Published:Updated:

களப்பணி தினக்கூலியிலும் முறைகேடு... கொரோனா ஊழல் நடப்பது எப்படி?

கொரோனா -  ஊழல்
கொரோனா - ஊழல்

ஒருசில இடங்களில் தினக்கூலிகளின் சம்பளத்திலேயே ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் கமிஷனையும் ஆய்வாளர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள். இதை எதிர்த்தால் அடுத்த நாள் வேலை இருக்காது

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர் வசிக்கும் வீட்டைச் சுற்றிச் சராசரியாக ஐந்து கி.மீ சுற்றளவிலுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கான களப்பணியில் ஒரு செவிலியர், ஓர் அங்கன்வாடி ஊழியர், ஒரு தினக்கூலி ஊழியர்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுதான் வீடு வீடாகச் சென்று கொரோனா சோதனை செய்து கணக்கெடுக்கிறது. இவர்களில் தினக்கூலி ஊழியருக்கு நாள் ஊதியமாக 385 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில்தான் முறைகேடு வெடித்திருக்கிறது.

''ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 30 பேர் வீதம், தமிழகத்திலுள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் ஏறத்தாழ 11,500 பேரை தினக்கூலிகளாக வேலைக்கு எடுத்துள்ளனர். இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை ஆய்வாளர்கள்தான் பொறுப்பு. பல இடங்களில், 30 பேரை எடுக்க வேண்டிய இடத்தில் 15 பேரைத்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்களின் பெயர்களைப் பட்டியலில் எழுதி அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுத்து போலி பில் போடுகிறார்கள்.

ஒருசில இடங்களில் தினக்கூலிகளின் சம்பளத்திலேயே ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் கமிஷனையும் ஆய்வாளர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள். இதை எதிர்த்தால் அடுத்த நாள் வேலை இருக்காது என்பதால், யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்பதில்லை. இந்தக் கொள்ளை தமிழகமெங்கும் அரங்கேறுகிறது'' என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

''சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஏறத்தாழ 21,000 பேர் தினக்கூலிகளாக கொரோனா பரிசோதனை களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மட்டும் ஒரு மாதத்துக்குச் சராசரியாக 13 கோடி ரூபாய் பறிக்கின்றனர்'' என்கின்றன சுகாதாரத்துறை வட்டாரங்கள்.

- கொரோனா ஊரடங்கில் பெரு முதலாளிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை எல்லோரும் வருமானமின்றி வாடி வதங்கிக்கிடக்க, அதிகாரத்திலிருக்கும் அரசியல் வி.ஐ.பி-க்கள் மற்றும் அதிகாரிகள் காட்டில் மட்டும் இப்போதும் பணமழை பொழிகிறது.

களப்பணியில் ஆரம்பித்து, கவச உடை கொள்முதல் வரை அனைத்திலும் ஊழல் தாண்டவமாடுவதாகக் குவியும் புகார்கள் பற்றி ஜூ.வி டீம் களமிறங்கி விசாரித்ததில் கிடைத்தவை அத்தனையும் அதிர்ச்சி ரகம். அதில் ஒன்றுதான் இங்கே நாம் பார்த்த களப்பணி ஊழல்.

களப்பணி தினக்கூலியிலும் முறைகேடு... கொரோனா ஊழல் நடப்பது எப்படி?

இது மட்டுமா?

சானிடைஸர் ஊழல், மாஸ்க் ஊழல், உணவிலும் ஊழல், தனிமைப்படுத்துதலில் முறைகேடு, பணி நியமனத்தில் ஊழல்... இப்படி அனைத்து விதமான ஊழல்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரி.

குறிப்பாக, அந்த இரண்டு நிறுவனங்கள் யாருடையவை? அரசு தரப்பு சொல்வது என்ன? சுகாதாரத்துறையில் `நம்பர் த்ரீ' எனப்படும் ஆனந்தன் யார்? - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரிவான விடை காணும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > அட பாவிகளா! - களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல் Click here https://bit.ly/2MrmjNX

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு