‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகீர் சம்பவம். ஊரடங்கு காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஒரு கும்பல், காவிரியின் கிளை ஆறான கல்லணைக் கால்வாய்க் கரைகளிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மரங்களை வெளிநாட்டுக்குக் கடத்தும் நோக்கில் வெட்டியிருக்கிறது. மரங்களைப் பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் சிலரும் இதற்கு உடந்தையாக இருந்திருப்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் குமாரசாமி, ‘‘பேராவூரணி அருகேயுள்ள ஆவணம் - பெரியநாயகிபுரம் கிராமம் வழியாகப் பயணிக்கிறது கல்லணைக் கால்வாய். `புதுப்பட்டினம் 19-ம் நம்பர் வாய்க்கால்’ என அழைக்கப்படும் இந்த ஆற்றின் இருபுறங்களிலும் மருதம், தேக்கு உள்ளிட்ட மரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. நூறு ஆண்டுகள் பழைமையான விலையுயர்ந்த இந்த மரங்களே கல்லணைக் கால்வாய்க் கரைகளுக்கு பலம் சேர்க்கின்றன. ஆற்றில் வெள்ளம் வரும்போது கரைகளில் உடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பதும் அந்த மரங்களின் வேர்களே.

மருத மரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 10 அடி அகலம், 20 அடி உயரம்கொண்டவை. இவை கப்பல் கட்டுவதற்கும், மரச்சிற்பங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. அதுமட்டு மல்லாமல், மருத்துவ குணமும் நிறைந்தவை. இதனால், இந்த மரங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு நிலவுகிறது. இந்த நிலையில், ஒரு கும்பல் வனத்துறையினர் உதவியுடன் இந்த மரங்களை பத்து நாள்களாக வெளிநாட்டுக்குக் கடத்துவதற்காக வெட்டியிருக்கிறது.

அந்தக் கும்பல் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிய பிறகுதான் எங்களுக்குத் தகவல் வந்தது. உடனே ஊர் மக்களோடு திரண்டு சென்று மரங்கள் வெட்டுவதைத் தடுத்ததுடன், வெட்டப்பட்ட மரங்களையும் அவர்கள் பயன்படுத்திய லாரி, கிரேன் உள்ளிட்டவற்றையும் சிறைப்பிடித்து ஆவணம் மாரியம்மன் கோயில் வளாகத்துக்குக் கொண்டு சென்றோம். பிறகு இது குறித்து கலெக்டர் கோவிந்த ராவுக்குத் தகவல் கொடுத்தோம். விசாரணை நடத்தப்பட்டது. இதில் வனச்சரகர் இக்பால், வனக்காப்பாளர்கள் கணபதி செல்வம் மற்றும் ராமதாஸ் ஆகியோர் உதவியுடன் மர வியாபாரிகளான கணேசன், ராஜேந்திரன், சண்முகநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மரங்களை வெட்டியதாகத் தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டு கஜா புயலின்போது சாய்ந்த கருவேலம் மற்றும் தைல மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்காகப் பெறப்பட்ட ஆர்டரை வைத்துக்கொண்டு, இப்போது மருத மரங்களை வெட்டியிருக்கிறார்கள். ஊரடங்கில் பொதுமக்கள் முடங்கியிருப்பதால், இப்போது மரங்களை வெட்டிக் கடத்தினால் யாருக்கும் தெரியாது என நினைத்து இதைச் செய்திருக்கிறார்கள்.

சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 110 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதில் 75 டன் எடை கொண்ட மரங்களை லாரி மூலம் ஏற்றி தூத்துக்குடிக்குக் கடத்திச் சென்றுவிட்டனர். மீதமுள்ள மரங்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது நாங்கள் பிடித்துவிட்டோம். `பச்சை மரங்களை வெட்டக் கூடாது’ என்பது அரசு விதி. பட்டுப்போன மரமாக இருந்தாலும் அதை வெட்டுவதற்கான ஏற்புடைய காரணத்தை கூறித்தான் வெட்ட வேண்டும். அப்படி இருக்கையில், உயிருடன் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையைச் சேர்ந்தவர்களே துணை போயிருப்பது வேதனையைத் தருகிறது.

இதற்கிடையில், பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட லாரி மற்றும் கிரேனை இரவோடு இரவாக எடுத்துச் சென்றுவிட்டனர். தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்ட மரங்கள் என்னவாகின எனத் தெரியவில்லை. மூன்று மர வியாபாரிகளால் மட்டும் இதைச் செய்திருக்க முடியாது. இதில் பல பேருக்குத் தொடர்பு இருக்கிறது. அவர்களைக் காப்பாற்ற வனத் துறையினர் முயல்கின்றனர். இது தொடர்பான விசாரணையும் மெத்தனமாக நடக்கிறது. ஆற்றங்கரையோர மரங்கள் இப்படி வெட்டிக் கடத்தப்பட்டால் கரைகள் பலமிழக்கும். விவசாயம் பாதிக்கப்படும். எனவே, இந்த விஷயத்தில் துரிதமாகச் செயல்பட்டு இதில் தொடர்புடைய அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வனச்சரகர் இக்பாலிடம் பேசினோம். ‘‘எங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மர வியாபாரிகள் தப்பித்துக் கொள்வதற்காக எங்கள்மீது வீண்பழி சுமத்தியிருக்கின்றனர். நாங்கள் பலிகடா ஆகிவிட்டோம்’’ என்றார்.

அடுத்ததாக, தஞ்சை மாவட்ட வன அலுவலர் குருசாமியிடம் பேசினோம். ‘‘வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு குறித்து கணக்கீடு செய்யப்படுகிறது. வனத்துறையைச் சேர்ந்த இக்பால், கணபதி செல்வம் மற்றும் ராமதாஸ் ஆகியோர்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மர வியாபாரிகளான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், ராஜேந்திரன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடந்து நடைபெற்றுவருகிறது’’ என்றார்.

இதில் தொடர்புடைய அனைவரும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்!