தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

iஅக்கா

iஅக்கா
பிரீமியம் ஸ்டோரி
News
iஅக்கா

பெருந்தொற்றுக் காலம் இது. முடிந்தவரை நாமே ஷாப்பிங் செய்வதைக் குறைத்திருப் போம்

பணம் சம்பாதிப்பது யாராக இருந்தாலும், அதைச் சரியாகக் கையாள்வது முக்கியம். வேலைக்குப் போகும் பெண்கள் என்றாலும், இல்லத்தரசி என்றாலும் அதைச் சரியாக செய்தால்தான் வாழ்வு சிறக்கும். இந்த இதழில் பணத்தை எப்படிச் சரியாகக் கையாள்வது என்பது பற்றிய டிப்ஸ்தான்.

* பட்ஜெட் போடுவதோடு வேலை முடியாது. நம் வரவு எது, செலவு எது என்பதையும் பதிவு செய்ய வேண்டும். இதற்கு நிறைய மொபைல் ஆப்ஸ் இருக்கின்றன. எழுதி வைக்க நினைப்பவர்கள் அப்படியும் செய்யலாம். ஆனால், ஆப்ஸ் மூலம் பதிவு செய்வதும் அதைப் பிரித்துப் பார்ப்பதும் எளிது.

* எந்தச் செலவு என்றாலும் அது வீட்டின் தேவையா அல்லது நம் விருப்பமா என்பதை முதலில் யோசியுங்கள். வீட்டு வாடகை என்பது தேவை. வீட்டுச் சுவரில் பிடித்த ஓவியத்தை வரைவதென்பது விருப்பம். தேவைகளுக்கு முன்னுரிமை தரலாம். விருப்பங்களுக்கு பட்ஜெட் சொல்லும்படி ஒதுக்கலாம்.

* பெருந்தொற்றுக் காலம் இது. முடிந்தவரை நாமே ஷாப்பிங் செய்வதைக் குறைத்திருப் போம். அதை கொரோனா முடிந்த பிறகும் (நம்பிக்கைதான்) தொடர்வது நல்லது. நோக்கமில்லாத ஷாப்பிங் பர்ஸை பதம் பார்ப்பது மட்டுமல்ல; நேரத்தையும் விழுங்கும். குறிப்பாக, ஆன்லைன் ஷாப்பிங் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

* கிரெடிட் கார்டோ, பேமென்ட் ஆப்போ… ஏதேனும் ஒன்றிலிருந்து செலவு செய்வது நல்லது. அல்லது அவ்வப்போது செய்யும் செலவுகளை ஓரிடத்தில் குறித்து வைப்பது நல்லது. பல வழிகளில் செலவு செய்யும்போது நம் மூளைக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் போகலாம்.

* கிரெடிட் கார்டு போன்றவற்றில் நிறைய நல்ல விஷயங்கள் உண்டு. ஆனால், அதற்கு நம்மிடம் மிக மிக ஒழுக்கமான நிதி மேலாண்மைத் திறன் இருக்க வேண்டும். இல்லையேல், சாண் ஏறி முழம் சறுக்கும் கதையாகக் கூடும்.

* நாட்டுக்கு பட்ஜெட் தேவை. அது வீட்டுக்குத் தேவை யில்லையென யார் சொன்னது? உங்கள் குடும்பத்தின் மொத்த வருமானம் என்னவெனத் தெரியும். அதற்கேற்ப பட்ஜெட் போடுங்கள். அது 100% சரியாக இருக்க வேண்டு மென்பதில்லை. ஆனால்,

* பட்ஜெட் போட்டுப் பழகுங்கள். அது பொருளாதாரம் சார்ந்த பல விஷயங்களைப் புரிய வைக்கும். வரவு என்னவாக இருந்தாலும் சேமிப்பைத் தவிர்க்கக் கூடாது. சேமிப்பை மிஞ்சிதான் செலவுக்கு. அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் சேமிப்புக்கென ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிட்டு செலவுகள் பக்கம் போகவும்.