லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

iஅக்கா

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
iஅக்கா

தடுப்பூசி நோய்த்தொற்றை முழுமையாகத் தடுக்காவிட்டாலும் அதன் தீவிரத்தைக் குறைக்க உதவும்

கொரோனாவை வெல்ல நம்மிடம் 100% உறுதி செய்யப்பட்ட திட்டம் எதுவுமில்லை. நம்மிடம் என்றால் மனித குலத்திடமே இல்லை. தடுப்பூசி மட்டுமே ஓரளவுக்குப் பலன் தரும் என்பதுதான் இப்போதைய நிலைமை. ஆனால், அதிலும் நமக்கு ஏகப்பட்ட கேள்விகள். சந்தேகங்கள். தவறில்லை. ஆனால், அவற்றைக் களைந்து நாம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே ஓர் அணியாக நின்று கொரோனாவை எதிர்க்க முடியும். உலக சுகாதார நிறுவனம் (WHO) சொல்லும் தடுப்பூசி பற்றிய தகவல்களை இந்த இதழில் சொல்கிறேன்.

தடுப்பூசியின் பலன்கள்:

எந்த வைரஸ் என்றாலும் அதை எதிர்க்கும் சக்தி நம் உடலுக்கு வேண்டும். அதற்குப் பல வழிகள் இருந்தாலும் விரைவான வழி மற்றும் அதிகமான வாய்ப்பு தடுப்பூசி போடுவதுதான். தடுப்பூசி நோய்த்தொற்றை முழுமையாகத் தடுக்காவிட்டாலும் அதன் தீவிரத்தைக் குறைக்க உதவும். எனவே, கொரோனாவை வெல்ல முதல் மற்றும் முக்கிய மான ஆயுதம் தடுப்பூசிகளே.

தடுப்பூசி யாரெல்லாம் போட வேண்டும்?

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி 18 வயதுக்கு மேற்பட்ட எல்லோருமே தடுப்பூசி போடுவது நல்லது. நீரிழிவு நோய், ஆஸ்துமா உட்பட பொதுவான பிரச்னைகள் இருந்தாலுமே தடுப்பூசி போடுவது அவசியம். பொதுவாக, மருத்துவர் முன்னிலையே தடுப்பூசிகள் போடுவதால் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தாலே போதும்.

தடுப்பூசி போட்ட பின்...

தடுப்பூசிகள் நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்குமே தவிர, 100% நோய் வராமல் தடுக்கும் எனச் சொல்ல வில்லை. எனவே, ஆபத்தைக் குறைக்க தடுப்பூசி போட்ட பின்னும் மாஸ்க் அணிவது, சானிடைஸர் பயன்படுத்துவது ஆகிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

iஅக்கா
iஅக்கா

எந்தத் தடுப்பூசி போடுவது?

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் என மூன்று தடுப்பூசிகளை அரசு அனுமதித்திருக்கிறது. இதில் எதையும் போட்டுக் கொள்ளலாம். முதல் டோஸ் எந்த மருந்தை எடுத்துக் கொள்கிறோமோ அதையே இரண்டாவது முறையும் எடுத்துக் கொள்ளலாம். மாற்றக் கூடாது என்றோ, மாற்ற வேண்டு மென்றோ பரிந்துரை செய்ய இதுவரை எந்த டேட்டாவும் கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.

கொரோனாவால் பாதித்திருந்தாலும் தடுப்பூசி தேவையா?

நிச்சயம் தேவை. கொரோனா பாதிப்பால் ஒருவர் உடலில் கிடைக்கும் எதிர்ப்புச் சக்தி என்பது நபருக்கு நபர் மாறும். எனவே, உங்களுக்கு கொரோனா பாதிப்பு வந்து மீண்டிருந் தாலும், நிச்சயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.