Published:Updated:

லித்தியம் எக்ஸ்பர்ட் கலைச்செல்வி!

கலைச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
கலைச்செல்வி

1997-ல் சாதாரண விஞ்ஞானியாக காரைக்குடி சிக்ரியில் வேலைக்குச் சேர்ந்தவங்க, இப்போ மிகப்பெரிய பதவிக்குப் போயிருக்காங்க.

லித்தியம் எக்ஸ்பர்ட் கலைச்செல்வி!

1997-ல் சாதாரண விஞ்ஞானியாக காரைக்குடி சிக்ரியில் வேலைக்குச் சேர்ந்தவங்க, இப்போ மிகப்பெரிய பதவிக்குப் போயிருக்காங்க.

Published:Updated:
கலைச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
கலைச்செல்வி

இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) 80 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண், தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், தமிழகத்தின் நல்லதம்பி கலைச்செல்வி.

சி.எஸ்.ஐ.ஆர் அமைப்பின் கட்டுப்பாட்டில் 38 ஆய்வுக்கூடங்கள், 3 இன்னோவேஷன் சென்டர்கள் உள்ளன. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என சுமார் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் நிறுவனத்தையும் விஞ்ஞானிகள் படையையும் வழிநடத்தவிருக்கிறார் கலைச்செல்வி. காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு நிறுவனத்தின் (சிக்ரி) முதல் பெண் இயக்குநராகப் பணியாற்றி வந்த கலைச்செல்வி, இந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார். ‘‘இங்கு இயக்குநராகப் பணியாற்றிய ஒருவர், சி.எஸ்.ஐ.ஆரின் உயரிய பதவிக்குப் போவதும் இதுவே முதல்முறை'' என்று உற்சாகம் பொங்கக் கூறுகின்றனர் சக விஞ்ஞானிகள்.

திட்டமிடல் துறையின் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் டாக்டர் சத்யநாராயணனிடம் பேசினோம். ‘‘திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இருக்கும் வாகைக்குளம்தான் கலைச்செல்வியின் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு தமிழ்வழியிலதான் படிச்சிருக்காங்க. கணவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர். ஒரே மகள் வெளிநாட்டுல பிஹெச்.டி பண்ணிக்கிட்டிருக்காங்க.

லித்தியம் எக்ஸ்பர்ட் கலைச்செல்வி!

கலைச்செல்விக்குத் தமிழ் மேல ரொம்ப ஆர்வம் அதிகம். ‘அறிக அறிவியல்' என்ற தமிழ் மாத இதழ் ஒன்றின் ஆசிரியராக இருந்துகொண்டு, எவ்வளவு ஆராய்ச்சி பணிச் சூழலுக்கு இடையிலும் அதற்கு நேரம் ஒதுக்கி, அறிவியலை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறாங்க.

1997-ல் சாதாரண விஞ்ஞானியாக காரைக்குடி சிக்ரியில் வேலைக்குச் சேர்ந்தவங்க, இப்போ மிகப்பெரிய பதவிக்குப் போயிருக்காங்க. பணி ஆர்வம்தான் அவங்களை அந்த இடத்துக்குக் கொண்டுபோயிருக்கு. 25 ஆண்டுக்கால ஆராய்ச்சி வாழ்க்கையில், 15 ஆய்வு மாணவர்களின் வழிகாட்டியா இருந்தாங்க. 130-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்காங்க.

லித்தியம் பேட்டரி எக்ஸ்பர்ட்னே அவங்கள சொல்லணும். லித்தியம் மற்றும் சோடியம் பேட்டரி தொடர்பான தொழில்நுட்பங்கள் அனைத்தும் அத்துப்படி. இதுவரைக்கும் இந்தியாவில் லித்தியம் பேட்டரி தயாரிப்பே கிடையாது. சீனா, ஜப்பான்ல இருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரிகள்தான் சந்தையில் கிடைக்கும். முதல்முறையாக சிக்ரி தன்னுடைய தொழில்நுட்பத்தை வைத்து, தினமும் ஆயிரம் பேட்டரி செல்கள் தயாரிக்கும் அமைப்பை உருவாக்கியிருக்கு. விரைவிலேயே இந்திய லித்தியம் பேட்டரிகள் சந்தைக்கு வர இருக்கு. இது முழுக்க முழுக்க கலைச்செல்வியின் தலைமையில்தான் நடக்குது.

இதேபோல சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கற விதமா கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் டெக்னாலஜி, தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுக்கும் டெக்னாலஜின்னு இவங்க தலைமையில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருது. இவங்க சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநரானது தமிழகத்திற்கே பெருமை'' என்கிறார் அவர்.