Published:Updated:

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

காகிதப்பூக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காகிதப்பூக்கள்!

கைவினைக்கலைஞர் பூமாதேவி படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

கைவினைக்கலைஞர் பூமாதேவி படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
காகிதப்பூக்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காகிதப்பூக்கள்!

ஒற்றை ரோஜாவோ, ஒரு பூங்கொத்தோ போதும்... வீட்டை அழகாக்க. தினம் தினம் பூக்கள் வாங்க நேரமோ, வசதியோ இல்லாதவர்கள், காகிதப்பூக்களாலும் வீட்டை அலங்கரிக்கலாம். கலர்ஃபுல்லாக, கலக்கலாக காகிதப்பூக்கள் செய்யக் கற்றுத் தருகிறேன்...

பூமாதேவி
பூமாதேவி

தேவையான பொருள்கள்:

கலர் பேப்பர்

பென்சில்

ஸ்கேல்

கத்தரிக்கோல்

கட்டர்

பசை

துணி

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

ஸ்டெப் 1: சிவப்பு நிற பேப்பரை செவ்வக வடிவில் வெட்டிக் கொள்ளவும். நீளமான பாகத்தின் இரண்டு பக்கங்களிலும் தலா 1 செ.மீ இடம்விட்டுக் கோடு போட்டுக் கொள்ளவும்.

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

ஸ்டெப் 2: இரண்டு கோடுகளுக்கு இடைப்பட்ட பாகத் தில் தலா 1 செ.மீ விட்டு, வரிசையாக கட்டரால் நேர்க் கோடாக வெட்டவும். பேப்பர் தனித்தனி துண்டுகளாகி விடாமல் கவனமாக வெட்டவும்.

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

ஸ்டெப் 3: 1 செ.மீ இடைவெளிவிட்டு கோடு போட்ட பாகங்களில் பசையைத் தடவி, மடித்து ஒட்டிக் கொள்ளவும்.

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!
நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

ஸ்டெப் 4: பச்சை வண்ண காகிதத்தை செவ்வக வடிவில் கத்தரித்துக் கொள்ளவும். ஒரு குச்சியை அந்தக் காகிதத்தின் முனையில் வைத்து நெருக்கமாகச் சுற்றினால் தண்டு தயாராகிவிடும்.

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!
நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

ஸ்டெப் 5: அடுத்து இன்னொரு பச்சை வண்ண காகிதத்தை செவ்வக வடிவில் கத்தரிக்கவும். அதை இரண்டாக மடித்து கீழிருந்து மேல்நோக்கி தேவையான உயரத்துக்கு, இலை வடிவில் கத்தரித்துக் கொள்ளவும்.

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!
நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

ஸ்டெப் 6: கத்தரித்து ஒட்டிவைத்திருக்கும் சிவப்புக் காகிதத்தை காம்பின் மேல் பகுதியிலிருந்து கீழ்நோக்கி இழுத்து ஒட்டினால் அழகான `பூ' தயாராகிவிடும்.

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!
நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!

ஸ்டெப் 7: `பூ' வின் கடைசியில் வலது, இடது புறம் இரண்டு இலைகளை ஒட்டினால் கண்கவரும் பூங்கொத்து தயாராகி இருக்கும். இதேபோல் நான்கைந்து வண்ணங்களை எடுத்து செவ்வக வடிவில் தயார் செய்து, ஒரே தண்டில் வண்ண வண்ணப்பூக்கள் செய்து ஒட்டினால் கலர்ஃபுல்லாக இருக்கும்.

நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!
நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!
நீங்களே செய்யலாம்... கலர்ஃபுல் காகிதப்பூக்கள்!