ஆண்டுகளில் பரவிய இத்தகைய தொற்றுநோய்களில் நான்கில் மூன்று, விலங்குகள் மற்றும் விலங்குப் பொருள்களிலிருந்தே வந்துள்ளன’ என்கிறது சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு. இதையெல்லாம் மேற்கோள்காட்டித்தான் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத சந்தைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று வாதம் செய்தன விலங்கு நல அமைப்புகள்.

மத்திய சுகாதாரத் துறை, கால்நடை வளர்ப்புத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத் துறை ஆகியவை, கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சிகளிலிருந்து கொரோனா வைரஸ் பரவும் என்ற கூற்றை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளன. ‘இறைச்சியிலிருந்து கொரோனா பரவும் என்று வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்துள்ளது மகாராஷ்டிரா மாநில அரசு. இந்தச் சூழலில், விலங்கு நல அமைப்புகள் வைத்துள்ள இந்தக் கோரிக்கையால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தவிர, இறைச்சி வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் வியாபாரிகள்.

திருப்பூர் அம்மாபாளையத்தில் இறைச்சி வியாபாரம் செய்யும் அவிநாசியப்பன், “கொரோனா பதற்றம் வர்றதுக்கு முன்னாடி ஒரு நாளைக்கு குறைஞ்சது 15 ஆடுகள் வெட்டுவோம். கோழிக்கறி விற்பனையும் நல்லபடியா நடந்தது. கொரோனா பிரச்னைக்குப் பிறகு வாட்ஸப், ஃபேஸ்புக்கில் பரவிய பொய்யான செய்திகளால் நிலைமை தலைகீழா மாறிடுச்சு. இப்போ சுத்தமா வியாபாரமே இல்லை” என்றார் சோகத்துடன். பெரும்பாலான இறைச்சி வியாபாரிகளின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

இந்த நிலையில் இறைச்சி விற்பனையால் கொரோனா பரவும் என்ற கூற்றில் உண்மை யுள்ளதா என்று, விலங்குகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுருவிடம் பேசினோம். “வைரஸ் என்பது, கண்களுக்குப் புலப்படாத உயிரி. அது எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டிருக்கலாம். காற்றில்கூட பரவும். வைரஸ்கள் உயிருடன் இருக்கும் விலங்குகளிடமிருந்து உருவாகிப் பரவுவதற்கு வாய்ப்புள்ளதே தவிர, இறைச்சியில் உருவாக வாய்ப்பில்லை. அதேசமயம், வெட்டுபவரிடம் இருந்தோ கையாள்பவரிடம் இருந்தோ இறைச்சியில் ஒட்டிக்கொண்டு பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

இறைச்சிக் கடைகளை சுத்தமாகப் பராமரித்தாலே இதுபோன்ற தொற்றுகளி லிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். இறைச்சியைக் கையாள்வதில் தொடங்கி, கூறுபோட்டுக் கொடுப்பது வரை சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். கையுறை, முகக்கவசம் கட்டாயம் தேவை. இதுபோன்ற கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாலே போதும்” என்றார்.

`கொரோனா வைரஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை விலங்குகளையும் தாக்குவதுண்டு. அபூர்வமாக இதுபோன்ற தொற்றுகள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி பேராபத்தை விளைவிக்கும். ஆகவே, சந்தை களுக்குச் செல்லும் போது விலங்குகளிடம் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். முறையான உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாளுங்கள். இறைச்சி, பால், விலங்கு உறுப்புகள் போன்றவற்றை மிகவும் கவனமாகவும் சுகாதாரத் தோடும் கையாளுங்கள்’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறைச்சிக் கடைகள் என்றில்லை, இப்போதைய இக்கட்டான சூழலில் எல்லா வகைகளிலும் சுகாதாரத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பதே நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது!