ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வினு விமல் வித்யா: இரண்டு சமூகங்கள்... இரண்டு சிறுநீரகங்கள்... ஒரு பந்தம்!

 கேத் ஐசக்
பிரீமியம் ஸ்டோரி
News
கேத் ஐசக்

- சஹானா

மழை என்பதால் திட்டத்தை மாற்றிக் கொண்டு விமலும் வினுவும் வித்யா வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். குளிருக்கு இதமாக வெங்காய பக்கோடாவும் ஃபில்டர் காபியும் பரிமாறினார் வித்யா.

“அடடா... இந்தக் குளிருக்கு ரெண்டுமே அமர்க்களமா இருக்கு வித்யாக்கா. என்னக்கா லேட்டஸ்ட் நியூஸ்?” என்று அரட்டையை ஆரம்பித்தாள் வினு.

“குஜராத்துல உள்ள மச்சு ஆறு மேலயிருந்த மோர்பி பால விபத்துதான் எல்லாரையும் கலங்க வச்சிருச்சு. நூறு வருஷங்களா இருந்த இந்தத் தொங்கு பாலம், ரொம்ப பழுதடைஞ்சு போனதால பயன்பாட்டை நிறுத்திவெச்சாங்க. அஜந்தா ஒரேவாங்கிற நிறுவனத்துக்குப் புதுப் பிக்கும் பணியைக் கொடுத்திருந்தாங்க. இந்தப் பாலத்தோட வேலைகள் முடிஞ்சு, அக்டோபர் 26 அன்னிக்குதான் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிட்டிருக்காங்க. தீபாவளி விடுமுறைங் கிறதால புதுப்பிக்கப்பட்ட பாலத்தைப் பார்க் கறதுக்காக மக்கள் ஆர்வத்தோட வந்திருக் காங்க. பாலத்தோட தாங்குற சக்திக்கும் மேலா மக்களை அனுமதிச்சதுதான் பிரச்னை. பாலம் திடீர்னு அறுந்துவிழ, ஒருத்தர் மேல ஒருத்தர் ஆத்துக்குள்ள விழுந்ததுல நூற்றுக் கணக்கானவங்க அநியாயமா இறந்துட்டாங்க. ரொம்ப கஷ்டமாயிருக்கு...”

 கேத் ஐசக்
கேத் ஐசக்

‘`அதுமட்டுமில்ல... பால வேலையில நிறைய தவறுகள் நடந்திருக்கறதா சொல் றாங்க. துரு பிடிச்ச கம்பிகளை மாத்தாம மேல பெயின்ட் அடிச்சி ஏமாத்தியிருக்கிறதா, குஜராத் மாநில அரசாங்கமே கான்ட்ராக்டர் மேல குற்றம்சாட்டியிருக்கு. ‘இந்த விபத்து கடவுளின் செயல்’னு அந்த கான்ட்ராக்ட் நிறுவன மேலாளர் கோர்ட்ல சொல்லியிருக் கிறதுதான் பெருங்கொடுமை.’’

“அதிர்ச்சியா இருக்கு. இதே மாதிரிதான் தென்கொரியாவுல ஒரு விபத்து நடந்து, நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துட்டாங்க.”

“என்ன சொல்றே வினு?”

“இட்டாவூன் மாவட்டத்துல சோலின்ங்கிற பகுதி இரவு வாழ்க்கைக்குப் புகழ்பெற்றது. இங்கே கோவிட்னால ரெண்டு வருஷம் கழிச்சு ஹாலோவீன் விழா கொண்டாடற துக்கு அனுமதி கொடுத்திருந்தாங்க. வெளி நாடுகள்ல இருந்து மக்கள் வந்தாங்க. ஒரு குறுகலான தெருவுல மக்கள் அளவுக்கு அதிகமா குவிஞ்சாங்க. நெருக்கடியில மூச்சு விட முடியாம முண்டியடிச்சதுல முன்னால இருந்தவங்க மேல விழுந்து, அவங்களை மிதிச்சு ஓடினதால, அநியாயமா இறந்துட் டாங்க. இதுல வெளிநாட்டுல இருந்து வந்த 19 பேர் இறந்திருக்காங்க...”

“இந்த விபத்தை அரசு நிர்வாகம் தவிர்த் திருக்க முடியும்ல வினு...”

“அலட்சியப்படுத்தாம, கொஞ்சம் யோசனையோட செயல்பட்டிருந்தா தடுத் திருக்க முடியும் வித்யாக்கா. கவனக்குறைவு தான் இந்த விபத்துக்கு காரணம்.”

சற்று நேர மெளனத்துக்குப் பிறகு, அரட்டை யைத் தொடர்ந்தாள் விமல். “உத்தரப் பிரதேசத்துல நெகிழ்ச்சியான அழகான சம்பவம் ஒண்ணு நடந்திருக்கு. அஃப்சர் அலிக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்துச்சு. அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தினாதான் உயிர் பிழைக்க முடியும். அங்கூர் நெஹ்ரா வுக்கும் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டி யிருந்தது. அவங்கவங்க குடும்பத்தாரோட சிறுநீரகங்கள் சேரலை. அதனால மருத்து வர்கள் ரெண்டு குடும்பங்களையும் பேச வெச்சாங்க. அங்கூரின் அம்மா அனிதாவோட சிறுநீரகம் அஃப்சர் அலிக்குப் பொருந்துச்சு. அஃப்சர் அலியோட அண்ணன் அக்பர் அலி யோட சிறுநீரகம் அங்கூருக்குப் பொருந்துச்சு. உடனே ரெண்டு குடும்பங்களும் சட்டுன்னு உறுப்புகளை தானம் செய்யுற முடிவை எடுத் துட்டாங்க. ஆபரேஷன் முடிஞ்சு ஒரு மாசம் ஆகிருச்சு. இப்போ ரெண்டு குடும்பங்களும் நிம்மதியா, சந்தோஷமா இருக்காங்க!”

“வாவ்... சூப்பர்! மக்கள் மதம் பத்தியெல்லாம் யோசிக்காம எவ்ளோ அன்பா இருக்காங்க” என்றாள் வினு.

“ஆமா. அனிதாவும் இதைத்தான் சொல் றாங்க. எங்க ரெண்டு குடும்பங்களும் ஒரு நொடிகூட யோசிக்காம உறுப்பு தானம் செய் யணும்னு மனப்பூர்வமா முடிவெடுத்தோம். ஆனா, அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க ஏன் முஸ்லிமுக்குக் கொடுக்கறேன்னு கேட்டாங்க. அதே மாதிரி அவங்ககிட்டேயும் ஏன் இந்துக் குக் கொடுக்கறேன்னு கேட்டாங்க. நாங்க மனுஷங்களுக்கு கொடுக்கறோம்னு மட்டும் தான் நினைச்சோம். இந்து, முஸ்லிம் ஒற்றுமை இல்லங்கிறதெல்லாம் பணம் படைச்சவங்களும் அரசியல்வாதிகளும் விளையாடற விளை யாட்டு. சாதாரண மக்கள் ஒற்றுமையாதான் இருக்கோம்னு சொல்றாங்க. ‘எங்க ரெண்டு குடும்பங்களையும் பார்த்து ஆச்சர்யப்பட என்ன இருக்கு? சமீபகாலமாதான் இந்துவை யும் முஸ்லிமையும் எதிர்எதிரா நிறுத்திப் பேசிட்டு இருக்காங்க. ஆனா, சாதாரண மக்கள் இப்பவும் ஒற்றுமையாதான் இருக் கோம். என்னால அவங்க குடும்பத்தைப் பார்க்காம இருக்க முடியாது. அவங்களால எங்க குடும்பத்தைப் பார்க்காம இருக்க முடியாது. ரத்த பந்தம் ஏற்பட்டிருச்சு’ன்னு சொல்றார் அஃப்சர் அலி’’ என்றாள் விமல்.

“செம்ம... இதையெல்லாம் பார்த்தாவது அரசியல்வாதிகள் திருந்தணும்.”

“ம்... கரெக்ட்தான் வினு. ஒரு முக்கியமான விஷயம், இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கற சம்பளத்தைக் கொடுக்கப் போறதா பிசிசிஐ அறிவிச்சிருக்கு. இது மூலம் சம்பள விஷயத்துல பாலின பாகுபாடு களையப்படும்னும் சொல் லிருக்கு. நல்ல ஆரம்பம்.”

“ஆமா விமல்... நிஜமாவே ஆரோக்கியமான விஷயம். ஆனா, ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் வருஷம் முழுக்க நடக்கும். பெண்கள் கிரிக்கெட் போட்டிகள் குறைவா தான் நடக்கும். வருமானம்னு பார்த்தா வீராங்கனைகளுக்குக் குறைவாதான் கிடைக் கும். ஆனாலும், இந்த முடிவு நல்லது” வினு நிறுத்தவும்... ``இன்னொரு விஷயம் கேள்விப் பட்டீங்களா...’' என ஆரம்பித்தார் வித்யா.

