தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!

கொட்டாங்குச்சி விளக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
கொட்டாங்குச்சி விளக்கு

பூமாதேவி, கைவினைக்கலைஞர்

பூமாதேவி, கைவினைக்கலைஞர்
பூமாதேவி, கைவினைக்கலைஞர்

தீபாவளி தொடங்கி, புத்தாண்டு வரை தீபத் திருவிழாக்கள் வரிசைகட்டி நிற்கின்றன. உங்கள் வீட்டை ஒளிமயமாக அழகாக்க உங்கள் கைப்பட விளக்கு அலங்காரம் செய்து அசத்த ரெடியா..?

கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!

தேவையான பொருள்கள்:

கொட்டாங்குச்சி உப்புக் காகிதம் விளக்கு

கத்தரிக்கோல் கயிறு அலங்கார மணிகள்

துணி கோல்டு மற்றும் ஆரஞ்சு நிற பெயின்ட்

பிரஷ் தண்ணீர் டபுள் கம் டேப் தட்டு

கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!

ஸ்டெப் 1

கொட்டாங்குச்சியின் உள் மற்றும் வெளிபாகத்தை உப்புக் காகிதம் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கொள்ளவும்.

கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!

ஸ்டெப் 2

தேய்த்து எடுத்துக்கொண்ட கொட்டாங்குச்சியின் வெளிப் பக்கத்தில் கோல்டன் கலர் பெயின்ட் அடிக்கவும்.

உள் பக்கம் ஆரஞ்சு கலர் பெயின்ட் அடித்துக் காய வைக்கவும்.

கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!

ஸ்டெப் 3

காய்ந்த கொட்டாங்குச்சியில் உள்ள மூன்று கண்களில் ஒரு கண்ணில் மட்டும் ஓட்டை போட்டுக் கொள்ளவும்.

கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!
கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!

ஸ்டெப் 4

கொட்டாங்குச்சியின் மேல் பாகத்தில் இருக்கும் ஒரு துளையின் வழியே கயிற்றை உள்பக்கமாக எடுத்து வந்து, படத்தில் காட்டியுள்ளபடி மேல்பாகத்தின் நடுவில் முடி போட்டுக் கொள்ளவும். மீதமிருக்கும் கயிற்றில் அலங்கார மணிகளைக் கோத்து, கடைசி மணியில் முடி போட்டுக் கொள்ளவும்.

கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!
கொட்டாங்குச்சி விளக்கு... கொள்ளை அழகு!

ஸ்டெப் 5

உங்களுக்கு விருப்பமான விளக்கின் பின்பக்கம் டபுள்கம் டேப்பை ஒட்டி, அதை கொட்டாங்குச்சியின் உள் பக்கம் ஒட்டிக் கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை அறையிலோ, விருப்பமான, வசதியான இடங்களிலோ கொட்டாங்குச்சியைத் தொங்கவிட்டு, விளக்கை வைக்க, ஒளியில் அழகாகும் வீடு!

முக்கியக் குறிப்பு: மாடலுக்காக மெழுகுவத்தி விளக்கை ஏற்றியுள்ளோம். சமயங்களில் கொட்டாங்குச்சி தீப்பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே கவனமாக இருக்க வேண்டும். தற்போது பேட்டரியில் இயக்கும் ஒற்றை மின்விளக்குகள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.