Published:Updated:

கலர்ஃபுல்லான, கலக்கலான மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு
பிரீமியம் ஸ்டோரி
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு

- பூமாதேவி

கலர்ஃபுல்லான, கலக்கலான மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

- பூமாதேவி

Published:Updated:
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு
பிரீமியம் ஸ்டோரி
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு

`எந்தப் பொருளை எந்த இடத்தில் வைத்தோம்...’ - பல வீடுகளிலும் அன்றாடம் தொடர்கிற புலம்பல் இது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கிற பழக்கம் வெகு சிலரிடம்தான் இருக்கிறது. அந்தப் பழக்கத்தைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு இந்த மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு உதவியாக இருக்கும். அடிக்கடி தேவைப்படுகிற பென்சில், பேனா, கத்தரிக்கோல், ரப்பர் பேண்டு என எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள உதவும் இந்த ஸ்டாண்டை, சிம்பிளாக செய்யக் கற்றுத்தருகிறேன். செலவே இல்லை என்பதால் வீட்டில் பல இடங்களிலும் இந்த ஸ்டாண்டை செய்துவைத்துப் பயன்படுத்தலாம்.

கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

தேவையானவை:

உபயோகித்த பிறகு தூக்கி எறியும் ஸ்கெட்ச் பேனாக்கள் (தேவைக்கேற்ப), க்ளு கன், அலங்கார மணிகள், அட்டை

கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

ஸ்டெப் 1

உபயோகித்த, பழைய பேனாக்கள் என்பதால் எல்லோரும் மூடி யுடன் வைத்திருக்க மாட்டார்கள். மேலும், அடியிலுள்ள பேனாக் களின் மூடிகளைத் தவிர்த்தால் மேடு, பள்ளமின்றி  அட்டையை ஒட்ட வசதியாக இருக்கும். சில பேனாக்கள் மூடியுடனும் சிலது மூடியின்றியும் இருந்தால் பார்க்கவும் நேச்சுரலாக இருக்கும். இந்த ஸ்கெட்ச் பேனாக்களை சதுர வடிவில் க்ளு கன் உதவி யுடன் ஒட்டிக்கொள்ளவும். சதுர வடிவில் ஓட்டும்போது, நான்கு பக்கங்களிலும் சிறிதளவு ஸ்கெட்ச் பேனாவின் பகுதி வெளியில் தெரியும்படி இருக்கட்டும்.

கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

ஸ்டெப் 2

சதுரவடிவில் ஒட்டிய ஸ்கெட்ச் பேனாக்களின் மேல் உயரத்தைக் கூட்டுவதற்காக மணிகளை ஒட்டவும். எவ்வளவு உயரம் தேவையோ, அதற்குத் தகுந்தாற்போல் இரண்டு அல்லது மூன்று மணிகளை ஒட்டலாம்.

கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

ஸ்டெப் 3

மணிகளை ஒட்டியபின் ஸ்கெட்ச் பேனாக்களை மறுபடி சதுர வடிவில் ஒட்டவும்.

கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

ஸ்டெப் 4

மறுபடியும் சதுரவடிவின்மேல் தேவைக்கேற்ற உயரத்துக்கு மணிகளை ஒட்டி அவற்றின் மேல் மீண்டும் சதுர வடிவில் ஸ்கெட்ச் பேனாக்களை ஒட்டவும்.

கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

ஸ்டெப் 5

ஸ்டாண்டின் அடிபாகத்தில், அதன் இடைவெளிக்கேற்ற அளவில், அட்டையைக் கத்தரித்து ஒட்டவும். கலர்ஃபுல்லான கலக்கலான மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு ரெடி.

கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!
கலர்ஃபுல்லான, கலக்கலான 
மல்ட்டி பர்ப்பஸ் ஸ்டாண்டு!

ஸ்டெப் 6

இந்த ஸ்டாண்டில் பென்சில், பேனா, ஸ்கேல், கத்தரிகோல், கிளிப், வளையல், ஹேர் பேண்டு, போன்ற அனைத்துப் பொருள்களையும் வைத்துக் கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism