அலசல்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

2K kids: கிரிப்டோ கரன்சி... வாங்க தெரிஞ்சுக்கலாம்!

கிரிப்டோ கரன்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிப்டோ கரன்சி

மா.மதுவதனி

ஆதிகாலத்தில் வர்த்தகம், பண்டமாற்று முறை மூலம் நடந்தது. பின்னர் பரிணாம வளர்ச்சியில் தங்கம்,‌ உலோக நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் என்று மாறியது. தொழில் நுட்ப வளர்ச்சியால் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு முதல் ஆன்லைன் பணப் பரிமாற்றம் வரை இன்று நிகழ்கின்றன. இந்த நிலையில் இப்போது பெரும் வரவேற்பு பெற்றுவரும் ‘கிர்ப்டோ கரன்சி’ வர்த்தக முறை, ‘நல்லாதானே போயிட்டு இருந்துச்சு... என்ன இது புதுசா?’ என்று மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த அறிமுகம் மற்றும் தகவல்களை அவள் வாசகிகளுக்குத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற வெய் டாய் (Wei Dai) எனும் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் 1998‌-ல் உருவாக்கிய சொற்கூறு, கிரிப்டோ கரன்சி. இது ஒரு டிஜிட்டல் கரன்சி. இதை தொட்டுணர முடியாது. ரூபாய் நோட்டுகளின் மதிப்பை வங்கிகள் நிர்ணயிக்கின்றன. கிரிப்டோ கரன்சி ‘பிளாக் செயின்’ என்னும் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுகிறது. கிரிப்டோ கரன்சியை ஒரு ஃபிசிக்கல் (Physical) கரன்சியாக நினைப்பது தவறு. இது மாடர்ன் பண்டமாற்று முறை. 2009-ல், முதல் கிரிப்டோ கரன்சி ‘பிட்காயின்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2K kids: கிரிப்டோ கரன்சி... வாங்க தெரிஞ்சுக்கலாம்!

கிரிப்டோ கரன்சியின் மதிப்பு என்ன?

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் 7,198 டாலராக இருந்த ஒரு கிரிப்டோ கரன்சியின் மதிப்பு/விலை, ஆண்டு முடிவில் 28,348 டாலருக்கு வர்த்தகமானது. கடந்த ஓராண்டில் மட்டும் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 293% உயர்ந்து, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை வழங்கியது. சப்ளை குறை வாக இருந்து டிமாண்ட் அதிகமாக இருப் பதே இதன் மதிப்பு இப்படி அதிகரிக்கக் காரணம்.

2K kids: கிரிப்டோ கரன்சி... வாங்க தெரிஞ்சுக்கலாம்!

கிரிப்டோ கரன்சியில் எப்படி முதலீடு செய்வது?

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் (Crypto Exchange) ஒரு அக்கவுன்ட் உருவாக்க வேண்டும். அதில் பணப் பரிவர்த்தனை செய்து கிரிப்டோ கரன்சிகளை வாங்கலாம். வாங்கும் முறை, வாங்கும் நடைமுறையில் உள்ள ரிஸ்க், வாங்குவதால் கிடைக்கக்கூடிய லாபம்... இந்த மூன்று அம்சங்கள் பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொண்ட பின்னர் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

கிரிப்டோ கரன்சி வரவேற்பு பெற்றதற்குக் காரணம்?

பிளாக் செயின் தொழில்நுட்பம். பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் ஹேக்கிங் மற்றும் மோசடிகள் நிகழ‌ வாய்ப்புகளே கிடையாது. அதுதான், கிரிப்டோ கரன்சியின் அழகு. ஆனால், கிரிப்டோ கரன்சியை ஹேக்கிங் செய்து மோசடி என்றெல்லாம் உலகின் வெவ்வேறு இடங் களிலிருந்து செய்திகள் வரத் தொடங்கி இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

 லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

கிரிப்டோ கரன்சி வருங்கால நாணயமா?

எந்த கரன்சியாக இருந் தாலும் அது சட்டபூர்வமாக ‘Legal Tender’ என்று அறி விக்கப்பட்டால் மட்டுமே மற்ற நாடுகளுடன் பணப் பரிவர்த்தனை நிகழும். ஆனால், கிரிப்டோ கரன்சியை எந்த ஒரு நாட்டு வங்கியும் ‘Legal Tender’-ஆக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், கிரிப்டோ கரன்சி வருங்கால நாணயமா என்பது பெரிய கேள்விக் குறியாக உள்ளது. ஆனாலும், இதற்கு வரவேற்பு அதிகரித் துக்கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.