“இங்கிலாந்தைச் சேர்ந்த கேத் ஐசக், இணையத்துல வெளிவர்ற ஆபாச வீடியோக் களுக்கு எதிரான நடவடிக்கைகள்ல தீவிரமாக இருந்தாங்க. ஒருநாள் ட்விட்டரைப் பார்த்துக் கிட்டிருந்தப்ப, ஒரு ஆபாச வீடியோவுல கேத்தின் முகமே வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைஞ்சிட்டாங்க. அந்த வீடியோவுக்குக் கீழே அவங்க ஆபீஸ், வீட் டோட முகவரியும் கொடுக்கப்பட்டிருந்துச்சு. ஆபாச வீடியோக்களுக்கு எதிரா கேத் செய்யற நடவடிக்கைகளால கோபப்பட்ட எவனோ ஒருத்தன்தான் இந்த வேலையை செஞ்சிருக்கான்ங்கிறது புரிஞ்சுருச்சு. ஆனா, அந்த வீடியோவை நீக்க ரொம்ப போராட வேண்டியிருந்துச்சு. `ஒரு செயற்பாட்டாளரா இருந்த என்னாலேயே இந்த விஷயத்தைச் சாதாரணமா எடுத்துக்க முடியல. சாதாரணமா னவங்க எப்படிப்பட்ட மனநிலையில இருப் பாங்க'ன்னு கேட்கறாங்க கேத்.”

“ரொம்ப மோசமான விஷயம் வித் யாக்கா...”- கோபமாகச் சொன்னாள் விமல்.

“ரெண்டு பேரும் என்ன படம் பார்த்தீங்க?”

“நான் நெட்ஃப்ளிக்ஸ்ல As the Crow Flies-னு துருக்கி வெப் சீரிஸ் பார்த்தேன் வித்யாக்கா. லேல் கிரண் டிவி வட்டாரத்துல செம பாப்புலர். அவங்க பிரபலத்துக்குப் பின்னால பல ஆண்டு உழைப்பு இருக்கு. அஸ்லிங்கிற டீன் ஏஜ் பொண்ணுக்கு சின்ன வயசுலயிருந்து லேல் மேல கிரேஸ். ஆனா, வளர வளர அந்த கிரேஸ் வெறுப்பா மாறுது. எப்படியாவது அந்தப் புகழைக் கெடுக்கணும்னும், தான் அந்த இடத்துக்கு வரணும்னும் நினைக் கிறாங்க. இதுக்காக அதே சேனல் ஆபீஸ்ல வேலைக்குச் சேர்ந்து, பல விஷயங்களைச் செய்யறாங்க. இதனால லேல் வாழ்க்கையில புயல் வீசுது. கடைசியில லேலை கொலை செய்யும் அளவுக்கு அஸ்லி போயிடறாங்க. நிர்வாகம் லேல் இடத்துக்கு அஸ்லியைக் கொண்டு வர நினைக்குது. லேல் இறுதியா செய்திகளை வாசிக்கும்போது, ஒரு போலி செய்தியைக் கொடுத்துடறாங்க குழுவினர். அதைப் படிச்ச பிறகு அது போலின்னு தெரிய வருது. உடனே மன்னிப்பு கேட்டுட்டு, என் நண்பர்கள் இப்படி விளையாடிட்டாங்க. இனி நான் வேலையைத் தொடர மாட்டேன்னு கிளம்பிட றாங்க. மக்கள்கிட்ட லேல் இன்னும் உயரமான இடத்துக்குப் போயிடறாங்க. இப்படிப் போகுது கதை. எட்டு எபிசோட்ஸ் தான். லேல் கேரக்டர்ல பிரபல நடிகை பிர்ஸ் அக்லேயும் அவங்க நண்பரா இப்ராஹிமும் நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே வேற ஒரு வெப் சீரிஸ்ல ஜோடியா நடிச்சு, புகழ்பெற்றவங்க. நேரம் இருந்தா பாருங்க.”

“கண்டிப்பா பார்க்கறேன். இந்தாங்க பக்கோடா கொண்டு போங்க” என்று ஆளுக்கு ஒரு டப்பா கொடுத்தார் வித்யா.

இருவரும் டப்பாக்களை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

வினு விமல் வித்யா: இரண்டு சமூகங்கள்... இரண்டு சிறுநீரகங்கள்... ஒரு பந்தம்!

வினு தரும் வித்தியாசமான தகவல்

ஐஸ்க்ரீம் மேக்கர் சாதனத் தைக் கண்டுபிடித்தது நான்சி ஜான்சன் என்ற அமெரிக்கப் பெண்மணி. ஆண்டு: 1843. இந்தச் சாதனம் ஐஸ்க்ரீம் தயாரிக்க எடுக்கும் நேரத்தை வெகுவாகக் குறைத்தது. கையால் செய் வதைவிட வேகமாகவும் எளிதாகவும் தயாரிக்கும் வழியை யோசித்து இந்த ஐஸ்க்ரீம் மேக்கரை உருவாக்கினார் நான்சி.