தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

சில நூறு ரூபாய் செலவில் பாசிட்டிவ் எனர்ஜி தரும் வால்ஹேங்கிங் செய்யலாம்.

வீட்டை அழகுபடுத்த ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய கற்பனைத்திறனுக்கு ஏற்ப குறைந்த பட்ஜெட்டிலேயே வீட்டை அழகுபடுத்த முடியும். சில நூறு ரூபாய் செலவில் பாசிட்டிவ் எனர்ஜி தரும் வால் ஹேங்கிங் செய்யும் வழிமுறைகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் சுமிதா.

சுமிதா
சுமிதா
ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

தேவையானவை:

மரத்துண்டு
பெயின்ட்
பிரஷ்
கார்பன் பேப்பர்
உப்புத்தாள்
பசை
கத்தரிக்கோல்
மார்க்கர், சணல்

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஸ்டெப் 1: தேவையான நீள அகலத்தில் மரத்துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். மர வேலைகள் செய்பவர் களிடம் கொடுத்து மரத்துண்டில் படத்தில் காட்டியுள்ள படி துளையிட்டுக்கொள்ளவும்.

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஸ்டெப் 2: மரத்துண்டு சொரசொரப்பின்றி இருந்தால் தான் பெயின்ட் செய்ய எளிதாக இருக்கும். எனவே உப்புத்தாள் பயன்படுத்தி மரத்துண்டை நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும்

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஸ்டெப் 3: மரத்துண்டில் உங்களுக்கு விருப்பமான நிறத்தில் பெயின்ட் செய்து கொள்ளவும்.

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஸ்டெப் 4: பெயின்ட் செய்த மரத்துண்டினை 20 நிமிடங்கள் காயவைக்கவும்.

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

.ஸ்டெப் 5: நீங்கள் விரும்பும் வசனம் அல்லது படத்தை கார்பன் பேப்பர் பயன்படுத்தி மரத்துண்டில் ட்ரேஸ் எடுத்துக்கொள்ளவும்.

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஸ்டெப் 6: ட்ரேஸ் எடுத்த எழுத்துகள் மீது பெயின்ட் பயன்படுத்தி எழுதவும். உங்கள் விருப்பத்துக்கேற்ப மார்க்கரால் சின்ன சின்ன படங்கள் வரைந்து அழகு படுத்தி மரத்துண்டை அரைமணி நேரம் காயவிடவும்.

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஸ்டெப் 7: படத்தில் காட்டியுள்ளபடி மரத்துண்டில் துளையிட்டுள்ள பகுதியில் நூல் அல்லது சணலைக் கோத்து முடிச்சிட்டுக்கொள்ளவும்.

ஹேப்பியாகச் செய்யலாம்... ஹேண்டுமேடு வால் ஹேங்கிங்

ஸ்டெப் 8: அழகான வால் ஹேங்கிங் தயார்.