Published:Updated:

`போடுங்க ஹெல்மெட் போடுங்க' - வைரலான கடலூர் காவலர் எழுதி, பாடிய பாடல்

ஜி.சதாசிவம்

போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து தலைமைக் காவலர் ஒருவர் எழுதி பாடிய ``போடுங்க ஹெல்மெட்டைபோடுங்க" என்ற விழிப்புணர்வு பாடல் சமூக வலைதலங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தலைமை காவலர் சிவபெருமான்
தலைமை காவலர் சிவபெருமான் ( எஸ்.தேவராஜன் )

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமான் (41). இவர் புவனகிரி அருகே உள்ள மருதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் போக்குவரத்து விதிகள் குறித்து எழுதி பாடிய, ``போடுங்க ஹெல்மெட் போடுங்க, விபத்தில் ஏற்படும் உயிரிழப்பை தவிருங்கள், போடுங்க சீட் பெல்ட்டை போடுங்க" என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தலைமை காவலர் சிவபெருமான்
தலைமை காவலர் சிவபெருமான்
எஸ்.தேவராஜன்
போக்குவரத்து விழிப்புணர்வுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது
தலைமை காவலர் சிவபெருமான்

இவர் இந்தப் பாடலைப் பாடியபொழுது அப்போதைய கடலூர் எஸ்.பி. சரவணன், சிதம்பரம் முன்னாள் டி.எஸ்.பி-யும் தற்போதைய ஏ.டி.எஸ்.பி-யுமான பாண்டியன் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இது குறித்து சிவபெருமானிடம் கேட்டபோது, ``நாங்க அடிக்கடி போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்வோம். அப்பொழுது போக்குவரத்து விழிப்புணர்வுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

தலைமைக் காவலர் சிவபெருமான்
தலைமைக் காவலர் சிவபெருமான்
எஸ்.தேவராஜன்
Vikatan

நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நன்றாகப் பாடுவேன். இப்பொழுது போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து பாடலை எழுதி, அதை நானே பாட வேண்டும் என்று எங்கள் உயர் அதிகாரிகளிடம் கூறினேன். அவர்களும் எனக்கு ஊக்கம் அளித்து அனைத்து உதவிகளையும் செய்தனர். அந்தப் பாடல் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். தலைமைக் காவலர் ஒருவர் எழுதி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவது காவலர்கள் மத்தியில் பெரும் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.