Published:Updated:

“எதில் பயம் இருக்கிறதோ, அதைச் செய்யுங்கள்!”

போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்
பிரீமியம் ஸ்டோரி
போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்

மாணவர்கள் கேள்விகள் கேட்க அதற்கு மாவட்ட ஆட்சியர், மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் பதிலளித்தனர்

“எதில் பயம் இருக்கிறதோ, அதைச் செய்யுங்கள்!”

மாணவர்கள் கேள்விகள் கேட்க அதற்கு மாவட்ட ஆட்சியர், மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் பதிலளித்தனர்

Published:Updated:
போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்
பிரீமியம் ஸ்டோரி
போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்

ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்திய யு.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் IAS கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். “என் தந்தையின் ஆசைக்கேற்ப, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் நான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சிவில் சர்வீஸ் தேர்விற்குப் படிக்க ஆரம்பித்தேன். அனைத்துப் பாடங்களுமே படிக்க முடிபவைதான். எனக்கு இது வராது, அது வராது என மற்றவர்கள் கூறுவதை வைத்தோ, அல்லது, உங்களுக்கே தோன்றுகிறது என்றோ தவிர்க்காதீர்கள். முக்கியமாக உங்களுக்கு எதில் பயம் இருக்கிறதோ, எந்த விஷயத்தைச் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களோ அதைத் திரும்பத் திரும்பச் செய்யுங்கள். உங்களால் வெல்ல முடியும்’’ என்று பிரதீப்குமார் ஊக்கம் தந்தார்.

“எதில் பயம் இருக்கிறதோ, அதைச் செய்யுங்கள்!”

தொடர்ந்து யு.பி.எஸ்.சி தேர்வில் 2021-2022 பேட்ச்சில் தேர்ச்சி பெற்ற ஏஞ்சலின் ரெனிட்டா பேசினார். “தஞ்சாவூர் மாவட்டம்தான் என்னுடைய சொந்த ஊர். அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதனாலேயே கல்லூரிக் காலத்தில் எனக்கு நிறைவே தாழ்வு மனப்பான்மை இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது, விகடனின் மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வானேன். அதன்பிறகுதான் எனக்குப் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவம்தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது...” என்ற ரெனிட்டா, தன் தேர்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனரும் இயக்குநருமான S.சிவராஜவேல், யு.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கான சுலபமான வழிமுறைகள் பற்றிப் பேசினார். போட்டித் தேர்வுகளுக்கான சிலபஸின் முக்கியத்துவம் குறித்தும், அதனை எவ்வாறு கவனமாகப் படிக்க வேண்டும் என்றும், முந்தைய வருடக் கேள்வித்தாள்களைப் படிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கூறினார்.

“எதில் பயம் இருக்கிறதோ, அதைச் செய்யுங்கள்!”

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ரமணி மற்றும் சத்யனந்தி ஆகியோர் தங்கள் பயிற்சி அனுபவங்களையும், தொடர்ந்து போட்டித் தேர்வர்களுக்கான ஊக்க உரைகளையும் வழங்கினர்.

அதன்பின் மாணவர்கள் கேள்விகள் கேட்க அதற்கு மாவட்ட ஆட்சியர், மற்றும் சிவராஜவேல் ஐ.ஏ.எஸ் அகாடமியில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் பதிலளித்தனர். ஸ்காலர்ஷிப் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 1400-க்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆலோசனை முகாமில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.